இந்த அதிர்ச்சி தரும் சம்பவம் இடம்பெற்றுள்ள இடம் பிரித்தானியா பேமிங்ஹாம் ஆகும். சிறையில் உள்ள கைதி மாரடைப்பு நோயாளி என்றும் அவர் ஒவ்வொரு 15 நிமிடமும் தீவிர கவனத்தில் வைத்திருக்க வேண்டியவர் என்பதும் காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆயினும் இவர்கள் தங்கள் கவனத்தை மேசை மீது இருந்த கணணியிலும் அதில் வந்த ஆபாச காட்சிகளிலுமே பதித்துள்ள்னர் 2 பிள்ளைகளின் தந்தையான லியோட் பட்லர் எனும் 39 வயது நபரே இவ்வாறு போதை வழக்கு காரணமாக கைது செய்யப்பட்டு மாரடைப்பால் துடித்து இறந்தவராவார்.
இச்சம்பவம் கடந்த 2010 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் இடம்பெற்றுள்ளது.
கைதி மருத்துவ உதவி வேண்டியமையும் அக்கணத்தில் காவலர்கள் அனைவரும் ஆபாச காட்சிகளை பார்த்து ரசிக்கும் காட்சி காவல்துறை இரகசிய கண்காணிப்பு கருவியில் பதிவாகியுள்ளது. இந்த செயல் தொடர்பில் காவலர்களின் நடத்தை பொருத்தமற்றது என்றும் ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும் காவல்துறை அறிக்கை தெரிவிக்கின்றது. விசாரணையின் ஒரு கட்டமாக காவலுக்கு பொறுப்பாக இருந்த சாஐன்ட் மாக் அல்பட் என்பவர் குறித்த அந்த கைதியை ஒவ்வொரு 15 நிமிடத்திலும் சென்று சரிபார்த்ததாக பொய்யாக பதிவேடு தயார்படுத்தியமை பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு புறத்தில் கைதி மாரடைப்பினால் துடித்துக்கொண்டிருக்க மறுபுறத்தில் காவலர்கள் சிரித்துக்கொண்டும் தங்களுக்குள் பகிடிவிட்டுக்கொண்டும் இருப்பது தெளிவாக தெரிகின்றது. இன்னொரு புறத்தில் பொலிஸ் கான்ஸ்ட்டபிள் டீன் வூட்கொக் என்பவர் தனது சொந்த விடயம் தொடர்பாக தொலைபேசியில் பேசிக்கொண்டும் இருக்கின்றார். இந்த நிலை பற்றி கருத்து தெரிவித்த பொலிஸ் மேலதிகாரி இக்காவலர்களின் முறையற்ற நடத்தையால் பட்லர் இறந்தமை கவலை அளிப்பதாக கூறினார்.
கைது செய்யப்படும்போதே சிறிது அசாதாரண நிலையில் இருந்த பட்லர் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்படுவதற்கு பதில் சிறையில் அடைக்கப்பட்டமை மிகவும் மோசமான நேரம் என்றும் தெரிவித்தார். முறையாக அவர் நேரடியாகவே மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டிருப்பின் அவர் காப்பாற்றப்பட்டிருப்பார் என்கிறார் இன்னொரு அதிகாரி . குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட 3 காவல்துறை அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பின்குறிப்பு:- கண்காணிப்பு கருவியை மேலும் ஆய்வு செய்ததில் பட்ளரை பொலிஸ் வாகனத்தில் இருந்து காலில் பிடித்து இழுத்து கொண்டு வருவதும் அவரது தலையை சிறை சுவரில் மோதுவதும் போன்ற கொடுமையான காட்சிகள் பதிவாகியுள்ளன
Geen opmerkingen:
Een reactie posten