[ புதன்கிழமை, 25 யூன் 2014, 01:31.14 PM GMT ]
வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான பா.கஜதீபன், ச.சுகிர்தன், அனந்தி சசிதரன் ஆகியோரது பொலிஸ் பாதுகாப்பே இவ்வாறு திரும்பப்பெறப்பட்டுள்ளன.
வடமாகாண சபையின் உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் அதிகாரம் தனக்கு இல்லை என்று தெரிவித்து குறித்த உறுப்பினர்கள் மூவருக்கும் றொஹான் டயஸ் அனுப்பி வைத்துள்ளார்.
அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது,
தங்களது பாதுகாப்புக்காக பொலிஸ் உத்தியோகத்தர்களைப் பெற்றுத் தருவதற்காக சட்டம் மற்றும் ஒழுங்கு சம்பந்தமான அமைச்சின் மூலம் அனுமதி பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
எனது பதவி நிலைக்குரிய அதிகார எல்லையின் பிரகாரம் தங்களுக்கு நெருங்கிய பாதுகாப்பு உத்தியோகத்தர்களை பெற்றுத்தர போதுமான அதிகாரம் எனக்கு இல்லை.
மேற்குறிப்பிடப்பட்ட அனுமதியைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கின்றேன். இது சம்பந்தமாக தங்களுக்கு இடையூறுகள் ஏற்படின் அதற்காக எனது மனவருத்தத்தைத் தெரிவித்துகொள்கிறேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து தமக்கு கடிதங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சுகிர்தன், கஜதீபன் ஆகியோர் உறுதிப்படுத்தினர்.
எனினும் தனக்கு இதுவரை உத்தியோகபூர்வ அறிவித்தல் கிடைக்கப் பெறவில்லை என்றும், ஆனால் விடயம் சரியானதுதான் என்றும் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRZLaev3.html
ஆங்கில திரைப்படத் தயாரிப்பாளர் எனக் கூறி பண மோசடி செய்த இலங்கை நபருக்கு சிறைத் தண்டனை
[ புதன்கிழமை, 25 யூன் 2014, 01:37.10 PM GMT ]
47 வயதான தம்மித நிக்கபெத்த என்ற இந்த நபருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கலிபோர்னியாவின் மலிபு என்ற இடத்தில் ஹொலிவூட் முறையிலான வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளார். அவர் ஸ்பெயின் முறையிலான வில்லாவில் வசித்து வந்துள்ளதுடன் இலங்கை மற்றும் கேன்ஸ் திரைப்பட விழாக்களுக்கு சென்று வந்துள்ளார்.
லொஸ் ஏஞ்சலிசிஸில் உள்ள திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஊடாக 2006 ஆம் ஆண்டு முதல் சந்தேக நபர் பெறுமதி சேர் வரியில் இருந்து திரைப்பட செலவுகளுக்காக 11 மில்லியன் பவுண்ட்ஸ்களை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
பிரித்தானியாவில் த பிளையின் ஸ்கொட்மேன் என்ற திரைப்படத்தை தயாரிக்கும் பணியிலும் படப்பிடிப்புகளிலும் இந்த நபர் ஈடுபட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
லொஸ் ஏஞ்சலிசிஸில் உள்ள திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஊடாக 2006 ஆம் ஆண்டு முதல் சந்தேக நபர் பெறுமதி சேர் வரியில் இருந்து திரைப்பட செலவுகளுக்காக 11 மில்லியன் பவுண்ட்ஸ்களை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
பிரித்தானியாவில் த பிளையின் ஸ்கொட்மேன் என்ற திரைப்படத்தை தயாரிக்கும் பணியிலும் படப்பிடிப்புகளிலும் இந்த நபர் ஈடுபட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
முன்னணி ஹொலிவூட் நடிகர்கள் மற்றும் பிரபலமான எழுத்தாளர்களுடன் பணியாற்றி வந்துள்ளதாகவும் கூறியே சந்தேக நபர் இந்த மோசடியில் ஈடுபட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyGRZLaev4.html
மங்கள சமரவீர தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
[ புதன்கிழமை, 25 யூன் 2014, 01:38.44 PM GMT ]
நாட்டில் நடக்கும் சகல இனவாத மோதல்களின் பின்னணியில் புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரிகள் இருப்பதாக மங்கள வெளியிட்டிருந்த தகவல் குறித்து பொலிஸார் அவரிடம் விசாரணைகளை நடத்த உள்ளனர்.
மங்கள சமரவீரவிடம் விசாரணைகளை நடத்த சபாநாயகரிடம் இருந்து இதுவரை அனுமதி கிடைக்காததால், மங்களவை புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்க முடியாதுள்ளதாக தகவல்கள் தெரிவித்தன.
http://www.tamilwin.com/show-RUmsyGRZLaev5.html
கடற்படையின் அடுத்த தளபதி ஜயந்த பெரேரா- கரையோரக் கண்காணிப்புக்கு புதிய படகு! கடற்படைக்கு ஆஸி. அன்பளிப்பு
[ புதன்கிழமை, 25 யூன் 2014, 01:47.29 PM GMT ]
தற்போதைய நிலையில் கடற்படையின் தலைமை அதிகாரியாக பணியாற்றும் இவர், எதிர்வரும் ஜுலை 1ம் திகதி முதல் இலங்கை கடற்படையின் தளபதியாக பொறுப்பேற்றுக் கொள்ளவுள்ளார்.
ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்சவின் நெருங்கிய உறவினரான இவரை கடற்படை தளபதியாக நியமிக்குமாறு கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்ததாக சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் கடற்படையின் அடுத்த தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள ஜயந்த பெரேராவுக்கு நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதியின் மூத்த புதல்வருமான நாமல் ராஜபக்ச முதலாவதாக வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
ரியர் அட்மிரல் ஜயந்த பெரேரா 1978ம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் திகதி இலங்கை கடற்படையில் இணைந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கரையோரக் கண்காணிப்புக்கு புதிய படகு! கடற்படைக்கு ஆஸி. அன்பளிப்பு
இலங்கை கடற்படைக்கு புதிய கரையோரக் கண்காணிப்புப் படகு ஒன்றை அவுஸ்திரேலிய அரசாங்கம் அன்பளிப்புச் செய்துள்ளது.
இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக படகுகள் மூலம் பயணம் செய்து அவுஸ்திரேலியா செல்லும் குடியேற்றவாசிகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்கு உதவும் வகையிலேயே இந்தப் படகு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதமும் இது போன்ற படகு ஒன்றை அவுஸ்திரேலிய அரசாங்கம் அன்பளிப்புச் செய்திருந்தது. அதன் பின் சட்டவிரோதக் குடியேற்றவாசிகளின் படகுப் பயணங்கள் பெருமளவு குறைந்துள்ள நிலையில் இந்த இரண்டாவது படகு அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது.
கண்காணிப்பு நடவடிக்கைகளுக்குத் தேவையான சகல வசதிகளையும் உள்ளடக்கிய இந்தப் படகு இன்று காலை கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyGRZLaev6.html
Geen opmerkingen:
Een reactie posten