[ புதன்கிழமை, 25 யூன் 2014, 03:54.53 PM GMT ]
இக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 10 சந்தேக நபர்களில் 4 பேர் குற்றமற்றவர்கள் என்று விடுவிக்கப்பட்டதுடன், மூன்று பேருக்கு பதினைந்தரை வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டதுடன் 3 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
நுவரெலியாவில் ஜூரி சபை அமைத்து தீர்ப்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyGRZLaew5.html
வடக்கு முதல்வர்- சுவிட்சர்லாந்து தூதுவர் சந்திப்பு
[ புதன்கிழமை, 25 யூன் 2014, 02:58.41 PM GMT ]
வடமாகாணத்தில் தொடர்ந்தும் இராணுவம் இருப்பதால் பொதுமக்களுடைய வாழ்க்கைக்கும் பொருளாதார விருத்திக்கும் எவ்வாறு பங்கம் விளைவிக்கின்றது என்பது தொடர்பாக இலங்கைக்கான சுவிஸ் தூதுவரிடம் எடுத்துக் கூறியதாக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்ட சுவிஸ் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் தோமஸ் லிட்செர் மற்றும் அவரது குழுவினர், வடமாகாண முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடினர்.
இந்த்ச சந்திப்பு குறித்து வடக்கு முதல்வர் கருத்து வெளியிடுகையில்,
வடகிழக்கு மாகாணங்கள் தமிழ் பேசும் மக்களின் பிரதேசமாக இதுவரை காலமும் இருந்து வந்ததென்பதையும் நடுவிலே சிங்களக் குடியேற்றங்களை முன்னிறுத்தி வடக்கும் கிழக்கும் தொடர்ச்சியாக தமிழ் பேசும் மக்களின் இடங்களாக இருக்கவில்லை என்ற கருத்தை முன்வைப்பதற்காக 450 குடும்பங்களை தெற்கிலிருந்து கொண்டுவந்து குடியேற்றி உள்ளார்கள் என்பதையும்,
அங்குள்ள மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டவர்கள் அந்தத் தொழிலை பாரம்பரியமாக செய்த விதத்திலே செய்ய முடியாமல் அவர்களைத் தடைசெய்து, தெற்கிலிருந்து வந்தவர்கள் தடைசெய்யப்பட்ட முறைகளிலே அந்த மீன்பிடித் தொழிலைச் செய்வதற்கு எவ்வாறு அனுசரணைகள் இராணுவத்தினரால் வழங்கப்படுகின்றன என்பது பற்றி எடுத்துக்காட்டினேன் என்றார்.
மேலும் வருங்காலத்தில் ஜெனிவா பிரேரணை காரணமாக விசாரணை நடைபெற்றால், அந்த விசாரணையின் போது எவ்வாறான ஒரு சூழலில், இங்கு என்ன நடைபெற்றது என்பவை சம்பந்தமாக சர்வதேச நாடுகள் அறிந்து கொண்டதன் பின், இராணுவம் பற்றிக் குறிப்பிடும் விடயங்களை அவர்கள் கட்டாயமாக கவனத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என்பது பற்றி சுவிஸ் தூதுவர் எனக்கு சுட்டிக்காட்டினார் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRZLaew3.html
பாகிஸ்தான் விமானம் மீதான தாக்குதலுக்கு இலங்கை கண்டனம்
[ புதன்கிழமை, 25 யூன் 2014, 04:13.16 PM GMT ]
பாகிஸ்தானின் பேஷ்வாரில் உள்ள பாசா கான் விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டமைக்கு இலங்கை அரசாங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது.
விமான நிலையத்திலிருந்த விமானம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் பெண் ஒருவர் கொல்லப்பட்டதுடன், இரண்டு விமான சிற்பந்திகள் காயமடைந்துள்ளனர்.
மிருகத் தனமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
பயங்கரவாத நடவடிக்கைகளை முறியடிப்பதற்கு முழு அளவில் ஒத்துழைப்பு வழங்கப்படும் என இலங்கை அறிவித்துள்ளது.
தீவிரவாதிகள் குறித்த விமானத்தின் மீது நேற்று துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இந்த விமானத்தில் 178 பயணிகள் இருந்ததாகவும், சவூதி அரேபியா நோக்கிப் பயணம் செய்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyGRZLaew6.html
அளுத்கம சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று நிறுவப்பட வேண்டும்!
[ புதன்கிழமை, 25 யூன் 2014, 04:26.05 PM GMT ]
அளுத்கம பிரதேசத்தில் வன்முறைகள் இடம்பெறக்கூடுமென இரண்டு மாதங்களுக்கு முன்னதாக எச்சரித்தேன். குறுஞ்செய்தி தொடர்பிலும் குறிப்பிட்டேன்.
அவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது என பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க தெரிவித்தார்.
அளுத்கம சம்பவம் தொடர்பில் காணொளிகள் காணப்படுகின்றன. அவற்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பார்வையிட வேண்டும்.
பக்கச்சார்பற்ற வகையில் விசாரணை நடாத்தி குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தராதரம் பாராது தண்டனை விதிக்கப்பட வேண்டும்.
தராதரம் பாராது குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் ஜனாதிபதி ருவிட்டரில் தெரிவித்தார். எனினும், இதுவரையில் ஒருவரைக் கூட கைது செய்ய முடியவில்லை.
சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் மூலம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோருவதாக அசாத் சாலி இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRZLaew7.html
யாழில் கேரள கஞ்சாவின் பயன்பாடு அதிகரிப்பு: விற்பனை செய்த நபரொருவர் கைது
[ புதன்கிழமை, 25 யூன் 2014, 04:34.20 PM GMT ]
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
குருநகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, பொலிஸார் நடத்திய தேடுதல் வேட்டையின்போதே மேற்படி நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்திருக்கின்றனர்.
மேலும் குறித்த நபரிடமிருந்து 2 கிலோ கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை பொலிஸாருக்கு மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையிலேயே மாதகல் பகுதியில் 150 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனவே பொதுமக்கள் பொலிஸாருக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை யாழ்.நகரப் பகுதியில் குறிப்பாக பேருந்து நிலையம் மற்றும் பழங்கள் விற்பனை செய்யும் தெருக்கடைகள் அமைந்துள்ள பகுதிகளில் அதகளவு போதைப் பொருள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
மிக அசாதாரணமாக நடமாடும் நபர்களை நாடி ஒருவர் செல்வார், அவர் உடனே ஒரு தீப்பெட்டியை அவரிடம் கொடுக்க அதனைப் பெற்றுக் கொண்டு அந்தநபர் சென்று விடுகின்றார்.
இவ்வாறு யாழ்.நகரப் பகுதியில் போதைப்பொருள் குறிப்பாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கேரளாவிலிருந்து இந்திய மீனவர்கள் மூலம் இந்த கஞ்சா இலங்கைக்கு குறிப்பாக யாழ்.குடாநாட்டுக்கு கடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
http://www.tamilwin.com/show-RUmsyGRZLaexy.html
Geen opmerkingen:
Een reactie posten