[ வியாழக்கிழமை, 19 யூன் 2014, 12:28.38 PM GMT ]
இரத்த மாதிரி மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதன் போது இந்த விடயம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
2011ம் ஆண்டு நத்தார் பண்டிகையன்று குராம் ஷெய்க் கொலை செய்யப்பட்டதுடன், அவரது ரஷ்ய காதலி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டார்.
சம்பவ இடத்தில் மீட்கப்பட்ட இரத்தத்தின் மாதிரியும், தங்காலை பிரதேச சபையின் தலைவர் சம்பத் விதார பதிரணவின் இரத்த மாதிரியும் ஒத்துப் போவதாக களனி பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட உயிரியல் விஞ்ஞான பேராசிரியர் நில்மினி சீ குணவர்தன நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
இரத்த மரபணு பரிசோதனை எவ்வாறு மேற்கொள்ளப்படும் என்பது குறித்து நீதிமன்றில் பேராசிரியர் விளக்கமளித்துள்ளார்.
இன்று கொழும்பு உயர் நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணைகளின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGSdLahr0.html
இலங்கை வந்துள்ள அமெரிக்க அதிகாரி கூட்டமைப்பினருடன் பேச்சு
[ வியாழக்கிழமை, 19 யூன் 2014, 01:09.55 PM GMT ]
இலங்கை வந்துள்ள அவர் அரச, எதிர்க்கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பிரதிநிதிகளைச் சந்திக்கிறார். இதன்படி இன்று முற்பகல் 11 மணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை கொழும்பில் சந்தித்தார்.
சுமார் அரை மணி நேரம் இடம்பெற்ற இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், பேச்சாளரான சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்தச் சந்திப்பின்போது இலங்கையின் தற்போதைய நிலைமைகள், தமிழ்மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து தாம் விரிவாக விளக்கினர் என்று கூட்டமைப்பு பிரதிநிதிகள் விளக்கினர்.
http://www.tamilwin.com/show-RUmsyGSdLahr3.html
Geen opmerkingen:
Een reactie posten