[ வியாழக்கிழமை, 19 யூன் 2014, 04:44.57 PM GMT ]
கண்டியில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய ஜனாதிபதி, கடும்போக்காளர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் நாட்டுக்கு நன்மை பயக்கப் போவதில்லை என்று குறிப்பிட்டார்.
அரசாங்கம் தவறுகளுக்கு பொறுப்பு இல்லையென்ற போதும் பலவந்தமாக அந்த குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாக்கப்பட்டுள்ளது.
நாட்டில் இடம்பெறுகின்ற சம்பவங்களுக்கு அரசாங்கத்தின் மீதே விரல் நீட்டப்படுகிறது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
கறுப்பு ஜூலையின் பின்னர் நாட்டில் இடம்பெற்ற நிகழ்வுகளை பௌத்தர்களும் கிறிஸ்தவர்களும் இந்துக்களும் முஸ்லிம்களும் நினைவு கூறவேண்டும் என்றும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyGSdLahs5.html
இலங்கை மற்றுமொரு குற்றத்தை தனது பட்டியலில் சேர்த்துள்ளது: ராதிகா சிற்சபேசன்
[ வியாழக்கிழமை, 19 யூன் 2014, 04:51.47 PM GMT ]
இலங்கையின் தென்பகுதியில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பிலேயே ராதிகா இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல்கள் கண்டிக்கப்பட வேண்டியவை.
இந்தநிலையில் இலங்கையில் சிறுபான்மையினரின் மனித உரிமைகளை பாதுகாக்க கனேடிய அரசாங்கம் உரிய முனைப்புக்களை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
ஏற்கனவே இலங்கை பல்வேறு குற்றச்செயல்களுக்கு பொறுப்பாகியுள்ளது. இந்தநிலையில் புதிய குற்றமும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
எனினும் இலங்கை அரசாங்கம் அதன் மக்களை காப்பாற்ற நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று ராதிகா குற்றம் சுமத்தியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGSdLahs6.html
Geen opmerkingen:
Een reactie posten