[ வியாழக்கிழமை, 19 யூன் 2014, 04:35.32 PM GMT ]
காத்தான்குடி நகர சபையின் விசேட அமர்வு இன்று வியாழக்கிழமை காத்தான்குடி நகரசபை மண்டபத்தில், காத்தான்குடி நகரசபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் தலைமையில் நடைபெற்றது.
இதன்போதே நகரசபை உறுப்பினர் எச்.எம்.எம்.பாக்கீரினால் பல பிரேரணைகள் முன்வைக்கப்பட்டன.
இலங்கையில் இனவாதத்தை தூண்டி வரும் பொதுபல சேனா எனும் அமைப்பை ஒரு பங்கரவாத அமைப்பாக பிரகடனப்படுத்தி அதை தடை செய்ய வேண்டும். அண்மைக்காலமாக இனக் குரோத கருத்துக்களை தெரிவித்து இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை சீர்குலைத்து வரும் பொது பல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரரை கைது செய்ய வேண்டும்.
அளுத்கம மற்றும் தர்கா நகர் போன்ற பிரதேசங்களில் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு, அவர்களின் சொத்துக்களுக்கு ஏற்பட தனித்தனியே நட்ட ஈடு வழங்கப்படல் வேண்டும். அரசாங்கம் இந்நாட்டு முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப் படுத்த வேண்டும்.
மேற்படி வன்முறைச் சம்பவங்களுக்கு உடந்தையாகவும், ஆதரவாகவுமிருந்த பொலிஸாரை பொலிஸ் ஆணைக்குழுவின் மூலம் விசாரணை செய்து தண்டனை வழங்கப்படல் வேண்டும். இனவாதத்தை தூண்டும் எந்தவொரு கூட்டத்திற்கோ பேரணிக்கோ அனுமதி வழங்கக் கூடாது.
பாதிக்கப்பட்டவர்கள் தனித்தனியே நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் போன்ற பிரேரணைகள் இதன்போது நிறைவேற்றப்பட்டன.
காத்தான்குடி நகரசபை அமர்வின்போது காத்தான்குடி நகரசபை உறுப்பினர் திருமதி சல்மா ஹம்சா கண்டனத்தை வெளிப்படுத்தும் சுலோக அட்டையொன்றை தாங்கி அமர்வில் கலந்துகொண்டார்.
அளுத்கமை மற்றும் தர்கா நகரில் இடம்பெற்ற வன்முறைச்சம்பவங்களுக்கு கண்டனத்தை வெளிப்படுத்துவதற்காக அவர் இச் சுலோக அட்டையை தாங்கியிருந்தார். இச் சுலோக அட்டையில், முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை கண்டிக்கின்றேன், அரசாங்கமே பொது பல சேனாவை தடை செய் போன்ற வசனங்கள் எழுதப்படடிருந்தன.
இந்த அமர்வில் தலைவர் அஸ்பர், காத்தான்குடி நகர சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்களான எம்.அலிசப்ரி, எச்.எம்.எம்.பாக்கீர், எம்.எஸ்.சியாத், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் சல்மா ஹம்சா, நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சார்பிலான சுயேசட்சைக்குழு உறுப்பினர்கள் ஏ.எல்.எம்.சபில் நழீமி, எஸ்.எச்.பிர்தௌஸ் ஆகியோர் கலந்து காண்டனர்.
பிரதி தவிசாளர் எம்.ஐ.எம்.ஜெஸீம், ஆளும் கட்சி உறுப்பினர் றஊப் ஏ மஜீத் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyGSdLahs4.html
தொலைபேசியில் கொலை அச்சுறுத்தல்: தூக்கில் தொங்கிய யாழ்.இளைஞன்
[ வியாழக்கிழமை, 19 யூன் 2014, 03:56.27 PM GMT ]
யாழ்.வரணி வாழைத்தோட்டத்தைச் சேர்ந்த இளைஞனுக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வந்தநிலையில், இன்று குறித்த இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குமாரசாமி கிருபாகரன் (30 வயது) என்ற இளைஞனே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த இளைஞன் உரும்பிராயைச் சேர்ந்த ஆசிரியை ஒருவரை காதலித்ததையடுத்து, இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
ஓகஸ்ட் 17 ஆம் திகதி திருமணத்திற்கு திகதியும் குறிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன.
இந்நிலையில் குறித்த இளைஞனின் கைத் தொலைபேசிக்கு இனந்தெரியாதவர்கள் தொடர்ச்சியாக கொலை அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் பயமுறுத்தி வந்துள்ளனர்.
இந்த விடயம் இரு வீட்டாருக்கும் தெரிந்தபோதிலும் அதனைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
நேற்றும் தொலைபேசியில் தனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தன் தாயாரிடம் தெரிவித்தபோது, அதற்கு பயப்படவேண்டாமென தாய் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், இன்று ஆலயத்திற்கு சென்ற பின்னர் மகன் தூக்கில் தொங்கிக் கிடக்கிறார் எனக் கிடைத்த தகவல் கிடைத்ததாக உயிரிழந்த இளைஞனின் தாயார் தெரிவித்துள்ளார்.
இவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக சாவகச்சேரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmsyGSdLahs3.html
மியன்மாரை போன்றே சிறிலங்காவிலும் பௌத்த அடிப்படைவாதம் முற்றுகிறது!– சீ.என்.என்
[ வியாழக்கிழமை, 19 யூன் 2014, 03:27.47 PM GMT ]
அளுத்கம முஸ்லிம்கள் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் இன்று வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பௌத்த அடிப்படைவாதம் அதிகரித்து வருகிறது.
இதற்கு பொதுபல சேனா என்ற அமைப்பே காரணம் என்று குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
இந்த அமைப்பு தொடர்ச்சியாக சிறுபான்மை முஸ்லிம்கள் மீது தாக்கதல் நடத்துகிறது.
இந்த அமைப்புக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் ஆதரவு இருக்கிறது என்று அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
மேலும் இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் உள்ள முஸ்லிம்கள் தற்போது அநாதாரவான நிலையிலும், அச்சத்துடனும் வாழ்க்கை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது என்றும் சீ.என்.என். சுட்டிக்காட்டியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyGSdLahs2.html
Geen opmerkingen:
Een reactie posten