தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 24 juni 2014

ஐ.நா. விசாரணையின் ஆலோசனை நிபுணராக பின்லாந்தின் முன்னாள் ஜனாதிபதியா?

அளுத்கமை மற்றும் பேருவளை தீப்பற்றியது பற்றவில்லை என்கிறார்: பிரிகேடியர் ருவன்

“இது சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் உள்ளிட்ட இன்னும் பல இனங்களை கொண்ட நாடு என்பதனை நாடாளுமன்ற வரபிரசாதங்களை கொண்டுள்ள சிலர் மறந்து செயற்படுகின்றனர். தங்களுடைய வரப்பிரசாதங்களை பயன்படுத்தி சிலர், நாட்டின் ஐக்கியத்திற்கு குந்தகம் விளைவிப்பதற்கு முயற்சிக்கின்றனர்.
இனங்களுக்கு இடையிலான அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலான செயற்பாடுகளை சிலர் முன்னெடுப்பதற்கும் முயற்சிக்கின்றனர்.
அளுத்கமை மற்றும் பேருவளை சம்பவத்திற்கு அடுத்து இந்நாடே தீபற்றி எரியும், இந்த சந்தர்ப்பத்தில் குழப்பிய குட்டையில் நாம் மீன் பிடித்து கொள்ளலாம் என்று சிலர் நினைத்தனர். எமது புலனாய்வு பிரிவினரின் செயற்பாட்டினால் இந்நாடே தீ பற்றி எரியவிருந்தமை தடுக்கப்பட்டுவிட்டது.
அளுத்கமை மற்றும் பேருவளை சம்பவத்தையடுத்து மேற்குல நாடுகளின் தூதுவராலயத்திலிருந்து, நடந்தது போதாதா என்று வினவப்பட்டுள்ளதாக புலனாய்வு பிரிவுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.



நாட்டை குழப்பி அதில் குளிர்காய்வதற்கு முயற்சிக்கின்ற இவ்வாறான தேசத் துரோகிகள் தொடர்பில் மக்கள் கவனமாகவும் அவதானமாகவும் இருக்க வேண்டும்” என்று அவர் மேலும் கூறினார்.Buddhist_mob_attacks_9Buddhist_mob_attacks_12140616225349-sri-lanka-aluthgama-2-horizontal-galleryOLYMPUS DIGITAL CAMERA140616225803-sri-lanka-aluthgama-9-horizontal-galleryColombo-Muslim-02Colombo-Muslim-04Colombo-Muslim-03Colombo-Muslim-06Colombo-Muslim-0517-srilankan-tamil-muslim1-600aluthgama_attacksAluthgama-13Aluthgama-14Aluthgama-08Aluthgama-07Aluthgama-10Aluthgama-11Aluthgama-05Aluthgama-06
http://www.jvpnews.com/srilanka/74390.html

குரோத பேச்சுகளுக்கு விரைவில் தடை அமைச்சர் வாசு

இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையிலான குரோத பேச்சுகளை இந்நாட்டில் தடைசெய்யும் நோக்கில் அமைச்சரவைப்பத்திரமொன்று விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளது.
தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒன்றிணைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவே இந்த அமைச்சரவைப்பத்திரத்தை தாக்கல் செய்யவுள்ளார்.
இந்த அமைச்சரவைப் பத்திரம், காழ்ப்புணர்வு பேச்சுகளுக்கு எதிரான தண்டனைக் கோவை சட்ட ஏற்பாடுகளை பொதுச்சட்டத்தின் பகுதியாக்கி, இன மோதல்களையும் அமைதியின்மையினையும் தடுப்பதற்கு முயல்கின்றது.
அச்சு, இலத்திரனியல் ஊடக நிறுவனங்கள் இச்சட்டத்தின் மூலம் தணிக்கைக்கு உள்ளாகலாம். சமுதாயங்களுக்கிடையே காழ்ப்புணர்வை தூண்டியமை நிரூபிக்கப்படின் மறியல் தண்டனை அல்லது தண்டம் இல்லையேல் இரண்டும் விதிக்கப்படலாம் என்றும் அமைச்சர் கூறினார்.
http://www.jvpnews.com/srilanka/74397.html

ஐ.நா. விசாரணையின் ஆலோசனை நிபுணராக பின்லாந்தின் முன்னாள் ஜனாதிபதியா?

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் நியமிக்கப்பட்டுள்ள விசாரணைக் குழுவிற்கு ஆலோசனை வழங்கும் பிரத்தியேக நிபுணராக பின்லாந்தின் முன்னாள் ஜனாதிபதி மார்ட்டி அத்திசாரி நியமிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், இந்த குழுவிற்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு இரண்டு நிபுணர்களை நியமிக்க தீர்மானிக்கப்பட்டது. இவர்களில் ஒருவராக நியுசிலாந்தின் முன்னாள் ஆளுநர் நாயகம் டேம் சில்வியா கட்ரைட் நியமிக்கப்பட்டுள்ளார்.
இரண்டாவது வல்லுநராக ஆசியா அல்லது ஆபிரிக்க நாட்டைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க முயன்றதாகவும் எவரும் கிடைக்காத காரணத்தால் பின்லாந்து நாட்டின் முன்னாள் ஜனாதிபதியும் சாமாதானத்திற்கான நோபல் பரிசை பெற்றவருமான மார்ட்டி அத்திசாரி நியமிக்கப்படலாமென ஊகிக்கப்படுகின்றது. இவர் ஐக்கிய நாடுகளின் கொசோவாவிற்கான பிரதிநிதியாகவும் பணியாற்றியவராவார்.
இதேவேளை, விசாரணைக் குழுவினரின் உறுப்பினர் தெரிவு மற்றும் ஏனைய விபரங்கள் தொடர்பான அனைத்து விபரங்களும் இந்த வாரம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படலாமென எதிர்பார்க்கபடுகின்றது.
இதேசமயம், விசாரணை சபை முன் சாட்சியமளிக்க முன்வரும் தமிழ் மக்களிற்கு தகுந்த பாதுகாப்பு வசதிகளை வழங்கவேண்டுமென இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்கள் கொடுக்கப்படுமென ஐக்கிய நாடுகளின் அரசியல் விவகாரங்களிற்கான உதவி செயலாளர் ஒஸ்கர் பேர்னான்டஸ் தெரியப்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.
http://www.jvpnews.com/srilanka/74400.html

Geen opmerkingen:

Een reactie posten