தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 23 juni 2014

பிரச்சினை தீரும் என்றால் உயிரை விடவும் தயார்: ஞானசார தேரர்



வட்டரக்க விஜித தேரர் போன்ற 40 தேரர்களை நாட்டு மக்கள் விரைவில் அறிவர்- கலகொடஅத்தே ஞானசார தேரர்
[ திங்கட்கிழமை, 23 யூன் 2014, 06:22.19 AM GMT ]
வட்டரக்க விஜித தேரர் நாடகமாடி வருகின்றார் என ஆரம்பத்திலிருந்தே பொது பல சேனா தெரிவித்து வருகின்றது. இவரைப் போன்ற மேலும் 40பேர் தொடர்பில் நாட்டு மக்கள் விரைவில் அறிந்துகொள்வர் என்றும் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் வட்டரக்க விஜித தேரருக்க பாதுகாப்பு வழங்கி, அரசாங்கம் தவறிழைத்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
வட்டரக்க விஜித தேரர் தன்னைத் தானே தாக்கிக்கொண்டுள்ளார் என்றும் அளுத்கமை மற்றும் பேருவளை பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் திட்டமிட்ட சதி என்றும் ஞானசார தேரர் மேலும் கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRXLafs4.html
ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்த முஸ்லிம் அமைப்பின் 5 உறுப்பினர்கள் கைது
[ திங்கட்கிழமை, 23 யூன் 2014, 06:08.00 AM GMT ]
கொழும்பில் கடந்த 19 ஆம் திகதி முஸ்லிம்களுக்கு சொந்தமான கடைகளை பூட்டி நடத்தப்பட்ட ஹர்த்தாலுக்கான அழைப்பை விடுத்திருந்த முஸ்லிம் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் 5 உறுப்பினர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வெள்ளவத்தை பகுதியில் உள்ள முன்னணி ஆடை விற்பனை நிலையம் ஒன்றை மூடுமாறு இவர்கள் கடந்த 19 ஆம் திகதி மிரட்டியதாக வெள்ளவத்தை பொலிஸாருக்கு முறைப்பாட்டுக்கு அமைய நடத்தப்படட விசாரணைகளைளை அடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 
இவர்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyGRXLafs3.html
பிரச்சினை தீரும் என்றால் உயிரை விடவும் தயார்: ஞானசார தேரர்
[ திங்கட்கிழமை, 23 யூன் 2014, 06:23.50 AM GMT ]
தனது மரணத்தின் மூலம் சிங்கள பௌத்தர்களின் பிரச்சினைகளுக்கு  தீர்வு கிடைக்கும் என்றால், மரணத்தை எதிர்நோக்க தயாராக இருப்பதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
பொதுபல சேனா அமைப்பின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
இலங்கையில் பௌத்த சிங்களவர்களுக்கு பாரிய பிரச்சினைகள் இருப்பதன் காரணமாகவே நாங்கள் அதனை தீர்ப்பதற்காக குரல் கொடுத்து வருகின்றோம்.
என்னை கொலை செய்தோ, கைது செய்தோ, என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியோ பிரச்சினை தீரும் என்றால், அதனை எதிர்கொள்ள தயாராக இருக்கின்றேன்.
விடுதலைப் புலிகள் மற்றும் அல்-குவைதா அமைப்புகளை போல் நாங்கள் துப்பாக்கி பிரயோகம் செய்ய மாட்டோம் என்ற காரணத்தினாலேயே வாசுதேவ நாணயக்கார, ரவூப் ஹக்கீம், அசாத் சாலி போன்றவர்கள் பொதுபல சேனா அமைப்பை தொடர்ந்தும் விமர்சித்து வருவதாகவும் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRXLafs5.html

Geen opmerkingen:

Een reactie posten