தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 23 juni 2014

தமிழ்- முஸ்லிம் அமைப்புகளுக்குத் தடை: அரசாங்கம் தீர்மானம்!

ஜீ.எல் பீரிஸ்- கெஹெலியவுக்கு இடையில் மோதல்?
[ திங்கட்கிழமை, 23 யூன் 2014, 06:51.45 AM GMT ]
அமெரிக்காவின் பொருளாதார தடையை மீறி அரசாங்கம் மூன்றாம் தரப்பின் ஊடாக ஈரானில் இருந்து மசகு எண்ணெயை கொள்வனவு செய்வதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல வெளியிட்ட தகவல் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
அமைச்சர் கெஹெலிய, வெளிவிவகார அமைச்சுக்குரிய விடயங்களில் தலையிடுவது குறித்து அமைச்சர் பீரிஸ், ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடையை மீறி மூன்றாம் தரப்பின் ஊடாக இலங்கை எரிபொருளை இறக்குமதி செய்யவில்லை எனவும் கெஹெலிய வெளியிட்ட தகவல் பொய்யானது எனவும் அமைச்சர் பீரிஸ் கூறியுள்ளார்.
இலங்கை, மூன்றாம் தரப்பின் ஊடாக ஈரானிடம் இருந்து எரிபொருளை இறக்குமதி செய்வதாக ரொய்டர் செய்தி நிறுவனம் அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது.
அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் புதல்வி வெளிவிவகார அமைச்சில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyGRXLafs7.html
சொந்த ஊரில் மீள்குடியேற்றாமல் மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற முடியாது-சுரேஸ் பிரேமச்சந்திரன்
[ திங்கட்கிழமை, 23 யூன் 2014, 07:09.21 AM GMT ]
வடக்கு, கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் அவர்களுடைய சொந்த நிலங்களில் மீள்குடியேற்றப்படாமல் தொடர்ந்தும் நலன்புரி முகாம்களில் வாழ்ந்துகொண்டிருக்கையில், வாழ்வாதாரத்தை ஒருபோதும் மேம்படுத்த முடியாது என ஐ.நாடுகள் சபையின் சர்வதேச அரசியல் விவகாரங்களுக்கான உதவி செயலாளர் நாயகம் ஒஸ்கார் பெர்னாண்டஸ் தரன்கோவிடம் கூட்டமைப்பு சுட்டிக்காட்யிருக்கின்றது.
இலங்கைக்கு நான்கு நாள் விஜயம் மேற்கொண்டிருக்கும் உதவிச் செயலாளர் நாயகத்திற்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பினருக்குமிடையில் இன்று நடைபெற்ற இரண்டாம் நாள் பேச்சுகளின் போதே மேற்படி விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டன எனக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் கூறினார்.
மேற்படி இரண்டாம் நாள் பேச்சுத் தொடர்பாக மேலும் அவர் கூறியவை வருமாறு:-
போரினால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுடைய வாழ்வதார மேம்பாடு, பொறுப்புக்கூறல் மற்றும் அரசியல் தீர்வு தொடர்பாக முக்கியமாக பேசியிருக்கின்றோம். 2009 ஆம் ஆண்டு போர் நிறைவடைந்த பின்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜ.நா செயலாளர் நாயகத்திற்கும் இலங்கை ஜனாதிபதிக்குமிடையில் ஓர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அந்த ஒப்பந்தத்தில் முக்கியமாக குறிப்பிட்டுச் சொல்லப்பட்டிருந்த விடயம் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் அவர்களுடைய சொந்த நிலங்களில் முழுமையாக மீள்குடியேற்றம் செய்யப்படவேண்டும் என்பதாகும்.
ஆனால் வலிகாமம் வடக்கு, முல்லைத்தீவின் எல்லைக் கிராமங்கள் கேப்பாபிலவு, சம்பூர், கிளிநொச்சி, பரவிப்பாஞ்சான் உள்ளிட்ட மக்களுடைய நிலங்களில் போர் நிறைவடைந்து 5 வருடங்கள் கடந்துள்ளபோதும், படையினர் நிலைகொண்டிருக்கும் நிலையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் நலன்புரி முகாம்களிலும், இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் இன்று வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள்.
இந்த நிலையில் இலங்கை அரசாங்கம் ஜ.நா செயலாளர் நாயகத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தைக் கருத்தில் எடுத்திருக்கவில்லை என்பதை நாங்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றோம்.
தற்போது வரையில் முகாம்களில் உள்ள - வெளிநாடுகளில் உள்ள - உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் உள்ள - மக்களுடைய அடிப்படை வாழ்வாதாரம் அவர்களுடைய சொந்த நிலங்களிலேயே இருக்கின்றன.
எனவே அவர்களுடைய சொந்த நிலங்களுக்குச் செல்லவிடாமல் தடுப்பதனால் வாழ்வாதர ரீதியாக அந்த மக்கள் மிக நலிந்த நிலையில் இருக்கின்றார்கள்.
குறிப்பாக வலி.வடக்கு மக்களுடையை, முல்லைத்தீவு எல்லைக் கிராமங்களைச் சேர்ந்த மக்களுடைய அடிப்படை வாழ்வாதார தொழில் விவசாயம். ஆனால் அந்த நிலங்கள் விடுவிக்கப்படவில்லை. எனவே மக்கள் இன்று பட்டினிச்சாவை எதிர்கொண்டிருக்கின்றார்கள்.
இதேபோன்று போரினால் பாதிக்கப்பட்ட மக்களிடம் இருக்கும் வளங்களைப் பறிக்கின்றமை போன்று தமிழ் மக்கள் வாழ்கின்ற பகுதிகளில் உள்ள பெருங்கடல்களில் சிங்கள மீனவர்கள் தொழில் செய்துவரும் நிலையில் அங்கேயும் தமிழ் மக்களுடைய வாழ்வாதாரம் மிகமோசமாக பாதிக்கப்படுகின்றது என்பதை தெளிவாகச் சுட்டிக்காட்டியிருக்கின்றோம்.
இலங்கை அரசாங்கம் 13 ஆம் திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்று தீர்வினை வழங்குவதாகப் பேச்சளவில் கூறி வருகின்றபோதும் நடைமுறையில் அதற்கு முரணாக 13 ஆம் திருத்தத்தில் உள்ள பொலிஸ், காணி அதிகாரங்களை பறித்து அவை தொடர்பாக பேசுவதற்கு எம்மை நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்கு வருமாறு அழைப்பு விடுகின்றமையே இங்கே நடக்கின்ற உண்மையான யார்த்தம்.
வடமாகாண சபைக்கு அதிகாரங்களை வழங்காமல், அதன் செயற்பாடுகளை ஒருபக்கம் முடக்கிக்கொண்டு மறுபக்கம் ஆளுநர் மற்றும் அதிகாரிகளைக் கொண்டு மாகாணசபையை நலிவுபடுத்தும் வகையில் ஒரு நிர்வாகத்தை வடக்கில் நடத்திக் கொண்டிருப்பதனையும் நாங்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றோம். இலங்கையில் உள்ள மற்றைய மாகாணங்களுடன் வடமாகாணத்தை ஒப்பிட முடியாது.
காரணம் நீண்டகாலம் போரினால் பாதிக்கப்பட்ட ஒரு மாகாணமாக வடமாகாணம் இருக்கின்றது. இங்கே போரினால் பாதிக்கப்பட்ட மக்களுடைய வாழ்வாதாரப் பிரச்சினைகள், போரினால் பாதிக்கப்பட்ட அநாதைச் சிறுவர்கள், விதவைப் பெண்கள், அங்கவீனர்கள் மற்றும் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எனப் பல்வேறு தேவைகளையுடைய மக்கள் வாழ்ந்துவருகின்றனர்.
அடிப்படை கட்டுமாண வசதிகள் உள்ளிட்ட பல்வேறு பிற தேவைகளும் மக்களுக்கு இருக்கின்றன. ஆனால் இவற்றைக் கருத்தில் கொண்டு வடமாகாணசபைக்கு உரிய சலுகைகள் வழங்கப்படுவதில்லை. 2009 ஆம் ஆண்டு போர் நடைபெற்ற காலப்பகுதியில் மக்கள் வாழ்ந்த பகுதிகளுக்குள் - குறிப்பாக சூட்டுத்தவிர்ப்பு வலயங்களுக்குள் - தாக்குதல் நடத்தப்பட்டமை மற்றும் காணாமல்போதல்கள், போர்க்குற்றச்சாட்டுக்கள், மனிதத்துவத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக பல்வேறுபட்ட குற்றச்சாட்டுக்களை சர்வதேச சமூகமும் சரி, பாதிக்கப்பட்ட மக்களும் சரி பல்வேறு சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.
ஆனால் மேற்படி விடயங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறும் விடயத்தில் இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் கவனயீனமாக இருகின்றது. இலங்கை அரசாங்கம் நியமித்த நல்லிணக்க ஆணைக்குழு உள்ளிட்ட ஆணைக்குழுக்களிலும் இந்த பொறுப்புக்கூறல் என்பது உரிய வகையில் சுட்டிக்காட்டப்படவில்லை.
இந்நிலையில் மேற்படி விடங்கள் தொடர்பாக - அதிலும் குறிப்பாக காணாமல்போன சம்பவங்கள் தொடர்பில்  நடந்த உண்மைகள் அம்பலப்படுத்தப்பட வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட மக்கள், காணாமல்போனவர்களின் உறவினர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
எனவே பொறுப்புக்கூறல் தொடர்பாக இலங்கை அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும் வகையிலான சர்வதேச அழுத்தம் வழங்கப்படவேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்தியிருக்கின்றோம். - என்றார்.
இன்றைய இரண்டாம் நாள் பேச்சின்போது வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். இந்தச் சந்திப்பு காலை 10.30 தொடக்கம் நண்பகல் 12.30 மணிவரையில் நடைபெற்றது.
http://www.tamilwin.com/show-RUmsyGRXLafty.html
தமிழ்- முஸ்லிம் அமைப்புகளுக்குத் தடை: அரசாங்கம் தீர்மானம்
[ திங்கட்கிழமை, 23 யூன் 2014, 07:15.53 AM GMT ]
இலங்கையில் செயற்படும் இனவாத அமைப்புகள் என்ற பெயரில் தமிழ், முஸ்லிம் அமைப்புகளைத் தடை செய்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
சிறுபான்மையினருக்கெதிரான இனவாத தாக்குதல்களை மேற்கொண்டுவரும் பொதுபல சேனாவைத் தடை செய்ய வேண்டுமென்ற கோரிக்கை வலுப்பெற்று வருகின்றது.
மேலும் பொதுபல சேனா அமைப்பை அரசாங்கமே பின்னின்று இயக்கி வருவதும் அம்பலமாகி வருகின்றது.
இந்நிலையில் பொது மக்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் இலங்கையில் இனவாத, தீவிரவாத செயற்பாடுகளை முன்னெடுப்பதாகத் தெரிவித்து ஒன்பது முஸ்லிம் அமைப்புகள், நான்கு தமிழ் அமைப்புகள் மற்றும் ஒரு சிங்கள அமைப்பைத் தடை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
எனினும் பொதுபல சேனாவிற்குப் பதில் வேறொரு சிங்கள அமைப்பைத் தடை செய்வது குறித்தே அரசாங்கத்தின் உயர்மட்டம் கவனம் செலுத்தி வருவதாக நம்பகமாகத் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பான அறிவித்தல் இன்னும் ஓரிரு நாட்களுக்குள் வெளியாகவுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyGRXLaftz.html

Geen opmerkingen:

Een reactie posten