ஜனாதிபதி - முஸ்லிம் எம்.பிக்கள் இன்று மாலை சந்திப்பு! வன்முறைகள் குறித்து விசாரிக்க ஜனாதிபதி குழு நியமனம்!
[ சனிக்கிழமை, 21 யூன் 2014, 08:32.43 AM GMT ]
அரச தரப்பு முஸ்லிம் எம்.பிக்கள் விடுத்த வேண்டுகோளை அடுத்தே இந்த சந்திப்பு நடைபெறவிருப்பதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
இந்த சந்திப்பு பதுளையில் இன்று மாலை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி விசேட விசாரணைக்குழுவை நியமிக்க உள்ளார்
அளுத்கம மற்றும் பேருவளை உட்பட சில பகுதிகளில் அண்மையில் ஏற்பட்ட சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்த உயர்மட்ட குழுவொன்று நியமிக்கப்படும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அளுத்கம மற்றும் பேருவளை பிரதேசங்களில் அண்மையில் ஏற்பட்ட இரு பிரிவினருக்கு இடையிலான மோதல்கள் காரணமாக உயிர் சேதங்கள் ஏற்பட்டதுடன் சொத்துக்களும் அழிக்கப்பட்டன.
மோதலை தடுக்க பொலிஸார் பிரதேசத்தில் ஊரடங்குச் சட்டத்தை பிறப்பித்திருந்தனர்.
இந்த நிலையில், மேற்படி சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்த ஜனாதிபதி இந்த உயர் மட்டக் குழுவை நியமிக்க உள்ளார்.
அண்மைக்கால பிரச்சினைகளை ஆராய உயர்மட்டக்குழு. ஜனாதிபதி டுவிட்டரில் அறிவிப்பு
நாட்டில் அண்மைக்காலத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் தொடர்பில் விசாரணை செய்ய உயர்மட்ட குழு ஒன்றை அமைக்கப்போவதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தமது டுவிட்டர் தளத்தில் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
பாணந்துறையில் நோலிமிட் நிறுவனம் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவத்தின் பின்னரே ஜனாதிபதி இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
ஜனாதிபதியின் இந்த டுவிட்டர் செய்தி மூன்று மொழிகளிலும் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த உயர்மட்டக்குழுவில் இடம்பெறுவோர் விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை
ஏற்கனவே மதங்களுக்கு இடையிலான முறுகல்களை கையாள பொலிஸ் குழு ஒன்றை அமைக்கப்பட்ட போதும் மதத்தலங்கள் மீது தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன.
குறித்த பொலிஸ் குழுவால் அவற்றை தடுக்க முடியவில்லை என்று குறைகூறப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyGRVLags4.html
பேஸ்புக் கணக்கு தடை செய்யப்பட்டமை கவலையை ஏற்படுத்தியுள்ளது!- ஞானசார தேரர்
[ சனிக்கிழமை, 21 யூன் 2014, 08:39.00 AM GMT ]
பாரிய ஆபத்துக்கு மத்தியிலேயே தாம் இதனை மேற்கொண்டு வருவதாகவும், பொதுபல சேனாவின் பேஸ்புக் வலைத்தள கணக்கு தடைசெய்யப்பட்டதால் மிகுந்த கவலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பொதுபல சேனா அமைப்பிற்கு பின்னால் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இருப்பதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை நிராகரிப்பதாகவும் ஞானசார தேரர் கூறியுள்ளார்.
அதேவேளை முஸ்லிம் அரசியல் தலைவர்கள் பகிரங்க விவாதத்திற்கு வந்து பிரச்சினைகளை தீர்க்க முன்வர வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRVLags5.html
முஸ்லிம் நாடுகள் இலங்கைக்கு எச்சரிக்கை
[ சனிக்கிழமை, 21 யூன் 2014, 09:02.56 AM GMT ]
முஸ்லிம் எதிர்ப்பு மோதல்களை ஒரு முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என இந்த நாடுகள் அரசாங்கத்தை கடுமையாக வலியுறுத்தியுள்ளன.
கொழும்பில் உள்ள பங்களாதேஷ், ஈரான், ஈராக், எகிப்து, இந்தோனேசியா, குவைத், மலேசியா, மாலைதீவு, நைஜீரியா, பாகிஸ்தான், பாலஸ்தீனம், துருக்கி, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு ராஜ்ஜியம், கட்டார் ஆகிய நாடுகளின் தூதரகங்கள் இந்த வலியுறுத்தலை மேற்கொண்டுள்ளன.
இந்த நாடுகளில் பலவற்றில் இலங்கைத் தொழிலாளர்கள் தொழில் புரிந்து வருவதால், அந்நாடுகள் வீசா கட்டுப்பாடுகளில் திருத்தங்களை மேற்கொண்டால், அது அங்கு பணியாற்றும் இலங்கை தொழிலாளர்களை பாதிக்கும்.
எவ்வாறாயினும், முஸ்லிம் நாடுகள் வீசா கட்டுப்பாடுகளில் திருத்தங்களை செய்யப் போவதாக விடுக்கப்பட்டதாக கூறப்படும் எச்சரிக்கை பற்றி தமக்கு தெரியவில்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளில் சுமார் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் தொழில் புரிந்து வருவதுடன், அதன் மூலம் நாட்டுக்கு பெருந் தொகையான அந்நிய செலாவணி கிடைத்து வருகிறது.
மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு வெளியில் உள்ள முஸ்லிம் நாடுகளிலும் கணிசமான இலங்கையர்கள் தொழில் புரிந்து வருகின்றனர்.
மத்திய கிழக்கு நாடுகளில் இலங்கை தொழிலாளர்களுக்கு வழங்கும் வீசா கட்டுப்பாடுகளில் திருத்தங்களை மேற்கொண்டால், அது இலங்கையின் பொருளாதாரத்தின் மீது கடும் தாக்கங்களை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.
எவ்வாறாயினும் இலங்கையில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக நடந்து வரும் தாக்குதல்களை நிறுத்த அரசாங்கம் இதுவரை குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுக்கவில்லை.
கொழும்பில் உள்ள முஸ்லிம் நாடுகளில் தூதரகங்கள் இலங்கை அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்து மறுநாளில் பாணந்துறையில் உள்ள நோ லிமிட் நிறுவனம் தாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyGRVLags6.html
ஆஸி.யில் மற்றுமொரு தமிழர் தற்கொலை முயற்சி!– தாயகம் திரும்பும் அகதிகளுக்கு பணம் வழங்கப்படுவது வழமை!
[ சனிக்கிழமை, 21 யூன் 2014, 09:19.01 AM GMT ]
இரண்டு வருடங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவை அடைந்த 40 வயதுடைய இலங்கையர், தற்காலிக விசாவில் தங்கியிருந்த சமயம் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தமிழ் அகதிகள் பேரவை அறிவித்துள்ளது.
இந்த நபர் வெள்ளிக்கிழமை இரவு மெல்பேர்ணின் கிழக்கில் அமைந்துள்ள நோபல் பார்க் பிரதேச வீடொன்றில் தமது உடலில் பெற்றோலை ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொள்ள முனைந்ததாகவும், குறித்த சம்பவத்தில் காயமடைந்து Dandenong மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
இவருடைய காலில் மாத்திரம் சிறுகாயங்கள் ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக, இவர் சனிக்கிழமை வைத்தியசாலையில் இருந்து வெளியேறக்கூடும் எனவும் தமிழ் அகதிகள் பேரவை அறிவித்துள்ளது.
தாம் இரவு எட்டு மணியளவில் குறித்த வீட்டுக்கு அழைக்கப்பட்டதாகவும், அங்கிருந்து ஒரு மனிதரை Dandenong வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாகவும் துணை மருத்துவ உத்தியோகத்தர்கள் அறிவித்துள்ளார்கள்.
இந்த சம்பவத்தின் பின்னணி தெளிவாகத் தெரியவில்லையென ஏபிசி அறிவித்துள்ளது.
குறித்த நபர் தமக்குத் தாமே தீ வைத்துக் கொள்ள முனைந்தார் என்பது ஊர்ஜிதம் செய்யப்பட்டால், இது இவ்வாண்டுக்குள் நிகழ்ந்த மூன்றாவது தற்கொலை முயற்சியாக இருக்கும்.
தாயகம் திரும்பும் அகதிகளுக்கு காசு வழங்கப்படுவது வழமை!– அரசாங்கம் கருத்து
தாயகம் திரும்பும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு பணம் செலுத்துதல் என்பது பத்து வருடங்களாக கடைப்பிடிக்கப்பட்ட நியம நடைமுறையென மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
Scott Morrison திரும்பிச் செல்லும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு பெருமளவு பணம் வழங்கப்பட்டதாக ஊடக அறிக்கைகள் வெளியான நிலையில், குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிவித்தார்.
மானுஸ் தீவிலும், நவுரு தீவிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள லெபனான் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் 10,000 டொலர்களை வழங்கியதாக குயசைகயஒ ஆநனயை நிறுவனம் அறிவித்திருந்தது.
திரும்பிச் செல்லும் ஈரானியர்களுக்கு 7,000 டொலர்களும், ஆப்கான் பிரஜைகளுக்கு 4,000 டொலர்களும் வழங்கப்படுவதாக ஊடக நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது.
இந்தத் தொகைகளை குடிவரவு அமைச்சரின் அலுவலகம் உறுதிப்படுத்தவில்லை. ஒவ்வொரு புகலிடக் கோரிக்கையாளருக்கும் எவ்வளவு தொகை வழங்கப்படுகிறது என்பது தனித்தனியாக தீர்மானிக்கப்படுகிறதென பேச்சாளர் தெரிவித்தார்.
கடந்த செப்ரெம்பர் மாதம் ழுpநசயவழைn ளுழஎநசநபைn டீழசனநசள என்ற வேலைத்திட்டம் அமுலுக்கு வந்த பின்னர்இ புகலிடக் கோரிக்கையாளர்கள் 238 பேர் சொந்த நாடுகளுக்குத் திரும்பியதாக அவர் கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRVLags7.html
Geen opmerkingen:
Een reactie posten