[ வெள்ளிக்கிழமை, 06 யூன் 2014, 02:28.01 AM GMT ]
1990ம் ஆண்டு ஜூன் மாதம் 11ம் திகதி திருக்கோயில் காட்டுப் பகுதியில் வைத்து தமிழீழ விடுதலைப் புலிகளினால்ää 600 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொலை செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடாத்துமர்று ஓய்வு பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்களை சரணடையுமாறு அப்போது பொலிஸ் மா அதிபராக பதவி வகித்தவர் உத்தரவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எனினும் இது பற்றிய தகவல்கள் மூடிமறைக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உத்தரவிற்கு அமைய புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் பொட்டு அம்மான், பொலிஸ் உத்தியோகத்தர்களை கொலை செய்ததாக, அப்போதைய புலிகளின் கிழக்கு கட்டளைத் தளபதியும், தற்போதைய பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா அம்மான் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGTaLZes2.html
எங்கள் கைதுக்கு இலங்கை மீனவர்களே காரணம்! விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் தெரிவிப்பு
[ வெள்ளிக்கிழமை, 06 யூன் 2014, 03:03.26 AM GMT ]
கடந்த வாரம் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த 28 தமிழக மீனவர்களையும், படகு பழுதாகி கடலில் தத்தளித்த நான்கு தமிழக மீனவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தது இலங்கை கடற்படை.
பின்னர், கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்கப்படுவதாக அந்நாட்டு அதிபர் ராஜபக்ச நேற்று முன்தினம் அறிவித்திருந்தார்.
அதன் தொடர்ச்சியாக நேற்று ராமேஸ்வரம் வந்து சேர்ந்தனர் விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 33 பேர். அங்கு மீனவர் சங்கத்தினர் அவர்களை வரவேற்றனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் விடுதலையாகி வந்த மீனவர்களில் சிலர் கூறியதாவது:-
நாங்கள் அனுராதபுரம் சிறையில் 2 நாட்கள் இருந்தோம். அதற்கு பிறகு விடுதலை செய்யப்படுவதாகக் கூறி மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி, மீனவர்களை மட்டும் விடுதலை செய்வதாகவும் 6 படகுகள், மீன்பிடி சாதனங்களை விடுவிப்பது தொடர்பான விசாரணை ஜூலை 4-ந்தேதி நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
எங்களை விடுவித்தது மகிழ்ச்சி என்றாலும், எங்களையும், குடும்பத்தையும் காப்பாற்றும் படகுகளை விடுவிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது.
இலங்கை கடற்படையினர் எங்களை ஒப்படைக்க அழைத்து வந்தபோது, இலங்கை மீனவர்கள் தான், இந்திய மீனவர்களை இலங்கை கடல் பகுதிக்குள் அனுமதிக்கக்கூடாது என்று வலியுறுத்தி வருவதாகவும், அதனாலேயே இந்திய மீனவர்களை கைது செய்வதாகவும் எங்களிடம் கூறினர்.
இதன் மூலம் கடற்படையினரின் நடவடிக்கைகளுக்கு இலங்கை மீனவர்கள் தான் காரணம் என்பது தெளிவாகிறது.
சிறையில் இருந்த போது இலங்கை மீனவ பிரதிநிதிகள் எங்களை சந்தித்தனர். அவர்கள் எங்களிடம் இலங்கை கடல் பகுதிக்குள் தடைசெய்யப்பட்ட இழு வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க வேண்டாம் என்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmsyGTaLZes3.html
இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டதை கண்டிக்கும் ஜே.வி.பி
[ வெள்ளிக்கிழமை, 06 யூன் 2014, 07:00.51 AM GMT ]
ஜே.வி.பியின் தலைவர் தலைமையில் இந்த வாரம் நடைபெறவுள்ள அந்த கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் இந்த பிரச்சினை குறித்து கலந்துரையாடப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவித்தன.
இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து அரசாங்கம் போதிய கவலைகளை வெளிக்காட்டவில்லை என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் அந்துன்நெத்தி குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மீனவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற உத்தரவாதமில்லாது இந்திய மீனவர்களை விடுதலை செய்யப்பட்டமைக்கு ஜே.வி.பியின் மத்திய குழு எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் புதிய அரசாங்கத்தை நோக்கிய ஒரு நல்லெண்ண நடவடிக்கையாக இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டிருந்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyGTaLZet1.html
Geen opmerkingen:
Een reactie posten