[ திங்கட்கிழமை, 23 யூன் 2014, 05:14.52 AM GMT ]
பேருவளையில் வீடு ஒன்றை சேதப்படுத்திய நான்கு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இரத்தினக்கல் வர்த்தகர் ஒருவரின் வீட்டை கடந்த 15ம் திகதி இடம்பெற்ற கலவரத்தின் போது சேதப்படுத்திய சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
வீட்டில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமராவின் காட்சிகளைப் பயன்படுத்தி சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வீட்டை தாக்கி சேதப்படுத்தியதாகவும் தீயிட்டு கொளுத்தியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வீட்டை சேதப்படுத்தியதனால் சுமார் 50 லட்ச ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபர்களிடம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyGRXLafsy.html
புதிதாக திறக்கப்படவுள்ள ஜே.வி.பி அலுவலகம் மீது இனந்தெரியாத நபர்கள் தீ வைக்க முயற்சி
[ திங்கட்கிழமை, 23 யூன் 2014, 05:57.38 AM GMT ]
மட்டக்களப்பு மாவட்டத்தின் பாலமுனை பிரதேசத்தில் நாளை மறுதினம் புதன்கிழமையன்று மக்கள் விடுதலை முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகம், கட்சியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வாவினால் திறந்து வைக்கப்படவுள்ள நிலையில் இன்று திங்கட்கிழமை அதிகாலை 1.40 மணியவில் அந்த அலுவலகத்திற்கு முன்னால் இனந்தெரியாத சிலர் டயர் ஒன்றை போட்டு தீ வைத்துள்ளனர்.
ரஊப் மெலும் தெரிவிக்கையில் அலுவலக திறப்பு விழாவுக்கு விளம்பர போஸ்டர்கள் ஒட்டிவிட்டு அலுவலகத்திற்கு வந்த போது டயர் ஒன்று தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதை கண்டேன். பின்னர் அதை அணைத்து விட்டேன். இதனால் எந்தவொரு சேதமும் அலுவலகத்திற்கு ஏற்படவில்லை. இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸாருக்கும் 119 எனும் பொலிஸ் அவசர இலக்கத்திற்கு தொலைபேசியில் கூறினேன்.
பின்னர் ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் குறித்த அலுவலகத்திற்கு பொலிஸார் இருவரை பாதுகாப்பு கடமையிலும் நியமித்துள்ளனர்.
திட்டமிட்டபடி எதிர்வரும் புதன்கிழமை அன்று அலுவலகம் திறந்து வைக்கப்படுமென றஊப் மேலும் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRXLafs1.html
முஸ்லிம் பள்ளிவாசல் மீது தாக்குதல் - இப்பாகமுவ பிரதேசத்தில் பதற்றம்
[ திங்கட்கிழமை, 23 யூன் 2014, 05:40.35 AM GMT ]
முஸ்லிம் வர்த்தகர்களை அச்சுறுத்திய வன்முறையாளர்கள் சில வர்த்தக நிலையங்களை தாக்கி சேதப்படுத்தியதாக வர்த்தக நிலையம் ஒன்றின் உரிமையாளரான எம். மொஹமட் தெரிவித்தார்.
வன்முறையாளர்கள் முஸ்லிம் வர்த்தர்களின் கடைகளில் தொழில் புரியும் விற்பனையாளர்களையும் அச்சுறுத்தியுள்ளனர்.
வன்முறையாளர்களின் தாக்குதல்களில் முஸ்லிம் பள்ளிவாசலின் கண்ணாடிகள், கதவுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். தாக்குதல் நடத்தியவர்கள் முச்சக்கர வண்டிகளில் வந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலை அடுத்து சுமார் 500 முஸ்லிம்கள் பள்ளிவாசலுக்கு அருகில் கூடிய தமது வழிப்பாட்டு தலத்தை பாதுகாக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்ததுடன் பிரதேசத்தில் பதற்றம் நிலவியது.
சம்பவ இடத்திற்கு சென்ற உதவி பொலிஸ் அத்தியட்சகர் மகிந்த திஸாநாயக்க உள்ளிட்ட உயர் பொலிஸ் அதிகாரிகள், சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை கைது செய்வதாக வழங்கிய உறுதிமொழியை அடுத்து அங்கு கூடியிருந்தவர்கள் கலைந்து சென்றனர்.
இப்பாகமுவ பிரதேசத்தில் நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி தாக்குதல் சம்பவம் குறித்து இப்பாகமுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmsyGRXLafs0.html
Geen opmerkingen:
Een reactie posten