தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 23 juni 2014

என்னிடம் "ரூம்" இல்லை பிரபாகரனுக்கு கொடுக்க : கடுப்பாகிய மகிந்த ராஜபக்ஷ !

நேற்று முன் தினம்(சனிக்கிழமை) பதுளையில் உள்ள சர்வதேச வர்த்தக நிலையம் ஒன்றை திறந்துவைக்க, மகிந்தரும் அவரது மகன் நாமால் ராஜபக்ஷவும் சென்றிருந்தனர். அங்கே குவிந்த ஊடகவியலாளர்கள், சமீபத்தில் முஸ்லீம்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாகவும், நோ லிமிட் வர்த்தக நிலையம் எரிக்கப்பட்டது தொடர்பாகவுமே கேள்விகளை கேட்டவண்ணம் இருந்தார்கள். ஒரு கட்டத்தில், சிங்கள வர்த்தக நிலையத்தை திறந்துவைக்க வந்துள்ளீர்கள், ஆனால் முஸ்லீம்களின் வர்த்தக நிலையங்கள் எரிகிறதே என்ற பொருள்பட, நிருபர் ஒருவர் கேள்வி கேட்க்க கடுப்பாகினார் மகிந்த ராஜபக்ஷ. சிறிய விடையம் என்றை பெரிது படுத்துகிறீர்கள் என்று அவர் கடுமையாக கூறினார். அட மகிந்தருக்கு இது சிறிய விடையமாக அல்லவா இருக்கிறது.
முள்ளிவாய்க்காலில் ஆயிரம் ஆயிரம் தமிழர்கள் இறக்கும்போது கூட அப்படியே இருந்த இந்த ஆளுக்கு, ஒரு 10 முஸ்லீம்கள் இறந்தால் கூட அது பெரிய விடையம் இல்லையே ! இது ஒருபுறம் இருக்க, இனி ஒரு பிரபாகரன் உருவாக நான் விடமாட்டேன் என்று புலிகள் மீது பாய ஆரம்பித்தார். இந்த நாட்டில் பிரபாகரனுக்கு ரூம் போட்டுக் கொடுத்தது போதும், இனி அவருக்கு ரூம் போட என்னிடம் ரூம் இல்லை என்று மகிந்தர் கூறியுள்ளார். சிறிய கலவரம் ஒன்றை ஊதிப் பெரிசாக்கியுள்ளது புலம்பெயர் நாட்டில் உள்ள புலிகள் ஆதரவாளர்கள் தான் என்று கூறி அவர், புலம்பெயர் தமிழர்களையும் தாக்க தவறவே இல்லை.
இப் பிரச்சனையை நவனீதம் பிள்ளை வரை சிலர் கொண்டுசென்றுள்ளதாகவும், ஐ.நா இவ்விடையம் தொடர்பாக கவனம் செலுத்தவைத்தது, புலம்பெயர் தமிழர்கள் தான் என்றும் மகிந்தர் சாடியுள்ளார். முஸ்லீம் அமைச்சர்கள் கடந்த வெள்ளியன்று மகிந்தரை சந்தித்து கலவரம் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்கள். மகிந்தர் பெரும் வாக்குறுதிகளை அவர்களுக்கு அள்ளி வழங்கியுள்ளார். ஆனால் இறுதியாக அவர் கூறிய வார்த்தைகள் என்ன தெரியுமா ? நாமே உங்களை காக்க வல்லவர்கள். இந்த தருணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்போடு இணக்கத்தை ஏற்படுத்த நினைக்கவேண்டாம் என்பது தான். ஒன்றை மட்டும் முஸ்லீம் தலைவர்கள் புரிந்துகொள்ளுதல் நல்லது. அவர்களது இணக்க அரசியல் தற்போது தோல்வியையே தழுவி உள்ளது.
2009ம் ஆண்டுக்குப் பின்னர் சில தமிழர்கள் இலங்கை சென்றதும், இலங்கை அரசால் மண்டை கழுவப்பட்டது உண்மையே. இவர்கள் போன்றவர்கள் மீண்டும் புலம்பெயர் நாடுகளுக்கு வந்து இலங்கையில் நாம் ஒற்றுமையாக ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழவேண்டும் என்று கூறுவார்கள். இணக்க அரசியல் ஒன்று செய்தால் மட்டுமே இலங்கையில் ஈழத் தமிழர்கள் நிம்மதியாக வாழலாம் என்பார்கள். இதனை ஏற்கனவே செய்துவந்த முஸ்லீம்களின் இன்றைய நிலையை நீங்கள் அனைவருமே கண்கூடாக பார்த்துவிட்டீர்கள். இணக்க அரசியலில் ஒன்றாக பின்னி பிணைந்து இருந்த இந்த முஸ்லீம்களின் மீது, தற்போது சிங்களம் கட்டவிழ்த்து விட்டுள்ள காடைத்தனத்தை. இனியும் இப்படியான ஒரு அரசியல் தமிழர்களுக்கு தேவையா ?
http://www.athirvu.com/newsdetail/227.html

Geen opmerkingen:

Een reactie posten