தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 19 juni 2014

கொலை வழக்கில் ஆஜராக விலக்களிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றில் டக்ளஸ் மீண்டும் மனு!

உலக சமாதான சுட்டியில் இலங்கைக்கு 105ம் இடம்
[ வியாழக்கிழமை, 19 யூன் 2014, 02:19.43 PM GMT ]
உலக சமாதான சுட்டியின் அடிப்படையில் இலங்கை 105ம் இடத்தை வகிப்பதாக பொருளாதார மற்றும் சமாதானத்திற்கான நிறுவகம் அறிவித்துள்ளது.
உலகின் 162 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
தென் ஆசியாவில் இலங்கை நான்காம் இடத்தை வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த தர வரிசையில் இந்தியா 5ம் இடத்தையும், உலக அளவில் 143 இடத்தையும் வகிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
2008ம் ஆண்டு முதல் உலக அளவில் சமாதானத்திற்கு பாரியளவில் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
உலகில் சமாதானமான நாடுகளாக டென்மார்க், ஒஸ்ட்ரியா, நியூசிலாந்து மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் பட்டியல்படுத்தப்பட்டுள்ளன.
சிரியா, தென் சூடான், ஆப்கானிஸ்தான், ஈராக், சோமாலியா, கோங்கோ ஜனநாயக் குடியரசு, மத்திய ஆபிரிக்க, பாகிஸ்தான், வடகொரியா உள்ளிட்ட நாடுகள் சமாதான வரிசையில் கடைநிலையை வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyGSdLahsy.html
கொலை வழக்கில் ஆஜராக விலக்களிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றில் டக்ளஸ் மீண்டும் மனு!
[ வியாழக்கிழமை, 19 யூன் 2014, 02:33.33 PM GMT ]
கொலை வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்கும் படி இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார்.
1986ம் ஆண்டு சென்னை சூளைமேட்டில் நடந்த கொலை தொடர்பாக, டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
ஆனால், பின்னர் நடந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் டக்ளசுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறக்கப்பட்டது.
இதையடுத்து, சென்னை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் அவர் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
எனினும், தான் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் டக்ளஸ் தேவானந்தா தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில், டக்ளஸ் தேவானந்தா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், தற்போது இலங்கை அமைச்சராக இருக்கும் தன்னிடம் வீடியோ ஃகான்பரசிங் மூலம் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் வரும் திங்கட்கிழமைக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
http://www.tamilwin.com/show-RUmsyGSdLahsz.html

Geen opmerkingen:

Een reactie posten