தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 21 juni 2014

மகிந்தவைச் சந்திக்க UN முக்கியஸ்தர்களுக்கு அனுமதி மறுப்பு! ஆரம்பமானது முறுகல்

திருமலை முஸ்லீம் வர்தக நிலையம்மீது தாக்குதல்

இன்று இரவு 10.20 அளவில் இந்த அசம்பாவிதம் நடைபெற்றுள்ளது. மதுபோதையில் வந்த சில பொரும்பான்மையினத்தவர்கள் குறித்தவர்த்தக நிலையத்தை தாக்கியுள்ளனர்.


மதுபோதையில் வந்த பொரும்பான்மையினத்தவர்கள் சிலர் முஸ்லீம் உணவகத்திற்குள் நுழைந்து முரண்பாடுகளை தோற்றுவித்து வர்த்தக நிலையத்தில் உள்ள பொருட்களுக்கு சேதம் விளைவித்தனர்.Aluthgama-Attacks
http://www.jvpnews.com/srilanka/74030.html

மஹிந்தவிற்கு 38 ஆலோசகர்கள்: 4,14,00824.81 ரூபா செலவு

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாவின் போது ஜனநாயக தேசியக் கூட்டணி எம்.பி.அநுரகுமார திஸாநாயக்க எழுப்பிய ஜனாதிபதியின் ஆலோசகர்கள் தொடர்பான வினாவுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார் அமைச்சர் தினேஸ் குணவர்த்தன.
http://www.jvpnews.com/srilanka/74035.html

மகிந்தவைச் சந்திக்க UN முக்கியஸ்தர்களுக்கு அனுமதி மறுப்பு! ஆரம்பமானது முறுகல்

ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச்செயலர் ஒஸ்கார் பெர்னான்டஸ் தரங்கோ, மற்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின், தெற்காசியாவுக்கான பிரதி உதவிச்செயலர் அதுல் கெசாப் ஆகியோர், சிறிலங்காவில் உயர்மட்டப் பேச்சுக்களை நடத்தி வருகின்றனர்.
இவர்கள் இருவரும் தனித்தனியாகவே சிறிலங்கா பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச்செயலர், தரங்கோ, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை சந்தித்துப் பேசுவதற்கு, விருப்பம் வெளியிட்டுள்ள போதிலும், இதுவரை அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், அவர், சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், மற்றுமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்துப் பேசுவதற்கு அனுமதி கிடைத்துள்ளது.
ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் தரங்கோ யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டு வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் மாகாண ஆளுனர் சந்திரசிறி ஆகியோரைச் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்றுக் காலை தொடக்கம் அவர் சந்திப்புகளை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியிட்டுள்ள ஐ.நா வட்டாரங்கள், அதுபற்றிய விபரங்களை எதையும் வெளியிடவில்லை.
http://www.jvpnews.com/srilanka/74039.html

Geen opmerkingen:

Een reactie posten