குறித்த மாணவன் தான் புரிந்தது குற்றமெனில் பாடசாலை அதிபர் முன்னிலையில் பகிரங்க மன்னிப்புக்கோறுவதாகக் கூறியபோதும் தாக்கிய ஆசிரியர் அவ்விடத்தைவிட்டுச் சென்று பின்பு மீண்டும் வந்து அதே மாணவனை தாக்கியுள்ளார். இதன் பயனாக தற்போது குறித்தமாணவனின் ஒருபக்க காதுச்செவிப்பறை வெடித்து கேட்கும் தன்மையை இழந்துள்ளது.
தற்போது யாழ்.போதனா வைத்தியசாலையினில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவன் தொடர்பினில் கல்வி அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையினையும் மேற்கொள்ளவில்லையெனத் தெரியவருகின்றது. இருப்பினும் சம்பவம் தொடர்பினில் கடந்த 20ம் திகதி மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.அலுவலகத்தினில் பெற்றோரினால் முறையிடப்பட்டுள்ளதோடு, வைத்தியசாலைத்தரப்பினர் மாணவனின் எதிர்காலம் கருதி பொலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்கள் என்றும் அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.
http://www.athirvu.com/newsdetail/234.html
Geen opmerkingen:
Een reactie posten