[ வியாழக்கிழமை, 26 யூன் 2014, 10:38.37 AM GMT ]
இலங்கையின் நீண்டகால ஆயுத மோதல்களின் இறுதிக் கட்டத்தில் என்ன நடந்தது என்பதை அறியவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி, உண்மை மற்றும் இழப்பீடுகளை ஈடு செய்யும் முயற்சியில் இது வரவேற்கத்தக்க முன்னேற்றகரமான ஒரு அடையாளமாகும் என மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் அரச படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான ஆயுதம் தாங்கிய மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர் குற்றங்கள் குறித்து விசாரிக்க ஐ.நா பாகிஸ்தானின் மனித உரிமை ஆர்வலரான அஸ்மா ஜஹாங்கீர், பின்லாந்தின் முன்னாள் ஜனாதிபதியும் நோபல் சமாதான பரிசை பெற்றவருமான மார்டி அத்திசாரி மற்றும் நியூசிலாந்தின் முன்னாள் ஆளுநர் ஜெனரலும் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியுமான சில்வியா கார்ட்ரைட் ஆகியோரை நியமித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyGRaLbnr3.html
மாணவர்களின் படைப்புக்குத் தடை- யாழ் பல்கலையில் அச்சுறுத்தல்
[ வியாழக்கிழமை, 26 யூன் 2014, 10:39.47 AM GMT ]
குறித்த நாடகத்தில் பல்கலைக் கழகத்தினரை அவமானப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதால் நிர்வாகம் இதனைத் தடை செய்துள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர்களால் நீண்ட காலமாக மாணவர்கள் எதிர்நோக்கி வருகின்ற கசப்பான சம்பவங்களைக் கதைக்கருவாகக் கொண்டு ஒரு ஆற்றுகை தயார் செய்யப்பட்டிருந்ததாகவும் அதனை இன்று ஆற்றுகை செய்ய முடிவெடுக்கப்பட்டதாகவும் நாடகமும் அரங்கியலும் மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் இன்று காலை 11 மணியளவில் நாடகத்தினை அரங்கேற்றுவதற்கு மாணவர்கள் தயாராகியிருந்தனர். ஆனால் இந்த நாடகத்தை அரங்கேற்ற கூடாது என நிர்வாகத்தினர் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.
மீறி நாடகம் அரங்கேற்றப்பட்டால் விளைவுகளை எதிர் நோக்க வேண்டிவரும் என நிர்வாகத்தினர் அச்சுறுத்தியதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பல்கலைக் கழக நுண்கலைத் துறைத் தலைவியை மாணவர்கள் சந்திக்கச் சென்ற போது அவர் தனக்கு நேரம் இல்லை சந்திக்கக் முடியாது என தெரிவித்ததாக மாணவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyGRaLbnr4.html
நரேந்திர மோடி இலங்கை விடயத்தில் தமிழக அழுத்தங்களுக்குள் சிக்க விரும்பவில்லை!
[ வியாழக்கிழமை, 26 யூன் 2014, 10:55.39 AM GMT ]
த ஏசியன் ஏஜ் பத்திரிகை இதனைத் தெரிவித்துள்ளது.
நரேந்திரமோடி இந்தியாவின் பிரதமராக பதவி ஏற்று 30 நாட்கள் கடந்துள்ள நிலையில், அவரது செயற்பாடுகள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்காசிய நாடுகளின் தலைவர்களை தமது பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்ததன் மூலம் உலகின் கவனத்தை நரேந்திரமோடி ஈர்த்திருந்தார்.
இதன் மூலம் இந்தியாவின் வெளிநாட்டு கொள்கையில் மாற்றங்கள் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும் இலங்கை தமிழர்களின் விடயத்தை பொறுத்தவரையில் அவர் தமிழ் நாட்டின் அழுத்தங்களுக்குள் இறுகிக் கொள்ள விரும்பவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கையில் கைது செய்யப்பட்டிருந்த மீனவர்களை விடுவிக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் இரண்டு கடிதங்களை அனுப்பி இருந்த போதும், அதற்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து எந்த ஒரு பதிலும் அனுப்பப்பட்டிருக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
எனினும் தடுப்பில் இருந்து மீனவர்களை விடுவிக்க இந்திய வெளிவிவகார அமைச்சு இராஜதந்திர ரீதியான செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyGRaLbnr6.html
Geen opmerkingen:
Een reactie posten