தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 25 juni 2014

சிங்கள இயக்குனருக்கு ஆதரவு! கவிஞர் ஜெயபாலன் மீது தாக்குதல்!

இனவாதத்தை தூண்டும் மோதல்களின் பின்னணியில் மூன்று புலனாய்வு அதிகாரிகள்!
[ புதன்கிழமை, 25 யூன் 2014, 02:06.20 PM GMT ]
அளுத்கம சம்பவங்களின் பின்னணியில், அரச புலனாய்வுப் பிரிவின் மூன்று பேர் சம்பந்தப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர குற்றம் சுமத்தியுள்ளார்.
அரச புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளின் தகவல்களை வெளியிடும் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்து, 6 மணித்தியாலங்களில் மங்கள சமரவீர இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர், அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் மற்றும் அதன் இணைப்பதிகாரி ஆகியோர் இதன் பின்னணியில் இருப்பதாகவும் அவர்கள் சிங்கள அடிப்படைவாதிகளுக்கு உதவி வருவதாகவும் மங்கள சமரவீர குற்றம் சுமத்தியுள்ளார்.
அரச புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர்கள் குறித்து நாட்டுக்கு தகவல்களை வெளியிடக் கூடாது என்றாலும் அரச புலனாய்வுப் பிரிவிற்குள் இருந்து கொண்டு, பொதுபல சேனா, சிங்கள ராவய போன்ற அமைப்புகளுக்கு உதவி செய்து, நாட்டிற்குள் இனவாத தீயை ஏற்படுத்த முயற்சிக்கும் சகல புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் பற்றி நாட்டுக்கு தெரியப்படுத்த வேண்டியது மக்களின் பிரதிநிதி என்ற வகையில் தனது கடமை எனவும் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
அளுத்கம சம்பவத்தின் பின்னர், கைது செய்யப்பட்ட 13 சந்தேக நபர்களை உடனடியாக விடுதலை செய்வதற்காக இந்த அதிகாரிகள் அழுத்தங்களை கொடுத்துள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRZLaev7.html
ஜனாதிபதி மாலைதீவு பயணம்!- 3 உடன்படிக்கைகள் கைச்சாத்து!-சிறுபான்மை மக்களுக்கு எதிராக தாக்குதல் நடத்த திட்டம்?
[ புதன்கிழமை, 25 யூன் 2014, 02:12.34 PM GMT ]
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டு இன்று மாலை மாலைதீவு சென்றார்.
மாலைதீவு ஜனாதிபதி யாமின் அப்துல் கையூமின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அங்கு சென்றுள்ளார்.
ஜனாதிபதி தனது இந்த விஜயத்தின் போது மாலைதீவு ஜனாதிபதியுடன் சுற்றுலா, சுகாதாரம், விமான சேவைகள், பாதுகாப்பு உள்ளிட்ட சில விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளார்.
மாலைதீவில் இரண்டு நாட்கள் தங்கியிருக்கும் ஜனாதிபதி சீசெல்ஸ் அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று அங்கு பயணம் செய்ய உள்ளார்.
சீசெல்சில் இரண்டு நாட்கள் தங்கியிருக்கும் ஜனாதிபதி, அந்நாட்டின் உயரதிகாரிகள் பலரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இலங்கைக்கும் மாலைதீவுக்கு இடையில் மூன்று உடன்படிக்கைகள் கைச்சாத்து
இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையில் மூன்று முக்கிய உடன்படிக்கைகள் கைச்சாத்தாகியுள்ளன.
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக மாலைதீவை சென்றடைந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று அந்த நாட்டின் ஜனாதிபதி அப்துல் கையூமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதன்போது குறித்த மூன்று உடன்படிக்கைகள் கைச்சாத்தாகியுள்ளன.
சுகாதார ஒத்துழைப்பு புரிந்துணர்வு உடன்படிக்கை, முதலீட்டு அபிவிருத்தி புரிந்துணர்வு உடன்படிக்கை மற்றும் தேடுதல் மற்றும் மீட்டலுக்கான உடன்படிக்கை என்பன இவ்வாறு கைச்சாத்தாகியுள்ளன.
ஜனாதிபதி இல்லாத நாட்களில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக தாக்குதல் நடத்த திட்டம்?
ஜனாதிபதி நாட்டில் இல்லாத காலப்பகுதியில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக தாக்குதல்கள் இடம்பெறலாம் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இலங்கையின் புலனாய்வு தகவல்களை மேற்கோள்காட்டி ஊடகம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மாலைதீவுக்கு சென்றுள்ளார்.
மாலைதீவில் இருந்து அவர் சீசெல்ஸ் செல்வார் என்றும் ஜனாதிபதியின் ஊடகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் அவர் நாட்டில் இல்லாத காலப்பகுதியில் குறிப்பிட்ட சில பிரதேசங்களில் கலவரங்களை ஏற்படுத்த அடிப்படைவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஜனாதிபதி பொலிவியா சென்றிருந்தவேளையிலே அளுத்கம, பேருவளை மற்றும் தர்ஹா நகரில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyGRZLaewy.html
பிரித்தானியாவில் பணம் திருடிய இலங்கையருக்கு சிறை!
[ புதன்கிழமை, 25 யூன் 2014, 02:42.03 PM GMT ]
பிரித்தானியாவில் செல்வந்தர் ஒருவரிடம் இருந்து 1.6 மில்லியன் பவுண்களை திருடிய இலங்கையர் ஒருவருக்கு பிரித்தானிய நீதிமன்றம் ஒன்று மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது.
இலங்கையில் பிறந்த அவர் அமெரிக்காவில் ஹொலிவுட் திரைப்படத் தயாரிப்பாளர் என்று தம்மை அடையாளப்படுத்தி குறித்த செல்வந்தருக்கு அறிமுகமாகியுள்ளார்.
பின்னர் அவரிடம் இருந்து பணத்தை பெற்ற ஆடம்பரமான வாழ்க்கையை நடத்தி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் குறித்த செல்வந்தர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் காவற்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyGRZLaew0.html
ஒஸ்கார் பெர்ணாண்டிஸ் அரசியல் அபிவிருத்தியைத் தாண்டி எதனையும் பேசவில்லை: ஐ.நா
[ புதன்கிழமை, 25 யூன் 2014, 02:46.44 PM GMT ]
இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கு பொறுப்பான உதவி செயலாளர் ஒஸ்கார் பெர்ணான்டிஸ் (Oscar Fernández) யுத்தத்துக்கு பின்னரான அபிவிருத்தியை கடந்து வேறு எந்த விடயத்தையும் இலங்கையில் கலந்துரையாடவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் ஸ்டீவன் டுஜாரிக் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற பௌத்த அடிப்படைவாதிகளின் வன்முறைகள் மற்றும் ஊடக கட்டுப்பாடுகள் தொடர்பில் அவர் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினாரா? என்று இன்னர் சிட்டி பிரஸ் அவரிடம் கேள்வி எழுப்பி இருந்தது.
இதற்கு பதில் வழங்கிய பேச்சாளர், யுத்தத்துக்கு பின்னராக அபிவிருத்தியை கடந்து வேறு எதனையும் பேசவில்லை என்று கூறியுள்ளார்.
இதேவேளை இன்னர்சிட்டி பிரஸ் முஸ்லிம்களுக்கு எதிராக இலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் பல நாட்களாக கேள்வி எழுப்பி வருகின்ற போதும், ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் அது குறித்து எந்த பதிலையும் வழங்காதிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyGRZLaew1.html
சிங்கள இயக்குனருக்கு ஆதரவு! கவிஞர் ஜெயபாலன் மீது தாக்குதல்
[ புதன்கிழமை, 25 யூன் 2014, 02:48.14 PM GMT ]
சிங்களத் திரைப்பட இயக்குனர் பிரசன்ன விதானகேவிற்கு ஆதரவாக கருத்து வெளியிட்ட கவிஞர் ஜெயபாலன் மீது தமிழகத்தில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிங்கள திரைப்பட இயக்குனர் பிரசன்ன விதானகே பிறகு என்ற பெயரில் சிங்களத் திரைப்படமொன்றை இயக்கியுள்ளார். போருக்குப் பின்னரான தமிழ் மக்களின் வலிகளை இப்படம் துல்லியமாக பிரதிபலிப்பதாக ஈழத் தமிழர்கள் பலரும் கருத்து வெளியிட்டிருந்தனர்.
இந்நிலையில் இத்திரைப்படத்தை ஆங்கில உப தலைப்புகளுடன் தமிழகத்தில் வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் சிங்களத் திரைப்படம் என்பதால் வழக்கம் போன்று தமிழகத்தில் உள்ள ஈழ ஆதரவாளர்கள் இத்திரைப்படத்திற்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
எனவே பத்திரிகையாளர் மற்றும் நடுநிலையாளர்களுக்கான சிறப்புக் காட்சியொன்றுக்கு ஏற்பாடு செய்த தமிழ் ஸ்ரூடியோ அருண், நேற்று இரவு வடபழனி ஆர்கேவி ஸ்ரூடியோவில் சிறப்புக் காட்சி மற்றும் இயக்குனருடனான சந்திப்புக்கும் ஏற்பாடு செய்திருந்தார்.
எனினும் இதில் கலந்து கொண்ட பத்திரிகையாளர்கள் மற்றும் ஈழத்தமிழ் அபிமானிகள் அனைவரும் ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்று திரைப்படத்தில் குறிப்பிடவில்லை என்று முதல் ஆட்சேபத்தை எழுப்பினர். சிங்கள மக்கள் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொண்ட இனப்படுகொலை என்று குறிப்பிட்டு இறுதிப் போர் குறித்து கருத்து தனது கருத்தை வெளியிடுமாறு இயக்குனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
எனினும் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகளை தான் எதிர்ப்பதாக கூறிய இயக்குனர், அனைத்து சிங்கள மக்களும் கெட்டவர்கள் இல்லை என்றும், இலங்கையில் இருந்து கொண்டு தமிழ் மக்களுக்கு ஆதரவாக செயற்படுவதன் சிரமத்தை தமிழகத்தில் உள்ளவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் பணிவான முறையில் வேண்டுகோள் விடுத்தார்.
அதன் பின்பும் சிங்கள இனத்தின் இனப்படுகொலை என்றே குறிப்பிட்ட பலரும், அது தொடர்பாக இயக்குனர் மீதும் குற்றம் சாட்டிப் பேசியதுடன், சிங்கள அரசாங்கத்தை கடுமையாக விமர்சனம் செய்யும் தமது கண்ணோட்டத்தில் ஒத்துப் போகாத வகையில் திரைப்படம் இயக்கியிருப்பது குறித்து பிரசன்ன விதானகேவை கடும் வார்த்தைகளால் கண்டித்தனர்.
மேலும் திரைப்படத்தின் இரண்டு இடங்களில் சிங்களவர் ஒருவரின் வாயில் இருந்து விடுதலைப் புலிகளை தீவிரவாதிகள் என்று குறிப்பிட்டுள்ளதை காரணம் காட்டி பெரும் ரகளையில் ஈடுபட்டனர். இயக்குனர் பிரசன்ன விதானகே மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதன் போது இயக்குனர் ஒருசில சிங்கள மக்கள் அப்படித்தான் புலிகளை குறிப்பிடுவதாகவும், அதனையே படத்தில் காட்சிப்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்தார்.
மற்றபடி சிங்கள மக்களின் மனசாட்சியை தட்டி எழுப்பும் வகையிலேயே தனது திரைப்படம் இயக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். எனினும் அதனை ஏற்றுக் கொள்ளாத பலரும் மன்னிப்புக் கேட்க வேண்டுமென்று இயக்குனரை வற்புறுத்திக் கொண்டிருந்தார்கள்.
அப்போது குறுக்கிட்ட இலங்கையின் பிரபல கவிஞரும், திரைப்பட கலைஞருமான ஜெயபாலன், சிங்களவராக இருந்து கொண்டு தமிழ் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதன் சிரமம், அதிலும் இலங்கையில் இருந்து கொண்டு அவ்வாறு செயற்படுவதன் சிரமத்தை விளக்கி பிரசன்ன விதானகேவிற்கு ஆதரவாக குரல் கொடுத்தார்.
அவரது கருத்தினை ஏற்றுக்கொள்ளாத சிலர் கவிஞர் ஜெயபாலன் மீது கடும் தாக்குதல் மேற்கொண்ட நிலையில், அவர் உடனடியாக பொலிஸ் பாதுகாப்புடன் மண்டபத்தை விட்டு அழைத்துச் செல்லப்பட்டார்.
இவ்வாறான சம்பவங்கள் காரணமாக சிங்கள மக்கள் மத்தியில் ஈழத் தமிழருக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் முற்போக்குச் சக்திகளை நாம் இழந்துவிடக் கூடிய அபாயம் இருப்பதாக இன்னொரு ஈழத்தமிழர் கடுமையான குரலில் கண்டனம் தெரிவித்த போதும், கூச்சல்களின் மத்தியில் அவரது குரல் எடுபடவில்லை.
http://www.tamilwin.com/show-RUmsyGRZLaew2.html

Geen opmerkingen:

Een reactie posten