தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 25 juni 2014

சிறப்பு முகாம்களில் வதைபடும் ஈழத்து உறவுகளின் விடுதலை வேண்டி செந்தூரன் உண்ணாவிரதம்!

வலைவீசும் மஹிந்த ராஜபக்ஸ- சால்வைக்குள் சிக்குவாரா சரத் பொன்சேகா?
[ புதன்கிழமை, 25 யூன் 2014, 10:22.44 AM GMT ]
முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை ஆளுங்கட்சிக்குள் உள்வாங்கும் வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போதைய நிலையில் இலங்கையின் மூன்றாவது அரசியல் சக்தியாக சரத் பொன்சேகாவின் கட்சி பரிணமித்துள்ளது. மேலும் இக்கட்சியின் அரசியல் பிரவேசம் காரணமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வாக்குகளே பிளவுபட்டுள்ளன.  இதன் காரணமாக அண்மையில் நடைபெற்ற மேல்மாகாணம் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல்களில் ஆளுந்தரப்புக்கு எதிர்பாராத பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் இந்த நிலை தொடருமானால் ஆளுங்கட்சி வெற்றி பெறுவதில் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும்.  மேலும் சந்திரிக்காவின் வருகை மேலும் வாக்குகளைப் பிளவுபடுத்தும் என்பதையெல்லாம் அரசியல் ஆய்வாளர்கள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்நிலைமையை சமாளிப்பதாயின் முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் ஜனநாயக முன்னணியை அரசாங்கத்துடன் இணைத்துக் கொள்வதே மாற்று வழியாகும் என்று ஜனாதிபதி மனக்கணக்கு போட்டுள்ளார்.
இதனையடுத்து சரத் பொன்சேகாவுக்கு ஆளுந்தரப்பில் இருந்து நல்லெண்ணத் தூது மற்றும் நேசக்கரம் நீட்டப்பட்டு வருவதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சரத் பொன்சேகா ஆளுந்தரப்பில் இணைந்து கொள்ளும் பட்சத்தில் அவரது ஜெனரல் அந்தஸ்து, ராணுவத் தளபதிக்கான ஓய்வூதியம், அரசியலில் ஈடுபடுவதற்கான உரிமை என்பவற்றை திருப்பி அளிக்கும் வகையில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும் ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.
மேலும் அவரது மருமகன் தனுன திலக்கரத்தின உள்ளிட்டவர்களுக்கு எதிரான வழக்குகளை கைவிடவும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசியப் பட்டியல் மூலமாக சரத் பொன்சேகாவை நாடாளுமன்ற உறுப்பினராக்குவதுடன், பிரதிப் பாதுகாப்பு அமைச்சுப் பதவியை அளிப்பதாகவும் ஆசைவார்த்தை கூறப்பட்டுள்ளது.
எனினும் இது தொடர்பில் சரத் பொன்சேகா தரப்பில் இருந்து இதுவரை உறுதியான முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்று தெரியவருகின்றது.
http://www.tamilwin.com/show-RUmsyGRZLaeu5.html

சிறப்பு முகாம்களில் வதைபடும் ஈழத்து உறவுகளின் விடுதலை வேண்டி செந்தூரன் உண்ணாவிரதம்
[ புதன்கிழமை, 25 யூன் 2014, 10:50.00 AM GMT ]
ஈழ உறவுகளின் விடுதலை வேண்டி தனியனாக தொடர்ந்து பல போராட்டங்களை முன்னெடுத்து வரும் நமது ஈழத்து உறவான செந்தூரன் அவர்கள் இன்று (25.06.2014) காலை முதல் திருச்சி சிறப்பு முகாமில் தனது உண்ணா விரதத்தினை தொடங்கியுள்ளார்.
எந்தவித குற்றங்களும் செய்யாமல் இலங்கை அரசின் பொய் குற்றச்சாட்டுக்களையும் அதற்கு துணை சென்ற காங்கிரஸ் அரசின் தூண்டுதல்களாலும் தேவையற்ற வழக்குகள் பதியப்பட்டு சிறப்பு முகாம்களில் அகதிகளாக அல்லலுறும் அனைத்து ஈழத்து உறவுகளையும் விடுதலை செய்ய வேண்டி காலவரையறையற்ற உண்ணாவிரதத்தினை தொடங்கியுள்ளார்.
புழலில் இருவர் உண்ணாவிரதம்.!
திருச்சி சிறப்பு முகாமில் காவல்துறை ஆய்வாளரின் காழ்ப்புணர்ச்சியால் பொய்வழக்கு பதியப்பட்டு கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டள்ள ஆறு ஈழத்து உறவுகளில் இருவரான பார்த்தா என்கிற புருஷோத்தமன் மற்றும் உமாரமணன் ஆகியோர் தங்கள் குடும்பத்தினருடன் சேர்த்து வைத்து வாழ வழி செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை முன் வைத்து தங்களின் உண்ணாவிரதத்தினை முன்னெடுத்துள்ளனர்.

இவர்கள் இருவரும் இவர்களின் ஐந்து கோரிக்கைகளை தமிழக முதல்வரின் தனிப்பிரிவிற்கு ஏற்கனவே அனுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் ஏற்கனவே அனுமதி வாங்கியதன் அடிப்படையில் திங்கட்கிழமையில் இருந்து உண்ணா நிலையை தொடங்கியுள்ளனர்.
இவர்கள் முன்வைத்துள்ள ஐந்து கோரிக்கைகள்:
1. மகராஸ்டிரா மாநிலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அயல்நாட்டார் சட்டத்துக்கமைய, அயல்நாட்டார்கள் குறிப்பிட்ட மாவட்டத்தினை விட்டு வெளியேற கூடாது.  இந்த நடைமுறையிலாவது எம்மை தடுத்து வைக்கப்பட வேண்டும்.
2. சிறப்பு முகாமில் பல வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் அவர்களது குடும்பங்களோடு சேர்ந்து வாழ அனுமதிக்கப்பட வேண்டும்.  அதாவது 1997ம் ஆண்டு காலப்பகுதியில் சிறப்பு முகாம் நடைமுறைக்கமைய குடும்பங்களுடன் சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும்.
3. அயல் நாட்டார் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்படுபவர்கள் பிணையின் அடிப்படையில் வெளியேறுவதற்கு அயல் நாட்டார் சட்டத்தின் கீழ் பிரிவு 3 (2)(f) இன் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  இதன் அடிப்படையில் பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட வேண்டும்.
4. காமன்வெல்த் உறுப்பு நாடுகளின் கீழ் உள்ள நாடுகளைச் சேர்ந்தவர்களை அயல் நாட்டார் சட்டத்தின் கீழ், சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
5. இன்றுவரை அயல் நாட்டார் சட்டத்தின் கீழ் இலங்கை நாட்டினைச் சேர்ந்த சிங்களவர்கள் தடுத்து வைக்கப்படவில்லை. தமிழ்நாடு எங்கள் தாய்நாடு எனவே தமிழர்களை குடும்பங்களோடு வாழ விடுங்கள் என மன்றாடி வேண்டுகிறோம்.
மேற்கூறிய இவர்களின் நியாயமான கோரிக்கை ஏற்கப்பட்டு ஈழத்து உறவுகளுக்கு விடியல் பிறக்குமா என்று ஏக்கத்துடனே நாமும் தலைமை செயலகத்தினை பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
ஆட்சியாளர்களின் கண்கள் திறக்குமா...?
எமது உறவுகளின் விடியல் உறுதியாகுமா...?
http://www.tamilwin.com/show-RUmsyGRZLaeu6.html

Geen opmerkingen:

Een reactie posten