தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 21 juni 2014

ரிசானா நபீக்கின் பெற்றோருக்கு போலி காசோலையை வழங்கிய அமைச்சர்!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு உயிரிழந்த ரிசானா நபீக்கின் பெற்றோருக்கு அமைச்சர் ஒருவர் வழங்கிய காசோலை போலியானது என தெரியவந்துள்ளது.
அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் மூன்று லட்சம் ரூபா பெறுதியான காசோலை ஒன்றை வழங்கியதாகவும் அது போலியானது என ரிசானாவின் தந்தையான மொஹமட் சுல்தான் நபீக் தெரிவித்துள்ளார்.
அதேவேளை தமது மகளின் பெயரை பயன்படுத்தி சில நபர்கள் பணத்தை சம்பாதித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனை அவர்கள் நல்லெண்ணத்திலா அல்லது கெட்ட எண்ணத்திலா செய்கின்றனர் என்பதை தான் அறியவில்லை எனவும் விறகு வெட்டி விற்பனை செய்தே தான் குடும்பத்தை பராமரித்து வருவதாகவும் சுல்தான் நபீக் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRVLagty.html

Geen opmerkingen:

Een reactie posten