சாரதியொருவர் காவல்துறையினருக்கு அறிவித்தனைத் தொடர்ந்து, விஜித தேரர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. பண்டாரகமப் பகுதியில் வைத்து இனந்தெரியாதோரால் தேரர் இன்று காலை தாக்கப்பட்டு அநாதாரவான இடத்தில் போடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார். மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தேரரின் மர்ம உறுப்பை குறி வைத்துபிளேட்டினால் இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று தெரிய வருகிறது.எனவே இவர் முஸ்லிம்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்ண்டுள்ளதால் இவர் முளிம்களின் மத சம்பிரதாயமான சுன்னத் செய்யவேண்டுமென்ற விமர்சனத்தை கடும்போக்கு புத்த மத செயல்பாட்டாளர்கள் முன்வைத்தனர்.
அதன் செயல் வடிவமே இது என்று நோக்கர்கள் கருதுகின்றனர் இவர் முஸ்லிம்களுக்கு ஆதரவாக செயற்பட்டார் என்று நீண்ட நாள்களாகக் குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில், தேரரை இனந்தெரியாதோர் இன்று தாக்கி காயப்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. விஜித தேரர், பொதுபல சேனா இயக்கத்தை கடுமையாக விமர்சனம் செய்து அதன் நடவடிக்கைகளுக்கு எதிர்பு வெளியிட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜித தேரர் முஸ்லிம் கடும்போக்காளர்களுடன் தொடர்புகளைப் பேணி வருவதாக பொதுபல சேனா குற்றம் சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:
Een reactie posten