[ திங்கட்கிழமை, 23 யூன் 2014, 07:41.59 AM GMT ]
இலங்கையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள, புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்து எதுவும் தெரியாது என பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
சுமார் 140 பாகிஸ்தானிய புகலிடக்கோரிக்கையாளர்களை இலங்கை அதிகாரிகள் கைது செய்து தடுத்து வைத்துள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியிட்பட்டிருந்தது.
இந்த நிலையில், பாகிஸ்தானிய புகலிடக் கோரிக்கையாளர்களை கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறித்து எதுவும் தெரியாது என அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிராக செயற்பட்டவர்களே இவ்வாறு புகலிடம் கோரியிருக்கலாம் எனவும் அது பற்றி கருத்து வெளியிட முடியாது எனவும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கையில் புகலிடம் கோரிய பாகிஸ்தானியர்களை நாடு கடத்த வேண்டாம் என ஐக்கிய நாடுகள் அமைப்பின் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் உத்தியோகபூர்வமாக இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyGRXLaft1.html
அரசாங்கத்தில் இருக்கும் தலைவர்கள் இனவாதத்தை போஷித்து வருகின்றனர் - சிங்கள இணையத்தளம்
[ திங்கட்கிழமை, 23 யூன் 2014, 07:27.00 AM GMT ]
சிங்கள மக்களை முஸ்லிம் மக்களுக்கு எதிராகவும் முஸ்லிம் மக்களை சிங்கள மக்களுக்கு எதிராகவும் சிங்கள மக்களை தமிழ் மக்களுக்கு எதிராகவும் தமிழ் மக்களை சிங்கள மக்களுக்கு எதிராகவும் இனவாத ரீதியில் தூண்டும் பின்னணியில் அரசாங்கத்தில் உள்ள இனவாத தலைவர்கள் இருப்பது இந்த நிலைமைக்கு காரணம் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இனவாத செயற்பாடுகள் நாட்டுக்குள் அதிகரித்து வருகின்றன. இந்த செயற்பாடுகளில் ஒரு அங்கமாகவே அண்மையில் அளுத்கம, பேருவளை மற்றும் தர்கா நகர் ஆகிய பகுதிகளில் வன்முறைகள் வெடித்தன. இந்த வன்முறை அதிர்ச்சியில் முழு நாடும் பாதிக்கப்பட்டுள்ளது.
மத தோற்றத்தில் ஏற்பட்டுள்ள இந்த இனவாதத்தை போஷித்தமை தொடர்பான பொறுப்பில் இருந்து இந்த அரசாங்கம் விலகிச் செல்ல முடியாது.
முஸ்லிம் மக்களுக்கு மத்தியில் சிங்கள மக்களுக்கு எதிராக தூண்டுதலை மேற்கொள்ளும் ரவூப் ஹக்கீம், ரிசார்ட் பதியூதீன் தலைமையிலான முஸ்லிம் தலைவர்களும், சிங்கள இனவாதத்தை தூண்டும் விமல் வீரவன்ஸ, சம்பிக்க ரணவக்க போன்ற சிங்கள தலைவர்களும், தமிழ் இனவாதத்தை தூண்டும் டக்ளஸ், கருணா, பிள்ளையான் போன்றவர்களும் இன்றைய அரசாங்கத்திற்குள்ளேயே இருந்து வருகின்றனர் என சிங்கள இணையத்தளம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது.
மத ரீதியான தோற்றத்தில் இனவாதத்தை தூண்டி வரும் பொதுபல சேனா அமைப்பிற்கு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ அனுசரணை வழங்கி வருவது சந்தேகத்திற்கு இடமின்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சிங்கள ராவய மற்றும் இராவணா பலய ஆகிய அமைப்புகளுக்கு விமல் வீரவன்ஸ மற்றும் சம்பிக்க ரணவக்க ஆகியோர் பின்னால் இருந்து ஆதரவு வழங்கி வருகின்றனர்.
கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அமைச்சர் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் தேர்தல் பிரசாரத்தில் இனவாதத்தை கக்கி வந்ததுடன் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சிங்கள இனவாதத்தை கக்கி வந்தது எனவும் அந்த சிங்கள இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyGRXLaft0.html
Geen opmerkingen:
Een reactie posten