[ சனிக்கிழமை, 21 யூன் 2014, 02:55.53 AM GMT ]
இதன்படி 2009 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த 573, 651 உள்ளக இடம்பெயர்ந்தோர் மிகவிரைவில் மீள்குடியேற்றப்பட்டதாக உயர்ஸ்தானிகரம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை தமது அமைப்பு வெளிநாடுகளில் இருந்த இலங்கை அகதிகளில் 11400பேர் சுயமாக நாடு திரும்புவதற்கு உதவியளித்ததாக உயர்ஸ்தானிகரம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் ஏனைய நாடுகளில் அகதி அந்தஸ்து கோரும் பட்டியலில் இலங்கை 1547க்கு 291 என்ற குறைந்த எண்ணிக்கை அளவை கொண்டுள்ளது.
அத்துடன் அமைப்பின் அறிக்கையில் முன்னர் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கை ஒன்றின்படி நாடற்றவர்களாக இருந்த இந்திய வம்வாவளிகளுக்கு இலங்கை பிரஜாவுரிமை வழங்கப்பட்டமையையும் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyGRVLagqz.html
இலங்கையில் தாலிபான்களை அமெரிக்கா ஊக்குவிக்கிறது: சம்பிக்க குற்றச்சாட்டு
[ சனிக்கிழமை, 21 யூன் 2014, 03:23.26 AM GMT ]
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், முன்னதாக தாலிபான்களை அமெரிக்கா ஊக்குவித்தது.
இது பின்னர் அமெரிக்காவுக்கே ஆபத்தாக அமைந்தது. இதேபோன்று தற்போது அமெரிக்காவுக்கான இலங்கை தூதர் மிக்செய்ல் சிசன் இலங்கையில் தாலிபான்களை ஊக்குவித்து வருகிறார்.
இது இலங்கைக்கு மாத்திரம் அல்ல, முழு உலகத்துக்கும் ஆபத்தாக அமையப் போகிறது என்று ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் செய்த அதே தவறையே அமெரிக்கா, அளுத்கமை விடயத்தில் செய்வதாக அவர் குறிப்பிட்டார்.
அளுத்கமையில் உள்ள முஸ்லிம் குழுக்களை கொண்டு மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்துக்கு எதிரான நடவடிக்கைகளை அமெரிக்கா ஊக்குவிக்க முனைகிறது.
இந்தநிலையில் இலங்கையின் படையினர் அளுத்கமையில் ஆயிரக்கணக்கான முஸ்லிம் இளைஞர்களை ஒன்றுக்கூட அனுமதித்தனர்.
எனினும் அங்கு சிங்களவர்கள் பேரணியை நடத்த அனுமதிக்கவில்லை என்று ரணவக்க குற்றம் சுமத்தினார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRVLagq0.html
ஹக்கீம் அரசிலிருந்து அவராக வெளியேறினால் நல்லது! இல்லையேல் நாம் வெளியேற்றுவோம்!- அமைச்சர் சம்பிக்க
[ சனிக்கிழமை, 21 யூன் 2014, 05:21.02 AM GMT ]
ஹக்கீம் வெட்கம் இல்லாதவர். அவரை யாரும் அரசாங்கத்தில் இருக்க வேண்டும் என வலியுறுத்தவில்லை. அரசாங்கத்தில் இருந்து அவராக வெளியேறினால் அவருக்கே சிறந்தது. இல்லையேல் நாம் வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்படலாம் என ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
நாட்டில் சிங்களவர்களுக்கு எதிரான மிகப்பெரிய கிளர்ச்சி விரைவில் உருவாக்கப்படவுள்ளது. ஜிஹாத் தீவிரவாதத்திற்கு எதிராக போராட சிங்களவர்கள் தயாராகவுள்ளனர். நாட்டில் தமிழ்த் தீவிரவாதிகள் நல்லதொரு பாடத்தினை கற்றுக்கொண்டுள்ளனர். முஸ்லிம்களும் எம்மிடம் பாடம் கற்றுக்கொள்ள தயாராகின்றனர். அவர்களுக்கும் பாடம் கற்பித்துக்கொடுக்க சிங்களவர்கள் தயாராகவே உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
ஹர்த்தாலை அனுஷ்டித்து முஸ்லிம்களின் பலத்தைக் காட்டுவதால் சிங்களவர்கள் அஞ்சப் போவதில்லை. முஸ்லிம்கள் சட்டத்தை கையில் எடுத்தால் சிங்களவர்களும் சட்டத்தை கையில் எடுக்க வேண்டும். முஸ்லிம்களுக்கு அடங்கிப்போக நாம் கோழைகள் இல்லை என்றும் அவர் கூறினார்.
ஜாதிக ஹெல உறுமய கட்சியினால் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின் போதே அமைச்சர் சம்பிக்க ரணவக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
நாட்டில் சிங்கள மக்கள் பாதிக்கப்பட்டமைக்கும் அவர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டமைக்கும் எவரும் குரல் கொடுக்கவில்லை. ஆனால், முஸ்லிம்கள் தாக்கப்பட்டதாக குறிப்பிட்டு ஊடகங்களும் சர்வதேசமும் அலறிக் கொண்டிருக்கின்றது.
அளுத்கமவில் போயா தினத்தன்று பொது பலசேனா அமைப்பினர் கலகத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்துகின்றனர். இது பொது பலசேனா ஏற்பாடு செய்த கூட்டமில்லை. அனைத்து பௌத்த அமைப்புகளும் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த பொசன் தின பூசை வழிபாடு. இதில் பொது பலசேனா அமைப்பு கலந்து கொண்டமைக்காக அவர்களை குற்றம் சுமத்துவது எவ்விதத்திலும் நியாயமில்லை.
கடந்த இரண்டு கிழமைக்கு முன்னர் முஸ்லிம்களால் தாக்கப்பட்ட பௌத்த மதகுரு தொடர்பில் அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையிலேயே இதில் பலர் கலந்து கொண்டிருந்தனர். எல்லாரும் அளுத்கம சம்பவம் தொடர்பில் பேசுகின்றனர்.
ஆனால், அளுத்கமவில் இருந்து இரண்டு கிலோ மீற்றர் தூரத்தில் தர்கா நகரில் மூவாயிரத்திற்கும் அதிகமான முஸ்லிம் இனவாதிகள் ஆயுதங்களுடன் சிங்களவர்களைத் தாக்கியுள்ளனர். வீடுகளையும் கடைகளையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இது எவரது பார்வையிலும் படவில்லை. உண்மையிலேயே பிரச்சினை ஏற்பட்டது தர்கா நகரிலேயே. முஸ்லிம் இனவாதிகள் பௌத்தர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதன்போது பொலிஸார் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
முஸ்லிம்கள் செய்த தவறுகளை மறந்து சிங்கள மக்கள் மீது அனைத்து பழியையும் சுமத்திவிட்டு இன்று இவர்கள் அப்பாவிகள் போல் நடிக்கின்றனர். தம்மை நியாயப்படுத்த முயற்சிக்கின்றனர். உண்மையிலேயே இந்தப் பிரச்சினை ஏற்பட முஸ்லிம் மதவாதிகளே காரணம்.
முஸ்லிம்களுக்கு நாம் அஞ்சமாட்டோம். இன்று ஹர்த்தாலை அனுஷ்டித்து முஸ்லிம்களின் பலத்தை நிரூபிப்பதன் மூலம் சிங்கள மக்களை அச்சமடையச் செய்யலாம் என நினைக்கின்றனர். சிங்கள மக்கள் எதற்கும் அஞ்சப் போவதில்லை. பள்ளிவாசல்களிலும் வீடுகளிலும் முஸ்லிம் மதவாதத்தினையும் தீவிரவாதத்தினையும் பரப்பி மக்களை சிங்களவர்களுக்கு எதிராக செயற்பட வைக்கவே ஜிஹாத் வாதிகள் முயற்சிக்கின்றனர். இதற்கு ஒரு போதும் நாம் அஞ்சப்போவதில்லை.
இலங்கைக்குள் அதிகளவிலான முஸ்லிம் இனவாத தீவிரவாதிகள் உருவாகிவிட்டார்கள். இன்று முகப்புத்தகத்தில் வெளிப்படையாகவே சிங்களவர்களுக்கு எதிரான கருத்துகளை பரப்பி தமது தீவிரவாத குழுக்களின் எண்ணிக்கையினை பரப்புகின்றனர். இன்னும் 15 வருடத்தில் சிங்கள இனம் அழிக்கப்படும், தலைகளை கொய்து எறிவோம் என முஸ்லிம் இனவாதிகள் எழுதுகின்றனர்.
இது ஜிஹாத் தீவிரவாதம் இல்லையா? சிங்கள நாட்டில் சிங்களவர்களை அழிக்க நினைப்பது முஸ்லிம் தீவிரவாதம் இல்லையா? இதை ஏன் எந்தவொரு அமைச்சரும் கண்டு கொள்ளவில்லை. எதிர்க்கட்சி முஸ்லிம் தீவிரவாதிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கின்றனர்.
இன்று ரணில் விக்கிரமசிங்க தமிழ், முஸ்லிம் வாக்குகளை நம்பி அவர்களின் தீவிரவாதத்தை பாதுகாத்து சர்வதேச அளவில் பேசுகின்றார். ஆனால், சிங்கள வாக்குகள் இன்றி எதிர்க்கட்சி எதையும் செய்ய முடியாது. அதேபோல் இன்று நாட்டில் பிரச்சினை உள்ளது. அது நாட்டில் முஸ்லிம் தீவிரவாதிகள் அமைதியை கெடுக்கின்றமை. முஸ்லிம்களின் கொள்கையும் உடையும் 1991 ல்தான் இங்கு பரப்பப்பட்டது. இன்று முஸ்லிம்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டு தீவிரவாத கொள்கை பரப்பப்பட்டுள்ளது.
அரசாங்கம் சட்டத்தை இயற்றியுள்ளது. அனைத்து மக்களுக்காகவுமே. சிங்கள, தமிழ் மக்களுக்கு ஒரு சட்டமும் முஸ்லிம்களுக்கு தனிச் சட்டமும் செயற்பட முடியாது. காத்தான்குடி, தர்காநகர், பேருவளை, மாவனெல்லயில் முஸ்லிம்கள் தலைக்கவசம் அணிந்து மோட்டார் வாகனம் செலுத்துவதில்லை. முஸ்லிம்கள் ஷரிஆ சட்டப்படியே செயற்படுகின்றனர்.
அரசாங்கம் சட்டத்தை இயற்றியுள்ளது. அனைத்து மக்களுக்காகவுமே. சிங்கள, தமிழ் மக்களுக்கு ஒரு சட்டமும் முஸ்லிம்களுக்கு தனிச் சட்டமும் செயற்பட முடியாது. காத்தான்குடி, தர்காநகர், பேருவளை, மாவனெல்லயில் முஸ்லிம்கள் தலைக்கவசம் அணிந்து மோட்டார் வாகனம் செலுத்துவதில்லை. முஸ்லிம்கள் ஷரிஆ சட்டப்படியே செயற்படுகின்றனர்.
தமது மதத்தையும் தீவிரவாத கொள்கையையும் பரப்ப முஸ்லிம்கள் சட்டத்தை கையில் எடுத்தால் எமது நாட்டையும் பௌத்த சிங்கள மக்களையும் பாதுகாக்க சிங்கள மக்களும் சட்டத்தை கையில் எடுக்க வேண்டும். இன்று நாட்டில் தலிபான் நங்கூரம் போடப்பட்டு வருகின்றது. சிங்கள, தமிழ் மக்களை இலக்கு வைத்து தலிபான் தீவிரவாதம் செயற்படுகின்றது.
ஹக்கீம் வெட்கம் இல்லாதவர். இதற்கு முஸ்லிம் அமைப்புகளும் அமைச்சர்களும் துணை போயுள்ளனர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு தீவிரவாதக் கட்சி. இன்று ஹக்கீம் அரசாங்கத்தில் இருப்பது வெட்கமாக உள்ளதெனக் கூறுகின்றார். ஆனால், அவரை யாரும் அரசாங்கத்தில் இருக்க வேண்டும் என வலியுறுத்தவில்லை. உண்மையிலேயே ஹக்கீம் வெட்கம் இல்லாதவர்.
அன்று முஸ்லிம்களை விடுதலைப் புலிகள் விரட்டியபோது பிரபாகரனுடன் ஒப்பந்தம் செய்தது வெட்கப்படும் செயல் இல்லையா? இன்று அமைச்சுப் பதவியினை வகித்துக்கொண்டு சர்வதேச விசாரணையினைக் கூறுவது வெட்கமாக இல்லையா? அரசாங்கத்தில் இருந்து அவராக வெளியேறினால் அவருக்கே சிறந்தது. இல்லையேல் நாம் வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்படலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/
Geen opmerkingen:
Een reactie posten