[ வியாழக்கிழமை, 26 யூன் 2014, 11:41.19 AM GMT ]
முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைக் கண்டித்து சம உரிமை இயக்கம் இன்று அவுஸ்ரேலியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது.
அவுஸ்ரேலியாவில் உள்ள இலங்கை கன்பரா நாடாளுமன்றத்துக்கு எதிரில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
கடந்த காலம் முழுவதும் படிப்படியாக வளர்ச்சியடைந்து வந்த இந்த துரதிஷ்டவசமான இனவாத நிலைமைகள், அண்மையில் அளுத்கம மற்றும் பேருவளை நகரங்களில் வன்முறையாக வெடித்தன.
இதற்கு எதிர்ப்பும் கண்டனமும் வெளியிட்டு இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
அவுஸ்ரேலியாவில் இன்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம்களும், தமிழர்களும், கலந்து கொண்டனர்.
சகல இனங்களுக்கு சொந்தமான இலங்கையில் அனைவரும் ஒன்றிணைந்து இன மற்றும் மத ரீதியான அடிப்படைவாதத்திற்கு எதிராக குரல் கொடுக்க அவுஸ்ரேலியாவில் வாழும் இலங்கையர்களுக்கு கிடைத்த இந்த சந்தர்ப்பம் மகந்தான சந்தர்ப்பம் என முஸ்லிம்களின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.
இலங்கை அரசாங்கம் இனவாத வன்முறைகளை தூண்டும் செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது, அவற்றை மறைமுகமாக ஆதரிப்பதாகவும் எனவும் அரசாங்கத்தின் இந்த செயற்பாடுகளை வன்மையாக கண்டிப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmsyGRaLbnr7.html
மத விரோதச் செயல்கள் நிறுத்தப்பட வேண்டும்: மன்னார் ஆயர்
[ வியாழக்கிழமை, 26 யூன் 2014, 12:10.43 PM GMT ]
நேற்று மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சர்வமத வழிபாட்டின்போது, உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
மக்களை வாழவைக்க வேண்டும் என்று உதித்த சமயங்கள் இன்று மக்களை துன்புறுத்துவதில் இன்பம் காண்கின்றன.
நாட்டில் ஏற்பட்டுள்ள மத விரோதச் செயல்கள் நிறுத்தப்பட வேண்டும். இங்கு இருக்கின்ற எல்லா இனங்களும் ஒரு மனப்பட்டு நல்ல சிந்தனையுடன் வாழ வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனையுடன் வாழ்க்கை முறையை கண்டுகொள்ள வேண்டும் நாம் ஒவ்வொரு சமயத்தையும் மதிப்பதனூடாக மனிதரின் அடிப்படை உரிமை சமூக உரிமை அத்துடன் சமய உரிமை என்பவற்றைப் பாதுகாக்க முடியும்.
கடவுளால் ஆட்கொள்ளப்படுபவர்கள் கடவுளின் ஆவிக்கு தங்ளை அர்ப்பணிப்பவர்ககின் வாழ்விலே உண்மையான அன்பு இருக்க வேண்டும். அப்பொழுது அங்கு அமைதி இருக்கும், சமாதானம் இருக்கும், எல்லா விதமான வளங்களும் இருக்கும், அவற்றைப் பிறருடன் பகிர்ந்து கொள்வதற்கும் ஆர்வமும் இருக்கும்.
எல்லா சமயங்களுக்கும் அடிப்படையாக இருப்பது அன்பே. கடவுள்மீது அன்பு கொண்டுள்ளவன் கடவுளுடன் இணைந்திருக்கின்றான்.
கடவுளும் அவனுடன் இணைந்திருக்கிறார். எல்லா சமயத்தவரும் மற்றைய சமயத்தவரை மதித்து வாழ பழகிக்கொள்ள வேண்டும். உடலுக்கு உணவு எப்படி அவசியமோ அதேபோன்று அன்பு எமது வாழ்வுக்கு ஓர் உணவாக அமைய வேண்டும். எமது வாழ்க்கை மிருக வாழ்க்கையாக இருக்கக் கூடாது மற்றவர்களுக்காக நாம் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRaLbnsy.html
பொலிஸ் மற்றும் இராணுவப் பேச்சாளர்கள் அரசியல் ரீதியான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர் - ஐ.தே.கட்சி
[ வியாழக்கிழமை, 26 யூன் 2014, 12:23.49 PM GMT ]
இது குறித்து சர்வதேச நாடாளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அளுத்கம மற்றும் பேருவளை சம்பங்கள் தொடர்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர, புலனாய்வுப் பிரிவினர் குறித்து வெளியிட்ட தகவல்கள் தொடர்பில் உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சம்பிரதாயங்கள் உண்டு.
அளுத்கம மற்றும் பேருவளை சம்பங்கள் தொடர்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர, புலனாய்வுப் பிரிவினர் குறித்து வெளியிட்ட தகவல்கள் தொடர்பில் உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சம்பிரதாயங்கள் உண்டு.
அவ்வாறான சம்பிரதாயங்களின் படி அரசாங்கம் செயற்படவில்லை எனவும் ஜோன் அமரதுங்க கூறியுள்ளார்.
மங்கள சமரவீர வெளியிட்ட தகவல்கள் குறித்து இராணுவ மற்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்கள் ஊடகங்களில் பல்வேறு விதமான கருத்துக்களை வெளியிட்டு வருவது குறித்து நாம் கூடிய கவனத்தை செலுத்தி வருகின்றோம்.
புலனாய்வுப் பிரிவு தொடர்பில் கருத்துக்களையும் குற்றச்சாட்டுக்களையும் வெளியிடும் போது அது சம்பந்தமாக செயற்படுவதற்கு உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சம்பிரதாயங்கள் சில உள்ளன.
புலனாய்வுப் பிரிவு தொடர்பில் கருத்துக்களையும் குற்றச்சாட்டுக்களையும் வெளியிடும் போது அது சம்பந்தமாக செயற்படுவதற்கு உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சம்பிரதாயங்கள் சில உள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அவ்வாறான தகவலை வெளியிட போகிறார் என்பதை அறிந்து கொண்ட பின்னர், அது தொடர்பில் உரிய செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.
அப்படியான சந்தர்ப்பத்தில் துறைக்கு பொறுப்பான அமைச்சர், தகவலை வெளியிடப் போகும் நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது அவர் அங்கம் வகிக்கும் கட்சியின் தலைவரை தொடர்பு கொண்டு பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனினும் மங்கள சமரவீர தொடர்பில் அப்படியான தலையீடுகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை.
இரண்டாவது விடயமானது அவ்வாறான தகவல்களை மிக முக்கியமான நெருக்கடியின் போது மாத்திரமே வெளியிட வேண்டும்.
பேருவளை சம்பவம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் மீது பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுவதால், அது மிகவும் முக்கியமான பிரச்சினையாக கருத முடியும்.
பேருவளை சம்பவம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் மீது பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுவதால், அது மிகவும் முக்கியமான பிரச்சினையாக கருத முடியும்.
விசேட காரணத்திற்காகவே புலனாய்வுப் பிரிவினரின் பெயர்கள் வெளியிடப்பட்டன. எனினும் மங்கள சமரவீர புலனாய்வுப் பிரிவின் செயற்பாட்டாளர்களின் பெயர்களை எதனையும் வெளியிடவில்லை.
அவர் புலனாய்வுப் பிரிவுகளின் தலைவர்கள் சிலரது பெயர்களை மட்டுமே வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட நபர்கள் தொடர்பில் நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் பல முறை பேசப்பட்டுள்ளன.
பல சந்தர்ப்பங்களில் அரச ஊடகங்கள் கூட இந்த அதிகாரிகளின் பெயர்களை வெளியிட்டுள்ளன.
அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர்களின் பெயர்களை வெளியிடுவதோ, அவர்களை பற்றி பேசுவதோ அரச இரகசியத்தை வெளியிடும் செயல் எனவும் சட்டப்படி குற்றம் என்றும் உலகில் எந்த நாடும் ஏற்றுக்கொள்வதில்லை எனவும் ஜோன் அமரதுங்க தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRaLbnsz.html
ஞானசார தேரரைக் காப்பாற்ற பொலிஸ் ஊடகப் பேச்சாளர் முயற்சி
[ வியாழக்கிழமை, 26 யூன் 2014, 12:27.09 PM GMT ]
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஞானசார தேரர் வெளியிட்டதாக கூறப்படும் கருத்துக்கள் குறித்து ஆராய்ந்து வருகின்றோம். அவரது பேச்சு வன்முறைக்கு காரணமாக அமைந்ததாக என்பதை ஆராய்ந்து பார்ப்பதே இதன் நோக்கம் எனவும் அஜித் ரோஹன மேலும் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRaLbns0.html
Geen opmerkingen:
Een reactie posten