தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 23 juni 2014

ஐ.நா நிபுணர்கள் குழு இவ் வாரம் அறிவிப்பு – சில்வியா கார்டரைட், மற்றவர் மார்டி அதிசாரி நியமனம்

இலங்கையிலுள்ள இந்திய தூதுவர் மற்றும் ஏனைய தூதுவர்களை அவசரமாக அழைத்த இந்தியா

சிறிலங்கா உள்ளிட்ட அயல்நாடுகளில் உள்ள இந்தியத் தூதுவர்கள் அவசரமாக புதுடெல்லிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இந்திய வெளிவிவகாரக் கொள்கை தொடர்பாக இன்று முழுநாளும், நடக்கவுள்ள கூட்டம் ஒன்றில் பங்கேற்கவுள்ளனர். இந்தக் கூட்டம் இந்திய வெளிவிவகாரச் செயலர் சுஜாதா சிங் தலைமையில் நடைபெறவுள்ளது.
அயல்நாடுகளுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும், அதற்கு இந்திய வெளிவிவகாரக் கொள்கையில் ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்தும், இந்தக் கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்படவுள்ளது. இதில் குறிப்பாக சிறிலங்காவுடனான வெளிவிவகாரக் கொள்கை குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.
இந்தக் கூட்டம், புதிதாகப் பதவியேற்ற நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்தின் முக்கியமானதொரு நகர்வாக கருதப்படுகிறது. அதேவேளை, இதுபோன்றதொரு கூட்டம், நடத்தப்படுவது இதுவே முதல் முறை என்றும் புதுடெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.jvpnews.com/srilanka/74274.html

ஐ.நா நிபுணர்கள் குழு இவ் வாரம் அறிவிப்பு – சில்வியா கார்டரைட், மற்றவர் மார்டி அதிசாரி நியமனம்

ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணைக் குழுவை வழிகாட்டுவதற்கும், ஆலோசனை வழங்குவதற்கும், இரண்டு வெளியக நிபுணர்களை நியமிக்க ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை முடிவு செய்துள்ளார்.
நியூசிலாந்தின் முன்னாள் நீதிபதி, டேம் சில்வியா கார்ட்ரைட் முதலாவது நிபணராகப் பெயரிடப்பட்ட நிலையில், இரண்டாவது நிபுணர் ஆசியா அல்லது ஆபிரிக்காவைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று முன்னர் தகவல்கள் வெளியாகின.
எனினும், இந்தப் பதவிக்கு, ஆசிய, ஆபிரிக்க நிபுணர்கள் எவரும் கிடைக்காத நிலையில், பின்லாந்தின், முன்னாள் அதிபரும், சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்றவருமான மார்டி அதிசாரி நியமிக்கப்படவுள்ளார். ஏற்கனவே, இவர் இரண்டாவது நிபுணராக இடம்பெறவுள்ளதாக, நியூசிலாந்து வானொலி வெளியிட்ட தகவலை புதினப்பலகை ஏற்கனவே செய்தியாக வெளியிட்டிருந்தது.
எனினும், அதன் பின்னர், கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த செவ்வியில், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் பேச்சாளர் ருபேட் கொல்வில், இன்னமும், நிபுணர்கள் பெயரிடப்படவில்லை என்று தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், டேம் சில்வியா கார்ட்ரைட் மற்றும், மார்டி அதிசாரி ஆகியோர் நியமிக்கப்படுவது உறுதியாகியுள்ளதாகவும், அவர்களின் நியமனம் குறித்து இந்தவாரம் சிறிலங்கா அரசாங்கத்துக்குத் தெரியப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கொழும்பு ஆங்கில நாளிதழ் தெரிவித்துள்ளது.
பின்லாந்தின், முன்னாள் அதிபரான மார்டி அதிசாரி கொசோவாவுக்கான ஐ.நா தூதுவராகச் செயற்பட்டவர்.2008ம் ஆண்டு நோபல் சமாதானப் பரிசை வென்ற இவர், உலகின் பல்வேறு முரண்பாட்டுப் பிரதேசங்களில் அமைதியை உருவாக்க பாடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.jvpnews.com/srilanka/74277.html

Geen opmerkingen:

Een reactie posten