தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 21 juni 2014

கோத்தபாயவை படுகொலை செய்ய சூழ்ச்சி!!



தமிழகத்திற்கு அகதியாகச் சென்றுள்ள முல்லைத்தீவு குடும்பம்
[ சனிக்கிழமை, 21 யூன் 2014, 07:54.45 AM GMT ]
தமிழ்நாடு, தனுஷ்கோடி அரிச்சல் முனைக்கு முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த நான்கு பேர் படகுமூலம் அகதிகளாகச் சென்றடைந்துள்ளனர்.
முல்லைத்தீவு பகுதியை சேர்ந்த அந்தோணி குரூஸ் இவரது மனைவி செல்வி குரூஸ் மற்றும் இவர்களது குழந்தைகளான ரோமேரியா, ரியான்ச் ஆகிய நான்கு பேருமே தமிழகம் சென்றுள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டம் தனுஸ்கோடி பகுதியில் இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேர் படகு மூலம் இலங்கையில் இருந்து வந்ததாக அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடலோர காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து அங்கு விரைந்த கடலோர காவல்துறையினர் இலங்கையில் இருந்து வந்தவர்களை முகுந்தராயர் சத்திரம் காவல்துறை சோதனை சாவடிக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் போது,
தனது மனைவி செல்வி குரூஸ் கிட்னி பாதிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையில் தொழில் மற்றும் வேலை வாய்ப்பு கிடைக்க மிகவும் சிக்கலாக இருருக்கிறது. இதனால் மனைவி செல்வி குரூஸ்க்கு சிகிச்சை அளிக்க போதுமான பணம் கிடைக்கவில்லை.
எனது உறவினர் தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அகதிகள் முகாமில் இருக்கின்றனர். அவர்களின் உதவியுடன் இங்கு வந்த சிகிச்சை பெறலாம் என்பதால் தலைமன்னாரில் இருந்து 20 ஆயிரம் ரூபா பணம் கொடுத்து படகு மூலம் தனுஸ்கோடிக்கு வந்தோம்என்று அந்தோணி குரூஸ் தெரிவித்தார்.
இவர்களிடம் மத்திய, மாநில உளவுப்பிரிவு பொரிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.அத்துடன் கடலோர காவல்துறையினர் மண்டபம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmsyGRVLags0.html
மகிந்தவுக்கு புத்திசாலிகள் அவசியமில்லை - அனுரகுமார திஸாநாயக்க
[ சனிக்கிழமை, 21 யூன் 2014, 08:19.09 AM GMT ]
நாட்டின் பொருளாதாரத்தை கறுப்பு பொருளாதாரமாக மாற்றியுள்ள சூழ்நிலையில், இன்றைய அரசாங்கத்திற்கு கல்வி என்பது பொருளாதாரத்திற்கு தேவையான காரணியல்ல.
மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு புத்திசாலிகள் தேவையில்லை என ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு பொதுநூலக கேட்போர் கூடத்தில் நேற்று மாலை நடைபெற்ற தேசிய மாணவ வீரர்கள் தின நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,

நிதி மோசடி செய்தவர்கள் மற்றும் வேறு முறை கேடுகளில் சம்பந்தப்பட்ட நபர்களை தனது இணைப்புச் செயலாளர்களாகவும் சட்ட ஆலோசகர்களாகவும் நியமித்து கொள்ளும் ஜனாதிபதிக்கு புத்திசாலிகளால் எந்த பயனுமில்லை.

அரசாங்கம், கல்விக்கு ஒதுக்கும் நிதியை குறைத்து விட்டு அந்த நிதியை ஹொட்டல்களை நிர்மாணிக்கவும் அதிவேக வீதிகளை நிர்மாணிக்கவும் பயன்படுத்தி வருகிறது.

அரசாங்கத்தின் பிரதான பொருளாதார வழிமுறை சுற்றுலாத்துறையாகும்.
அரசாங்கத்தின் செயற்பாடுகளால் நாட்டின் கல்வித்துறை மேலும் நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. பெற்றோர்கள் ஆசிரியர்களுக்கு சம்பளத்தை வழங்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

கல்வி என்பது சிறப்புரிமைகளை பெற்ற வகுப்பினருக்கு மட்டுமே வரையறுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் காரணமாக தனியார் பல்கலைக்கழகங்களை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதனால் இலவச கல்வியை பாதுகாக்க போராட்டம் ஒன்றை ஆரம்பிக்க வேண்டியுள்ளது. மாணவர்கள் அமைப்புகள் அதனுடன் சம்பந்தப்பட்ட சகலரும் கல்விக்கான நிதி குறைப்புக்கு எதிராக வீதியில் இறங்க வேண்டும் எனவும் அனுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRVLags3.html
தோல்வி அச்சம்: உள்ளூராட்சித் தேர்தலை ஒரு வருடம் ஒத்திவைக்க அரசாங்கம் தீர்மானம்
[ சனிக்கிழமை, 21 யூன் 2014, 08:06.54 AM GMT ]
2015ம் ஆண்டு மார்ச் மாதம் நடத்தப்பட வேண்டிய உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த தென் மற்றும் மேல் மாகாண சபைத் தேர்தல்களில் அரசாங்கத்தின் வாக்குகளில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்பட்டதே இந்த தீர்மானத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.
அரசாங்கத்தின் வாக்கு வாக்கு வங்கியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில், உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை நடத்தினால் அதில் அரசாங்கம் வெற்றி பெறுவது சிரமமானது என்பதால், தேர்தலை ஒத்திவைக்குமாறு அரசாங்கத்தின் முக்கிஸ்தர்கள் யோசனை முன்வைத்துள்ளனர்.
எனினும் இந்த உண்மையை மூடி மறைப்பதற்காக அடுத்த வருட ஆரம்பத்தில் ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக தெரியவருகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyGRVLags2.html
கோத்தபாயவை படுகொலை செய்ய சூழ்ச்சி
[ சனிக்கிழமை, 21 யூன் 2014, 07:57.11 AM GMT ]
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை படுகொலை செய்ய சூழ்ச்சித் திட்டமொன்று தீட்டப்பட்டதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 
வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் புலி ஆதரவாளர்களினால் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாதாள உலகக் குழுவினரை பயன்படுத்தி கோத்தபாயவை படுகொலை செய்ய திட்டமிடப்பட்டிருந்ததாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
கடும்போக்கு அமைப்புக்களுடன் தொடர்புகளை பேணி வரும் பாதாள உலகக் குழு உறுப்பினர்களைக்கொண்டு இந்த படுகொலை முயற்சி முன்னெடுக்கப்படவிருந்தது.
மலேசியாவில் உள்ள புலிப் புலனாய்வு பிரிவு உறுப்பினர் ஒருவரே இந்த திட்டத்தை வகுத்துள்ளார்.
கொலை முயற்சியுடன் வெளிநாட்டு உளவுப் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது என பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாளைய தினம் பிரசுரமாக உள்ள சிங்கள வார இதழ் ஒன்றின் பிரதான செய்தியாக இந்தத் தகவல் வெளியிடப்பட உள்ளதாக சிங்கள இணையமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyGRVLags1.html

Geen opmerkingen:

Een reactie posten