[ வியாழக்கிழமை, 19 யூன் 2014, 01:47.20 PM GMT ]
தெஹிவளை சர்வதேச பௌத்த மத்திய நிலையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அளுத்கம புத்தசாசன பாதுகாப்பு அதிகார சபையின் அழைப்பின் பேரிலேயே நாம் அந்த இடத்திற்கு சென்றோம்.
அயகம சமித தேரர் தனது விகாரைக்கே தர்கா நகர் ஊடாக ஊர்வலமாக சென்றார். முஸ்லிம்களை தூண்டவோ, அவர்கள் மீது தாக்குதல் நடத்தவோ அவர் செல்லவில்லை.
தர்கா நகர் ஊடாக செல்லும் வீதியில் அவரது விகாரை இருக்கின்றது. அந்த வீதியில் செல்லாது எதிர்க்கட்சித் தலைவர் இருக்கும் கறுவாத்தோட்டம் ஊடாகவா நாங்கள் செல்ல வேண்டும்.
நாட்டில் பொறுப்பை வகிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் போன்ற ஒருவர் விடயங்களை ஆராய்ந்து பார்க்காது அரசியல் லாபத்திற்காக தமது மக்களை காட்டிக் கொடுக்கும் விதமான கருத்துக்களை வெளியிடுவது தவறானது.
தர்கா நகரில் நாங்கள் ஊர்வலமாக செல்லும் போது எம்மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த தாக்குதல் நடத்தப்பட்ட போது சிங்கள இளைஞர்கள் எம்முடன் இருக்கவில்லை.
இளைஞர்கள் ஊர்வலத்தில் செல்ல அதிரடிப்படையினர் இடமளிக்கவில்லை.
எம்மீது நடத்தப்பட்ட கல் வீச்சு தாக்குதல் மற்றும் துப்பாக்கி பிரயோகம் காரணமாவே இளைஞர்கள் நாங்கள் இருக்கும் இடத்திற்கு ஓடி வந்தனர். அப்போதுதான் மோதல் ஏற்பட்டது. இதுதான் உண்மை எனவும் தயாரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGSdLahr5.html
அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் அன்ஸில் மீதான தாக்குதல்!- பைசால் எம்.பி கண்டனம்!
[ வியாழக்கிழமை, 19 யூன் 2014, 01:53.55 PM GMT ]
இந்த மிலேச்சத்தனமான தாக்குதல் குறித்து அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது குறித்து பைசால் காசிம் எம்.பி. விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது,
அளுத்கம, தர்கா நகர், மற்றும் வெலிப்பன்ன உள்ளிட்ட பல பகுதிகளிலும் முஸ்லிம்கள் மீது மேகொள்ளப்பட்டு வருகின்ற இனவெறியர்களின் தாக்குதலைக் கண்டித்தே இன்று அட்டாளைச்சேனையில் அமைதியான முறையில் பேரணி ஒன்று இடம்பெற்றதுடன் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
இதன் போதே அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் அன்ஸில் உட்பட சில பொது மக்கள் விஷேட அதிரடிப்படையினரால் தாக்கப்பட்டிருக்கின்றனர். இது மிகவும் கவலைக்கும் கண்டனத்திற்கும் உரிய விடயமாகும்.
மக்கள் தமது உணர்வுகளை ஜனநாயக ரீதியாக வெளிப்படுத்துகின்ற சந்தர்ப்பம் கூட இந்த நாட்டில் மறுக்கப்படுகின்ற அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது.
முஸ்லிம்கள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை மேற்கொண்டு அவர்களது வீடுகள், சொத்துகள் மற்றும் பொருளாதார வளங்களை அழித்தொழிப்பதற்கு கங்கணம் கட்டி செயற்படுகின்ற பொது பல சேனா போன்ற தீவிரவாதிகளை கைது செய்யாமலும் அவர்கள் மீது எத்தகைய நடவடிக்கைகளும் எடுக்கப்படாமலும் இருந்து வருகின்ற சூழ்நிலையில் அப்பாவி முஸ்லிம்கள் மீது படையினர் தாக்குதல் நடத்துவதை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது.
தமது சமூகம் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி முஸ்லிம் மக்கள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்கள் பேரணிகள் நடத்துகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எங்காவது ஒரு மூலையில் பொலிசார் அல்லது படையினர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தப்படுவது வழக்கமாகி விட்டது. இதனை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது.
இன்று அட்டாளைச்சேனையில் தவிசாளர் அன்சில் உட்பட சில பொது மக்கள் படையினரால் தாக்கப்பட்ட சம்பவத்தை பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கவனத்திற்கு கொண்டு வந்திருப்பதுடன் தமது கண்டனத்தையும் தெரிவித்து- உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியிருக்கிறேன்.
நாட்டில் இன்று முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டுமே தனது கழுத்தைக் கொடுத்து போராடி வருகிறது. இந்நிலையில் அனைத்து முஸ்லிம் மக்களும் முஸ்லிம் காங்கிரஸ் எனும் சமூக இயக்கத்தின் கீழ் ஒன்றிணைந்து அதனைப் பலப்படுத்த முன்வர வேண்டும். அதன் மூலமே முஸ்லிம்கள் எதிர்கொண்டுள்ள சவால்களை முறியடிக்க முடியும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்
http://www.tamilwin.com/show-RUmsyGSdLahr6.html
சிங்கள வர்த்தக நிலையங்களை முஸ்லிம்கள் தொடர்ந்தும் தாக்கி வருகின்றனராம்!- ஜாதிக ஹெல உறுமய
[ வியாழக்கிழமை, 19 யூன் 2014, 02:04.57 PM GMT ]
அந்த கட்சியின் ஊடகப் பேச்சாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
அளுத்கம, பேருவளை, தர்கா நகர் போன்ற பகுதிகளில் ஏற்பட்ட பதற்ற நிலை மற்றும் கலவர சம்பவங்களை அடுத்து நிலைமையை கட்டுப்படுத்த சகல தரப்பினருடனும் ஏற்படுத்திக் கொண்ட இணக்கத்தை மீறி, முஸ்லிம் அடிப்படைவாத குழுக்கள், தொடர்ந்தும் சிங்கள வர்ததக நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன.
வெலிப்பன்ன பிரதேசத்திற்கு கடந்த 16 ஆம் திகதி இரவு 10 வான்களில் வந்த முஸ்லிம் குழுவினர் சிங்களவர்களின் வர்த்தக நிலையங்களை தாக்கி சேதப்படுத்தியுள்ளனர். தாக்குதல் நடத்த வந்த நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வெளியிடங்களில் இருந்து வந்தவர்கள் இந்த பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் சம்பந்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இவர்களுக்கு எதிராக உடனடியாக சட்டத்தை அமுல்படுத்தி நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருமாறு பாதுகாப்பு தரப்பினரிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.
சிங்களவர்களின் வர்த்தக நிலையங்கள், வழிபாட்டுத் தலங்களுக்கு பாதுகாப்பு வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொடர்ந்தும் சிங்கள பௌத்த மக்களை ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள முஸ்லிம் அடிப்படைவாத குழுக்கள் மற்றும் நபர்களுக்கு எதிராக சட்டத்தை உடனடியாக செயற்படுத்தி பிரதேசத்தில் அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்குமாறும் பொறுப்புக் கூறவேண்டிய சகலரிடமும் வலியுறுத்தி கேட்டுக்கொள்வதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyGSdLahr7.html
Geen opmerkingen:
Een reactie posten