தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 24 juni 2014

முஸ்லீம்களின் அழிவை முஸ்லிம் அமைச்சர்கள் வேடிக்கை பார்ப்பது வெட்கம்: JVP!

ஹக்கீமை துரத்தும் அஸ்கிரிய பீடம்!

தங்களுக்கு மாறாகச் செயற்பட்டுவரும் மேற்குலகுக்கு எதிராக முஸ்லிம் நாடுகள் பெரும் போராட்டம் நடத்தி வரும் இந்த வேளையில், அமைச்சர் ஹக்கீம் மேற்குலகினதும் ஐ.நாவினதும் பிரதிநிதிகளுக்குப் பின்னால் போய், தவறான குற்றச்சாட்டுக்களை அடுக்கி, அதற்கு சர்வதேச கவனிப்பை வழங்கி அதன் மூலம் அத்தரப்புக்களின் இலங்கை எதிரப்புப் போக்குக்கு ஒத்துழைத்து, உதவியும் வருகிறார்.
அளுத்கமவிலும் பேருவளையிலும் அண்மையில் இடம்பெற்ற துன்பியல் சம்பவங்களை தமது சந்தர்ப்பவாத அரசியலுக்கு அவர் வசமாகப் பயன்படுத்துகின்றார் என்றும் அஸ்கிரிய பீடம் தெரிவித்துள்ளது. “ஒரு பொறுப்புள்ள அரசியல்வாதியின் போக்கில் இருந்து அவர் விலகிச் செல்கின்றார். மேற்குலக சக்திகளின் எதிர்பார்ப்புக்களையும், விருப்புக்களையும் திருப்திப்படுத்தும் வகையில் அவர் செயற்படுகின்றார் என்பது தெளிவு.


நாட்டுக்கு அபகீர்த்தி மற்றும் அழிவை ஏற்படுத்தும் அவரது போக்கை முஸ்லிம்கள் கூட அங்கீகரிக்க மாட்டார்கள். அவர் நெருப்புக்கு மேலும் எரியூட்டுகின்றார்.” – என்று அஸ்கிரிய பீடத்தின் குழு உறுப்பினர் வண. மெதகம தம்மானந்த தேரர் சொன்னார். எல்லா சமூகத்தையும் சமமாக மதிக்க வேண்டிய ஹக்கீம், அதைவிடுத்து, தனது பக்கச்சார்பான போக்கு மூலம் பிற்போக்குச் சக்திகளின் பக்கம் சாய்கின்றார் என்றும் தேரர் குற்றம் சுமத்தினார்.KagimKagim-01
http://www.jvpnews.com/srilanka/74408.html

நிரந்தர நியமனத்தில் பாரபட்சம் கூரை மீதேறி பெண் போராட்டம்

இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கடந்த காலங்களில் டெங்கு நோய் வவுனியாவில் பரவாமலிப்பதற்காக நகரசபையினால் ஒப்பந்த அடிப்படையில் சுகாதார தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இதனையடுத்து 07 தொழிலாளர்களுக்கு ஒப்பந்த காலம் முடிவடைந்துவிட்டதாக நகரசபை செயலாளாரினால் அண்மையில் கடிதமொன்று வழங்கப்பட்டு சேவை முடிவுறுத்தப்பட்டிருந்தது. இந் நிலையில் கடந்த 9 ஆம் திகதி அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் ஆதரவுடன் ஒப்பந்தம் முடிவடைந்த 5 தொழிலாளாகள் போராட்டத்தில் ஈடுபட்டிருதனர்.
இந் நிலையில் தொழிற்சங்கம் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளின் பின்னர் போராட்டம் முடிவுறுத்தப்பட்டு அதிகாரிகளின் முடிவுகளுக்காக காத்திருப்பதாக அச் சங்கத்தின் வவுனியா இணைப்பாளர் எஸ். சித்திரன் தெரிவித்திருந்தார்.
இந் நிலையில் இன்று காலை தொழிற்சங்கம் மற்றும் நகரசபையினருக்கு எவ்வித அறிவித்தலும் வழங்கத நிலையில் இரு பெண்கள் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக தொழிற்சங்கத்தின் இணைப்பாளர் எஸ். சித்திரனுடன் தொடுர்பு கொண்டு கெட்டபோது, எமது தொழிற்சங்கம் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இந் நிலையில் இவ் இரு பெண்களும் எமக்கு எவ்வித அறிவித்தலும் இல்லாது இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எனினும் எமது சங்கம் இப் போட்டத்தறிகு ஆதரவு தெரிவிக்கவில்லை என தெரிவித்தார்.
இதேவேளை வவுனியா நகரசபையின் செயலாளரிடம் தொடர்பு கொள்ள முயன்றபோது பொலிஸாருடனான சந்திப்பு இருப்பதன் காரணமாக கருத்து கூற முடியாது என நிர்வாக உத்தியோகத்தரை தொடர்பு கொள்ளுமாறு கோரியிருந்தார்.
இதனையடுது நிர்வாக உத்தியோகத்தர் என்.எஸ். கிருஸ்ணனிடம் தொடுர்பு கொண்டபோது,
இவ் இரு பெண்களும் எமக்கு எவ்வித அறிவித்தலும் வழங்காமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இத் தொழிலாளர்களின் நிரந்தர நியமனம் தொடர்பாக நாம் பல முயற்சிகளை எடுத்திருந்தோம். அத்துடன் அவர்களது தொழிற்சங்கமும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தது. எனினும் இது வரை எவ்விதமான முடிவும் கிடைக்கவில்லை. இது எமது சக்கதிக்கு அப்பாற்பட்ட விடயம் என தெரிவித்தார்.

இப் போராட்டம் இடம்பெற்ற இடத்திற்கு சென்ற பொலிஸார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இரு பெண்களுடனும் கலந்துரையாடிய போதிலும் அவர்கள் போராட்டத்தை கைவிடாமையினால் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை பாதுகாப்பு கடமைகளுக்காக நியமித்துவிட்டு ஏனைய பொலிஸார் அவ்விடத்தில் இருந்து நகர்ந்து விட்ட நிலையில் அவர்களது போராட்டம் தெடர்ந்த வண்ணமுள்ளது.Vavunia-Mc-Girl-02Vavunia-Mc-Girl-03Vavunia-Mc-Girl-04
http://www.jvpnews.com/srilanka/74403.html

ஹக்கீம் – கோட்டாவுடன் முக்கிய சந்திப்பு

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைத் தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றமை குறித்து அமைச்சர் ஹக்கீம் சீற்றமடைந்திருக்கும் நிலையிலும் – அது பற்றிய விவகாரத்தை ஐ.நா. மற்றும் மேற்குலக நாடுகளின் கவனத்துக்கு கொண்டு போனமை மூலம் அரசுக்கும் நாட்டுக்கும் நீதி அமைச்சர் ஹக்கீம் துரோகமிழைத்து விட்டார் என்ற விசனம் அரசுத் தலைமையிடம் நிலவும் இவ்வேளையிலும் – இந்தச் சந்திப்பு நிகழ்வது குறிப்பிடத்தக்கதாகும்.
http://www.jvpnews.com/srilanka/74417.html

முஸ்லீம்களின் அழிவை முஸ்லிம் அமைச்சர்கள் வேடிக்கை பார்ப்பது வெட்கம்: JVP

அர­சாங்­கத்தின் ஆத­ர­வு­ட­னேயே முஸ்­லிம்கள் மீதான தாக்­குதல் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றது. தம் இனத்தின் மீதான அடக்கு முறை­களை முஸ்லிம் அமைச்­சர்கள் வேடிக்கை பார்ப்­பது வெட்கித் தலை­கு­னிய வேண்­டிய விட­ய­மாகும் என்று ஜே.வி.பி. தெரி­வித்­தது.
சிறு­பான்மை இனத்­தவர் மீதான அடக்கு முறைகள் சர்­வ­தேச விசா­ர­ணை­களை வலுப்­ப­டுத்திவிட்­டது. அர­சாங்­கமே அனைத்­திற்கும் பொறுப்புக் கூறவேண்டும் எனவும் அக்கட்சி குறிப்­பிட்­டது.
அளுத்­கம இன முரண்­பாட்டு சம்­ப­வத்தை அர­சாங்கம் ஆரம்­பத்­தி­லேயே தடுத்து நிறுத்­தி­யி­ருக்க வேண்டும். கல­வரம் ஏற்­ப­டாது தடுத்­தி­ருக்க முடிந்தும் இன­வா­தி­களே பாது­காப்புப் படைகளின் உத­வி­யுடன் முஸ்­லிம்கள் மீதான தாக்­கு­தலை மேற்­கொண்­டுள்­ளனர். இன்று சர்­வ­தே­சத்தின் மத்­தியில் நாம் அவ­மா­னப்­பட்டு நிற்­கின்றோம். இலங்கை தீவி­ர­வாத நாடு, அமை­தி­யில்­லாத இனப்­பி­ரச்­சி­னை­க­ளு­டைய நாடு என சர்­வ­தேசம் முத்­திரை பதித்து விட்­டது.
நாட்டில் இன­வாத அமைப்­புக்­க­ளையும் இன­வா­தி­க­ளையும் பாது­காத்து அவர்­களை சிறு­பான்மை இனத்­த­வ­ருக்கு அச்­சு­றுத்­த­லாக்கி நாட்டில் குழப்­பத்தை ஏற்­ப­டுத்­து­கின்­றனர். மக்­களே இதற்­கான தீர்­வினை பெற்­றுக்­கொ­டுக்க வேண்டும். ஒரு சில இன­வா­தி­களின் கருத்­துக்­களை நம்பி இரு இன மக்­களும் மோதிக் கொள்­ளாது சிங்­கள முஸ்லிம் மக்கள் புரிந்­து­ணர்­வுடன் செயற்­பட்டால் நாட்டில் பிரச்­சி­னை­களை தீர்த்துக் கொள்ள முடியும்.
இன்று முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரா­கவே அடக்குமுறைகள் கையா­ளப்­ப­டு­கின்ற நிலையில் முஸ்லிம் அமைச்­சர்கள் அர­சாங்­கத்­திற்குள் இருந்து கொண்டு அமைச்சுப் பத­வி­யினை தக்கவைத்துக் கொள்­வ­தற்­காக அமைதி காக்­கின்­றனர். தம் இனத்தின் மீதான அடக்குமுறை­களை இவர்கள் வேடிக்கை பார்ப்­பது வெட்­கப்­பட வேண்­டிய செயல். இவர்கள் தமது மக்­க­ளுக்­காக செயற்­பட எந்தத் தகு­தியும் இல்­லா­த­வர்கள்.
அதேபோல் நாட்டில் தற்­போது இடம்­பெறும் சிறு­பான்மை மக்கள் மீதான அடக்கு முறைகள் சர்­வ­தே­சத்­திற்கு நல்­ல­தொரு ஆதா­ர­மாக அமைந்து கொண்­டி­ருக்­கின்­றன. தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு ஏற்­பட்­ட­தாக சர்­வ­தேசம் குற்றம் சுமத்தி சர்­வ­தேச விசா­ர­ணை­யினை மேற்­கொள்­ள­வுள்ள நிலையில் நாட்டில் முஸ்­லிம்­களும் அச்­சு­றுத்­தப்­பட்டு வரு­கின்­றமை சர்­வ­தேச விசா­ர­ணை­யினை வலுப்­ப­டுத்தும் செயற்­பா­டா­கவே அமைந்­துள்­ளது. எனவே அர­சாங்­கமே இவை அனைத்­திற்கும் பொறுப்புக் கூறவேண்டும். அர­சாங்­கத்தின் மீதும் இரா­ணு­வத்தின் மீதும் சுமத்­தப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டுக்­களை உண்­மை­யென நிரூ­பிக்கும் செயலை அரசு செய்­கின்­றமை எதிர்­கா­லத்தில் மிகப் பெரிய சிக்­கலை ஏற்­ப­டுத்தி விடும்.
மேலும், மக்கள் விடு­தலை முன்­னணி இந்த அடக்குமுறை­களை கண்­டித்து கடந்த தினங்­களில் பல கண்­டன அறிக்­கை­களை வெளி­யிட்­டுள்­ளது. நாம் நேர­டி­யாக இப்­பி­ரச்­சி­னை­களில் தலையிட முடியாது. நாட்டின் பாதுகாப்பு விடயத்தில் அரசாங்கமும் பாதுகாப்புப் பிரிவுமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். எனினும் மக்கள் எக்காரணத்தைக் கொண்டும் ஆயுதம் ஏந்த வேண்டாம். அமைதியைப் பேணி ஒற்றுமையினை வெளிப்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்தார்.Bananthurai-05Bananthurai-04Bananthurai-06Bananthurai-11Bananthurai-10Bananthurai-09Bananthurai-08Bananthurai-07Bananthurai-12Bananthurai-13Bananthurai-14Bananthurai-15

 http://www.jvpnews.com/srilanka/74420.html

Geen opmerkingen:

Een reactie posten