தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 19 juni 2014

தமிழ் தேசிய கூட்டமைப்பு நடாத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஜ.ம.மு ஆதரவு!

இலங்கைக்குள் செல்ல அனுமதிக்கா விட்டாலும் விசாரணை நடத்தப்படும்!- ஐ.நா. திட்டவட்டம் - சென்னையில் முன்னெடுக்குமாறு ராமதாஸ் மத்திய அரசிடம் கோரிக்கை
[ வியாழக்கிழமை, 19 யூன் 2014, 06:18.06 AM GMT ]
மனித உரிமை மீறப்பட்டமை சம்பந்தமாக இலங்கைக்கு செல்லாமலேயே முழுமையான விசாரணைகளை நடத்த முடியும் என்பதால் விசாரணைக் குழுவினர் இலங்கைக்கு செல்ல அனுமதிக்கப்படா விட்டாலும், குறித்த விசாரணைகள் கண்டிப்பாக நடத்தப்படும் என ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் பேச்சாளர் ரொபர்ட் கொல்வில் தெரிவித்துள்ளார்.
சிரியா மற்றும் வடகொரியா ஆகிய நாடுகள் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பிரதிநிதிகளை நாட்டுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை.
எனினும் இந்த நாடுகளின் மனித உரிமை மீறல்கள் குறித்து முழுமையான விபரமான அறிக்கைகளை தயாரிக்க முடிந்தது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐ.நா மனித உரிமை விசாரணைக்குழுவினர் இலங்கைக்குள் செல்ல அனுமதித்தால் அது சிறந்த நடவடிக்கையாக அமையும் எனவும் கொல்வில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான சர்வதேச விசாரணையை சென்னையில் முன்னெடுக்குமாறு ராமதாஸ் மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கை
இறுதிப் போரின் போது தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை முன்னெடுக்கும் விசாரணைகளுக்கு இந்திய அரசாங்கம் அனுசரணை வழங்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
கட்சியின் நிறுவுனர் எஸ் ராமதாஸ் இந்தக்கோரிக்கையை விடுத்துள்ளார்..
இந்த விசாரணையை சென்னையில் நடத்த முடியுமானால் அதில் இலங்கை அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்கள் பங்கேற்கக் கூடியதாக இருக்கும் என்று ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் இந்த விசாரணையை எதிர்க்கும் ராஜபக்ச அரசாங்கம் தொடர்ந்தும் தமிழர்களின் உரிமையை மறுத்து வருவதாக ராமதாஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGSdLaho0.html
இலங்கை கடற்படையினரால் 47 தமிழக மீனவர்கள் கைது
[ வியாழக்கிழமை, 19 யூன் 2014, 06:23.59 AM GMT ]
இலங்கை கடற்படையினரால் நேற்று இரவு 24 தமிழக மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
காங்கேசன்துறை கடற்பரப்புக்கு அப்பால் வைத்து இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக இலங்கை கடற்டை அறிவித்துள்ளது.
அவர்கள் பயணித்த 6 படகுகளும் இதன்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை மற்றும் ஒரு சம்பவத்தின் போது தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து 23 தமிழக மீனவர்கள் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் பயணித்த 5 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. கைதுசெய்யப்பட்டவர்கள் கடற்றொழில் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளனர்
http://www.tamilwin.com/show-RUmsyGSdLaho1.html
தமிழ் தேசிய கூட்டமைப்பு நடாத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஜ.ம.மு ஆதரவு!
[ வியாழக்கிழமை, 19 யூன் 2014, 06:26.59 AM GMT ]
அளுத்கம,பேருவளை, தர்கா நகரில் வாழும் முஸ்லீம்கள் மீதான தாக்குதலை கண்டித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு யாழ் நகரில் ஒழுங்கு செய்திருக்கின்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஜனநாயக மக்கள் முன்ணணி பூரண ஆதரவு வழங்குவதாக அக்கட்சியின் ஊடகச் செயலாளர் சி. பாஸ்கரா தெரிவித்தார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
சிறுபான்மையினர் மீதான இனவாத தாக்குதல்கள் காலம் காலமாக வெற்றிகரமாக இனவாதிகளால் முன்னெடுக்கப்பட்டு தமிழர் மீதான ஒட்டுமொத்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் நடத்தி வெற்றி கண்ட இனவாதம் சகோதர முஸ்லீம் மக்கள் மீதும் நடாத்தப்பட்டதை வன்மையாகக் கண்டித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒழுங்கு செய்துள்ள இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு எமது தார்மீக ஆதரவை வழங்துவதோடு சகல கட்சிகளும், அமைப்புகளும்,  மக்களும் ஒன்று திரண்டு ஆதரவை தெரிவிக்க வேண்டும்  எனவும் பாஸ்கரா தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyGSdLaho2.html

Geen opmerkingen:

Een reactie posten