தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 26 juni 2014

முஸ்லிம்கள் காலிமுகத் திடலில் தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும் - அசாத் சாலி

போரின் பின்னர் அழுத்தங்களில் இருந்து மீள படையினருக்கு யோகா பயிற்சி
[ வியாழக்கிழமை, 26 யூன் 2014, 02:01.59 AM GMT ]
இலங்கையின் சுமார் 3 லட்சம் படைவீரர்களுக்கு யோகாசன பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன
போரின் பின்னர் ஏற்பட்டுள்ள அழுத்தங்களை தவிர்ப்பதற்காகவே இந்த பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக இந்திய செய்தி ஒன்று கூறியுள்ளது
இலங்கை இராணுவத்தின் ஊடக அறிக்கை ஒன்றின்படி படையினருக்கான யோகாசன தங்குமிட பயிற்சி நிலையத்துக்கான அடிக்கல் இன்று நாட்டப்படவுள்ளது
இந்த நிலையத்தில் ஆயுதப்பயிற்சி பெற்ற படைவீரர்களுக்கு மாத்திரம் யோகா பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன
இதற்காக கம்பஹாவில் 100 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டுள்ளது
இந்தநிலையில் படையினருக்கான யோகா நிலையம் என்ற அடிப்படையில் இது ஆசியாவில் முதல் நிலையமாக அமையும் என்று படைத்தரப்பு குறிப்பிட்டுள்ளது
http://www.tamilwin.com/show-RUmsyGRaLbnoz.html
பல்கலைக்கழக பேராசிரியர்கள் போராட்டம் ஒன்றை நடாத்தத் திட்டம்
[ வியாழக்கிழமை, 26 யூன் 2014, 05:29.02 AM GMT ]
பல்கலைக்கழக பேராசிரியர்கள் போராட்டம் ஒன்றை நடாத்தத் திட்டமிட்டுள்ளனர்.
அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு உரிய பதிலளிக்கப்படவில்லை என்ற காரணத்தினால் இவ்வாறு போராட்டம் நடாத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
தொழிற்சங்க நடவடிக்கை எடுப்பது தொடர்பில் பல்கலைக்கழக பேராசிரியர் ஒன்றிய தொழிற்சங்கம் மிக முக்கியமான கூட்டமொன்றை எதிர்வரும் 30ம் திகதி நடாத்த உள்ளது.
தமது பிரச்சினைகள் குறித்து பல்கலைக்கழக பேராசிரியர் ஒன்றியம் நிதி அமைச்சின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தரவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிவித்துள்ளது.
கடந்த 24ம் திகதி இந்தப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளது.
கல்வித்துறைக்கு மொத்த தேசிய உற்பத்தியில் 6 வீதம் ஒதுக்கீடு செய்தல், ஆய்வுப் பணிகளுக்கான கொடுப்பனவுகளுக்கு நிபந்தனை விதிக்கக் கூடாது,  தனியார் பல்கலைக்கழகங்களை அமைப்பதற்கு உயர்கல்வி அமைச்சு வழங்கிய அனுமதியை ரத்து செய்தல், உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக பேராசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyGRaLbno7.html
தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட அனைத்து கட்சிகளுடன் ஜனாதிபதி பேச வேண்டும்!- தயான் ஜயதிலக
[ வியாழக்கிழமை, 26 யூன் 2014, 05:33.31 AM GMT ]
ஐநா விசாரணையை நிராகரித்துள்ள நிலையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச­ வட்டமேசை மாநாட்டை அவசரமாக ஏற்பாடு செய்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுடன் பேச்சு நடத்த வேண்டும் என ஐ.நா.வுக்கான இலங்கையின் முன்னாள் வதிவிடப் பிரதிநிதி பேராசிரியர் தயான் ஜயதிலகஆலோசனை வழங்கியுள்ளார்.
எதிர்காலத்தில் இலங்கைக்கு எதிராக சர்வதேச மட்டத்தில் எழும் சவால்களை முறியடிப்பதற்குரிய மாற்று வழிமுறைகள் குறித்து அரசு ஆழமாக சிந்திக்க வேண்டும் என்றும்  அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சர்வதேச விசாரணைக்கு கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்கினால் அது வடக்குக்கும் தெற்குக்குமிடையிலான உறவுப்பாலத்தில் மேலும் விரிசலை ஏற்படுத்தும் நிலைமையை உருவாக்கிவிடும் என்றும் சுட்டிக்காட்டினார்.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தினால் இலங்கைக்கு எதிராக முன்னெடுக்கப்படவுள்ள விசாரணை, அதற்கு எதிராக நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம், இது விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு, அத்துடன், இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட தென்னாசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவிச் செயலார் அதுல் கெசாப் வெளியிட்டுள்ள கருத்துகள் ஆகியன தொடர்பில் நேற்றுக் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஐ.நா. விசாரணைக்குழுவுக்கு எதிராக நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை சட்டம் அல்லவென்றும், பெரும்பாலானோரின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் தீர்மானமே அது அமைந்துள்ளது எனவும் கூறிய அவர், எனவே, சாட்சிகளை கட்டுப்படுத்துவதற்குரிய உபாயங்கள் எதுவும் அதில் இல்லை. உயர் நீதிமன்றத்தினூடாகத்தான் ஏனைய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.
ஐ.நா. விசாரணைக்குழுவுக்கு எதிரான பிரேரணைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்த்து வாக்களித்துள்ளது. இந்த முடிவு சரியா, தவறா என நான் விமர்சிக்க முன்வரவில்லை.
எனினும், ஒரு விடயத்தை குறிப்பிட வேண்டும். அதாவது, வட அயர்லாந்தில் சுயாட்சிக்காக போராடிய கட்சியொன்று பிரிட்டன் இராணுவத்துக்கு எதிராக சர்வதேச விசாரணையையோ அல்லது உள்நாட்டு விசாரணையையே ஒரு போதும் கோரவில்லை.
எனவே, சர்வதேச விசாரணைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்கினால், அது வடக்குக்கும் தெற்குக்கும் இடையிலான உறவுப்பாலத்தில் மேலும் விரிசலை ஏற்படுத்தும். சர்வதேச விசாரணைக்கு எதிரானவன் நான் என்பதையும் இவ்விடத்தில் குறிப்பிட விரும்புகின்றேன்.
அத்துடன், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர்அலுவலகத்தில் முன்னெடுக்கப்படவுள்ள விசாரணையை அரசு நிராகரித்துள்ளதால் சர்வதேச மட்டத்தில் எதிர்காலத்தில் எழும் சவால்களை அழுத்தங்களை எதிர்கொள்வதற்குரிய மாற்று திட்டங்கள் பற்றி அரசு சிந்திக்கவேண்டும்.
இதற்காக வட்டமேசை மாநாட்டை ஜனாதிபதி உடன் நடத்த வேண்டும். கட்சிகளுடன் பேச வேண்டும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRaLbnpy.html
முஸ்லிம்கள் காலிமுகத் திடலில் தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும் - அசாத் சாலி
[ வியாழக்கிழமை, 26 யூன் 2014, 05:35.00 AM GMT ]
தலதா மாளிகைக்கு எதிரில் பொதுபல சேனா அமைப்புக்கு மனவுறுதி பூஜையை நடத்த முடிந்த காரணத்தினால், நாட்டில் வாழும் முஸ்லிம் மக்கள் காலிமுகத் திடலில் தொழுகையை நடத்த அனுமதி வழங்கப்பட வேண்டும் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான அசாத் சாலி கோரிக்கை விடுத்துள்ளார்
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் இந்தக் கோரிக்கையை விடுத்திருந்தார்.
அளுத்கம, பேருவளை மற்றும் தர்கா நகர் பகுதிகளில் ஏற்பட்ட மோதலுடன் சம்பந்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பொதுபல சேனாவுக்கு எதிராக இதுவரை சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொதுபல சேனா அமைப்பு கண்டி நாத ஆலயத்தில் நேற்று முன்தினம் மனவுறுதி பூஜையை நடத்தியது.
இந்த பூஜைக்கு அனுமதி வழங்க பொலிஸார் மறுத்த நிலையில், பாதுகாப்பு அமைச்சு அதற்கு அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
எவ்வாறாயினும் பொதுபல சேனாவின் இந்த பூஜை காரணமாக கண்டி பிரதேசத்தில் எவ்விதமான பதற்றமும் ஏற்படவில்லை.
http://www.tamilwin.com/show-RUmsyGRaLbnpz.html

Geen opmerkingen:

Een reactie posten