[ செவ்வாய்க்கிழமை, 24 யூன் 2014, 07:53.54 AM GMT ]
இன்று அதிகாலை 1.30 மணியளவில் கோட்டைக் கல்லாறு சந்தை வீதியில் நிறுத்தப்பட்டிருந்த லொறியே இவ்வாறு தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
முல்லைத்தீவில் இருந்து தேங்காய் வர்த்தகத்தில் ஈடுபடும் கோட்டைக் கல்லாறு சந்தை வீதியினை சேர்ந்த தங்கேஸ்வரன் என்பவரின் லொறியே இவ்வாறு எரிந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று காலை தேங்காய் கொண்டுவந்து வியாபாரம் செய்து விட்டு மீண்டும் முல்லைத்தீவுக்கு இன்று காலை செல்லவிருந்த நிலையிலேயே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
அயலவர்கள் அதிகாலை லொறி தீப்பிடித்து எரிவதாக தெரிவித்தபோது இந்த சம்பவம் தனக்கு தெரியவந்ததாக லொறியின் உரிமையாளர் தெரிவித்தார்.
தீயினை அணைக்க முற்பட்டபோதிலும் லொறி முற்றாக எரிந்துவிட்டதாகவும் உரிமையாளர் தெரிவித்தார்.
தனிப்பட்ட வியாபார போட்டிகள் காரணமாகவே இந்த சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
லொறியின் பெறுமதி சுமார் 16 இலட்சம் ரூபா எனவும் உரிமையாளர் தெரிவித்தார். பொலிஸார் இது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmsyGRYLaep4.html
அடுத்த ஜனாதிபதி நான்தான்! குடும்பக் குடுமிப்பிடிச் சண்டையில் கோத்தபாய
[ செவ்வாய்க்கிழமை, 24 யூன் 2014, 08:27.02 AM GMT ]
இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
விடுதலைப் புலிகளுடான யுத்த வெற்றியின் பின்னர் பிரதமர் பதவி மீது கண் வைத்து கோத்தபாய காய் நகர்த்தினார். அதன் பின் மஹிந்த ராஜபக்ஷவின் பதவிக் காலத்தின் பின் தான் ஜனாதிபதி பதவியை அடையும் எண்ணம் அவருக்குள் இருந்தது. எனினும் அவருக்கு குறைந்த பட்சம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கூட கிட்டவில்லை.
இந்நிலையில் எதிர்வரும் தேர்தலின் பின் அவரை பிரதமர் பதவிக்கு நியமிக்க கொள்கையளவில் இணக்கம் தெரிவித்துள்ள ஜனாதிபதி, எவ்வாறாக இருந்த போதிலும் தனக்குப் பின் நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக கொண்டு வரும் வகையிலேயே காய் நகர்த்தி வருகின்றார். இது கோத்தபாயவிற்கு கடும் அதிருப்தியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அது மாத்திரமன்றி சிங்கள பௌத்தர்களின் பெரும்பாண்மை பலத்தைப் பெற்றுக் கொள்ளும் வகையில் அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட பொது பல சேனா கும்பலை ஜனாதிபதி தனது நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இவற்றை வைத்துப் பார்க்கும் போது கோத்தபாயவிற்கு அரசியல் எதிர்காலம் இல்லை என்பது தெளிவாகத் தெரியவந்துள்ளது.
இவ்வாறான நிலையில் கோத்தபாய ராஜபக்ஷ தனது பொறுமையைக் கைவிட்டுள்ளதுடன், தனது சகோதரன் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக காய் நகர்த்தல்களை மேற்கொண்டுள்ளார்.
அடுத்து வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஒதுக்கிவிட்டு தான் போட்டியிடும் வகையில் அவரது செயற்பாடுகள் அமைந்துள்ளன.
மூன்றாவது தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்தவுக்கு சட்டச் சிக்கல்களை ஏற்படுத்துவது, பெரும்பாண்மை சிங்கள மத்தியில் பௌத்தத்தின் உண்மையான காவலனாக தன்னை இனங்காட்டிக்கொள்வது, சிங்கள பௌத்த சிந்தனை கொண்ட ஒருவரே அடுத்த ஜனாதிபதியாக வரவேண்டும் என்ற கருத்தியலுக்கு வலுச் சேர்ப்பது போன்ற விடயங்கள் ஊடாக அவர் தனது இலக்கை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றார்.
இதற்காக அவர் சம்பிக்க ரணவக்க போன்ற சிங்கள இனவாதத்தலைவர்கள் மற்றும் மகாநாயக்கர்களின் ஆசீர்வாதத்தையும் பெற்றுக் கொண்டுள்ளதுடன், சுதந்திரக் கட்சிக்குள்ளும் படிப்படியாக தனது ஆதரவுத் தளமொன்றைக் கட்டி எழுப்பி வருவதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கசிந்துள்ளன.
http://www.tamilwin.com/show-RUmsyGRYLaep6.html
போலி பாஸ்போர்ட், விசா மூலம் 53 நாடுகளுக்கு 200 இலங்கையர்களை அனுப்பியுள்ளோம்: கைதானவர் வாக்குமூலம்
[ செவ்வாய்க்கிழமை, 24 யூன் 2014, 12:08.59 AM GMT ]
நான் கடந்த 2002-ம் ஆண்டு முதல் போலி பாஸ்போர்ட், போலி விசா தயாரித்து விற்கும் தொழில் செய்து வருகிறேன். 2 முறை சிறைக்கு சென்றுவந்தாலும், எனக்கு வேறு தொழில் தெரியாது என்பதால், இந்த தொழிலை விட முடியவில்லை.
இலங்கை வாசிகளுக்கு வெளிநாடுகள் கைகொடுத்து வாழ்வு கொடுக்கின்றன. எனவே, பிழைப்புக்காக வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்கு, போலி பாஸ்போர்ட் மற்றும் போலி விசா தயாரித்து கொடுக்கும் தொழிலை, இலங்கை மக்களுக்காக ஒரு சேவை மனப்பான்மையுடன் செய்து வருகிறேன். இதோடு எனது பிழைப்பும் ஓடுகிறது.
உலகம் முழுவதும் நெட்வொர்க் அமைத்து இந்த தொழில் நடக்கிறது. உலகம் முழுவதும் 53 நாடுகளில் எங்கள் ஆட்கள் உள்ளனர். இந்தியாவில் அனைத்து விமான நிலையங்களிலும், பணிபுரியும் குடியுரிமை அதிகாரிகள் சிலரும், எங்கள் கூட்டத்தில் இரகசியமாக பணியாற்றுகிறார்கள் சென்னை விமான நிலையத்தில் மட்டும் கெடுபிடி அதிகமாக உள்ளது.
போலி பாஸ்போர்ட்டை எளிதில் தயாரித்து விடுவோம். ஆனால் போலி விசா தயாரித்து, சம்பந்தப்பட்டவர்களை, வெளிநாட்டுக்கு அனுப்புவது மிகவும் கஷ்டமான காரியம். சென்னை உட்பட தமிழகம் முழுவதும் அகதிகள் முகாமில் தங்கி இருக்கும், இலங்கையர்கள் யார்-யார், எந்த நாட்டுக்கு செல்ல விரும்புகிறார்கள் என்பதை, ராஜன் மூலம் கணக்கெடுப்போம். அவர்களது புகைப்படத்தை வாங்குவோம்.
காலாவதியான பாஸ்போர்ட்டுகள், வெளிநாடுகளுக்கு போக முடியாதவர்களின் பாஸ்போர்ட்டுகளை டிராவல்ஸ் நிறுவனங்கள் மூலம் விலைக்கு வாங்குவோம். அந்த பாஸ்போர்ட்டுகள் ஒன்றிற்கு, ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரை கொடுப்போம். அந்த பாஸ்போர்ட்டுகளில் உள்ள புகைப்படங்களை நீக்கிவிட்டு, போலி பாஸ்போர்ட்டு கேட்பவர்களின் புகைப்படங்களை அதில் ஒட்டுவோம். அந்த பாஸ்போர்ட்டுகளில் உள்ள முகவரிகளை நீக்கி விட்டு, போலி முகவரிகளை பதிவு செய்வோம். ஆக பழைய பாஸ்போர்ட்டு நம்பரில், போலி பாஸ்போர்ட்டுகள் தயார்.
இந்த போலி பாஸ்போர்ட்டுகளில், போலி விசாவை தயாரித்து ஒட்டி விடுவோம். அந்த விசா மூலம், குறிப்பிட்ட நாடுகளுக்கு பலமுறை சென்று வந்ததாக, போலி ரப்பர் ஸ்டாம்பு மூலம் போலி பாஸ்போர்ட்டில் பதிவு செய்து விடுவோம். சுற்றுலா விசா மட்டுமே போலியாக தயாரித்து கொடுப்போம். சுற்றுலா விசா 10 நாட்களுக்கு மட்டும் செல்லுபடி ஆகும். அடுத்து காலாவதியான போலி விசாவை காட்டி, குறிப்பிட்ட நாடுகளின் உண்மையான விசாவுக்கு விண்ணப்பம் செய்வோம்.
போலி விசா மூலம் ஏற்கனவே குறிப்பிட்ட நாட்டுக்கு சென்று வந்தது போல, பாஸ்போர்ட்டில் பதிவு செய்யப்பட்டு இருப்பதால், அதை உண்மை என்று நம்பி, உண்மையான விசாவை புதிதாக கொடுத்து விடுவார்கள். அந்த விசாவை வைத்து, வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்து விடுவோம்.
எங்கள் கையாட்களாக செயல்படும் விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள், எங்களது ஆட்களை சோதனை எதுவும் போடாமல் அனுப்பி விடுவார்கள். ஒரு ஆளை அனுப்புவதற்கு, குடியுரிமை அதிகாரிகளுக்கு ரூ.1.5 லட்சம் கொடுப்போம். வெளிநாடு சென்றவுடன், பாஸ்போர்ட் மற்றும் விசாவை கிழித்து எறிந்துவிட்டு, சம்பந்தப்பட்டவர்கள், அகதிகள் போல நடித்து விடுவார்கள்.
இலங்கை அகதி என்றால், வெளிநாடுகளில் ராஜமரியாதை கொடுத்து தங்க வைப்பார்கள். பின்னர் காலப்போக்கில், அகதிகள் போர்வையை விலக்கிவிட்டு, குறிப்பிட்ட நாட்டின் குடியுரிமையை பெற்று நிரந்தரமாக, குறிப்பிட்ட நாட்டில் தங்கிவிடுவார்கள். இதுதான் எங்களது தொழில் இரகசியம். இந்த தொழிலை அழிக்க முடியாது.
இந்திய அரசு, இலங்கை மக்களை வெளிநாடுகளுக்கு சென்று பிழைப்பு நடத்த, எளிதில் அனுமதி பெற்று கொடுத்தால், இந்த தொழிலை நாங்கள் விட்டு விடுகிறோம்.
கடந்த 2010-ம் ஆண்டு முதல் சுமார் 53 நாடுகளுக்கு 200 பேர்வரை போலி பாஸ்போர்ட் மற்றும் போலி விசா மூலம் சென்றுள்ளனர். சென்னையில் இருந்து முதலில் மலேசியா அல்லது சிங்கப்பூர் அல்லது மெக்சிகோ அருகே உள்ள கௌத்தமாலா என்ற நாட்டுக்கு அனுப்பி வைப்போம். அங்கிருந்து விரும்பிய நாட்டுக்கு செல்வது எளிதில் முடிந்துவிடும்.
எனக்கு 3 மனைவிகள் உள்ளனர். 3 பேரையும் காதலித்து மணந்துள்ளேன். முதல் மனைவி பெயர் சரோஜினி, அவளுக்கு 4 பிள்ளைகள் உள்ளனர். அவள் கனடா நாட்டில் வசிக்கிறாள். 2-வது மனைவி இளவரசி, சென்னை அரும்பாக்கத்தில் வாழ்கிறாள். அவளுக்கும் 4 பிள்ளைகள் உள்ளனர். 3-வது மனைவி பெயர் தனம். புதுக்கோட்டையைச் சேர்ந்த அவள்தான் தற்போது, என்னுடன் வாழ்கிறாள். அவளுக்கு ஒரு மகன் இருக்கிறான். 2-வது மனைவி இளவரசி, என்னுடன் சண்டை போட்டுவிட்டு தனியாக வாழ்கிறாள். என்னை சிறைக்கு அனுப்புவதால் மட்டும், இந்த தொழிலை அழித்து விட முடியாது. என்னை சிறைக்கு அனுப்பினால், என்னைப்போல 100 கிருஷ்ணமூர்த்திகள் முளைத்து விடுவார்கள்.
இவ்வாறு கிருஷ்ணமூர்த்தி தனது வாக்குமூலத்தில் கூறி உள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRYLafx2.html
Geen opmerkingen:
Een reactie posten