தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 25 juni 2014

இந்திய மீனவர்களை மீட்க இராஜதந்திர முனைப்பு: மத்திய அரசாங்கம்- மோடிக்கு ஜெயலலிதா மீண்டும் கடிதம்

தேயிலையில் கலந்து தங்கம் கடத்தி வந்த இலங்கை இளைஞர் சென்னை விமானநிலையத்தில் கைது
[ புதன்கிழமை, 25 யூன் 2014, 12:14.11 AM GMT ]
இலங்கையில் இருந்து தேயிலைத்தூளில் தங்கத்தை கலந்து கடத்தி வந்த இலங்கை இளைஞர் ஒருவரை சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர்.
சென்னை, மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்திற்கு இலங்கையில் இருந்து விமானம் வந்தது. இதில் வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது இலங்கையைச் சேர்ந்த ஞானமதிகுமார் என்பவர் வந்தார். இவர் சுற்றுலா விசாவில் சென்னை வந்திருந்தார்.
இவர் மீது சந்தேகம் கொண்ட சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் தனியறைக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
அவரது உடைமைகளை சோதனை செய்த போது, அங்கு தேயிலைத்தூள் இருந்தது. அதை பிரித்து பார்த்த போது அதில் தங்கத்தை பொடியாக்கி அதில் கலந்து கடத்திக்கொண்டு வந்தது தெரியவந்தது.
தேயிலைத்தூளில் இருந்து ரூ.15 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கைப்பற்றினார்கள்.

இதனையடுத்து இலங்கை இளைஞரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தலுக்கு பின்னணியில் உள்ளவர்கள் பற்றி விசாரித்து வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmsyGRZLaer5.html
கச்சதீவை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்து விடலாம்!- சிவாஜிலிங்கம்
[ புதன்கிழமை, 25 யூன் 2014, 12:30.23 AM GMT ]
கச்சதீவை இந்தியாவிடம் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்று இலங்கை வடக்கு மாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரும்,, டெலோ அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சிவாஜிலிங்கம் பேசுகையில்,
இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால், இலங்கைக்கு கடந்த 1974ம் ஆண்டு கச்சதீவு வழங்கப்பட்டது. இதனை இந்தியாவுக்கு திருப்பி கொடுக்க வேண்டும் என்ற தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கையை நீண்ட நாள்களாக நான் ஆதரித்து வருகிறேன்.
இந்திய நாடாளுமன்றத்தின் அனுமதி பெறாமல், இலங்கைக்கு கச்சதீவு வழங்கப்பட்டதை எதிர்த்து இந்தியாவில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர முயன்றேன். ஆனால் நான் இந்திய பிரஜை கிடையாது என்பதால், என்னால் வழக்குத் தொடர முடியவில்லை.
கச்சதீவை இந்தியாவுக்கு திருப்பி கொடுப்பதன் மூலம், தமிழகம் மற்றும் வடக்கு இலங்கையைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்னைகளுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் தீர்வு காண முடியும்' என்று தெரிவித்தார்.
சிவாஜிலிங்கத்தின் கருத்து குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர் ஆர். சம்பந்தன், செய்தியாளரிடம் பேசுகையில்,
கச்சதீவு விவகாரம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களுடன் சிவாஜிலிங்கம் கலந்து பேசவில்லை. எந்தச் சூழ்நிலையிலும், இந்த விவகாரம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆலோசிக்கவுமில்லை; முடிவெடுக்கவுமில்லை.
ஒருவேளை இந்த விவகாரம் பெரிதானால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அது குறித்து மிகக் கவனத்துடன் பரிசீலிக்கும். எனினும் சிவாஜிலிங்கத்தின் நிலைப்பாட்டை ஆதரிக்க மாட்டோம் என்று குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRZLaer6.html
தேசிய ஒற்றுமையை உருவாக்கும் முனைப்புக்களில் ரணில்!
[ புதன்கிழமை, 25 யூன் 2014, 12:36.44 AM GMT ]
நாட்டில் தேசிய ஒற்றுமையை முனைப்புக்களில் எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்ரமசிங்க ஈடுபட்டுளளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மதத் தலைவர்கள், சிவில் சமூகப் பிரதானிகள் உள்ளிட்ட பலரையும் ரணில் விக்ரமசிங்க சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
கொழும்பில் நாளைய தினம் இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.
கடந்த வாரத்தில் பேருவளை மற்றும் அளுத்கம பிரதேசத்தில் வன்முறைகள் வெடித்திருந்தன.
இந்த பிரதேசங்களை பிரதிநிதித்துவம் செய்யும் மதத் தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் முக்கியஸ்தர்கள் ரணிலுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
நாடாளுமன்ற வளாகத்தில் இ;ந்த சந்திப்பு நடத்தப்படவுள்ளது.
இனங்களுக்கு இடையில் சகோதரத்துவத்தை எவ்வாறு உருவாக்குவது என்பது குறித்து இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்படவுள்ளது
http://www.tamilwin.com/show-RUmsyGRZLaer7.html
இந்திய மீனவர்களை மீட்க இராஜதந்திர முனைப்பு: மத்திய அரசாங்கம்- மோடிக்கு ஜெயலலிதா மீண்டும் கடிதம்
[ புதன்கிழமை, 25 யூன் 2014, 12:51.52 AM GMT ]
இலங்கையில் கைதுசெய்யப்பட்டுள்ள 64 இந்திய மீனவர்களையும் விடுவிக்கும் நடவடிக்கைகள் ராஜதந்திர ரீதியில் இடம்பெறுவதாக இந்திய மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. 
இலங்கையில் கைதுசெய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய தனிப்பட்ட ரீதியில் தலையிடவேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்திய பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே இந்திய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஒருவர் இராஜதந்திர முனைப்புக்குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.
மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு மோடிக்கு ஜெயலலிதா மீண்டும் கடிதம்
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படும் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
கச்சத் தீவை மீட்பது மட்டுமே இதற்கு நிரந்தரத் தீர்வாக அமைய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 64 பேரை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மீனவர்களின் 38 படகுகளையும் மீட்க உதவிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தின் விவரம்:
மூன்று படகுகளுடன் 11 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் குறித்து, ஆழ்ந்த மனவேதனையுடன் மீண்டும் தங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் ஆகிய இடங்களிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 11 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் திங்கள்கிழமை இரவு கைது செய்து, இலங்கையின் காங்கேசன் துறைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
கடந்த 19ம் திகதியன்று மீன் பிடிக்கச் சென்ற நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஏழு மீனவர்களும், ஒரு படகும், இலங்கை கிழக்கு கடற்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், திங்கள்கிழமை இரவு மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஏற்கெனவே கைது செய்யப்பட்ட மீனவர்கள், தொடர்ந்து இலங்கை சிறையில் இருந்து வருகிறார்கள். இந்தச் சம்பவம் குறித்து கடந்த 18ம் திகதி தங்களுக்கு கடிதம் எழுதினேன். ஆனால், கைது செய்யப்பட்ட 46 இந்திய மீனவர்களும், 11 படகுகளும் இதுவரை விடுவிக்கப்படவில்லை.
இதற்கிடையே, தமிழக மீனவர்கள் மீட்கப்படுவதை உறுதி செய்வதுடன், அவர்களின் வாழ்வாதாரமான படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தங்களிடம் ஏற்கெனவே இரண்டு முறை வலியுறுத்தியுள்ளேன். ஆனால், துரதிருஷ்டவசமாக மீனவர்கள் விடுதலை செய்யப்படும்போது மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு முக்கியமானதாக விளங்கும் அவர்களின் படகுகளும், வலைகள் உள்ளிட்ட உபகரணங்களும் இதுவரை விடுவிக்கப்படவில்லை.
கடந்த 19ம் திகதியிட்ட கடிதத்தில் மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாணும் நோக்கில் சுமுகமான சூழ்நிலையை உருவாக்கவும், தமிழக மீனவர்கள் சங்கம் மற்றும் இலங்கை மீனவர்களிடையே இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைப்ப தரவும் தமிழக அரசு தயாராக உள்ளது என்று உறுதியளித்திருந்தேன்.
இருந்தபோதிலும், நான் ஏற்கெனவே எனது முந்தைய கடிதங்களில் தங்களுக்கு தெரிவித்ததைப் போல், இந்தப் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு என்பது இந்தியாவுக்கு வரலாற்று அடிப்படையிலும், சட்டபூர்வமாகவும் உரிமையுள்ள கச்சத்தீவை மீட்பதில் மட்டுமே உள்ளது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
இந்தியா - இலங்கை இடையேயான 1974 மற்றும் 1976-ஆம் ஆண்டில், அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்களை ரத்து செய்ய வேண்டும். மேலும், பாக் ஜலசந்தி பகுதியில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கான பாரம்பரிய உரிமை நிலைநாட்டப்பட வேண்டும்.
எனவே, இலங்கையுடனான சர்வதேச கடல் எல்லைக் கோடு பிரச்சினை முடிந்துவிட்டதாக இந்திய அரசு கருதக்கூடாது என மீண்டும் குறிப்பிட விரும்புகிறேன்.
1974 மற்றும் 1976-ஆம் ஆண்டில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் செல்லத்தக்கவையல்ல என எனது சார்பிலும், தமிழக அரசு சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
பாக் ஜலசந்தி பகுதியில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்களுக்கான சிறப்பு உதவித் திட்டத்தை அறிவிக்க வேண்டும் என தங்களிடம் கடந்த 3ம் திகதி நான் கொடுத்துள்ள மனுவில் கேட்டுக்கொண்டுள்ளேன்.
பாக் ஜலசந்தி பகுதியில், மீனவர்களுக்கு நீண்டகாலமாக நிலவிவரும் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு, மத்திய அரசும், தமிழக அரசும் இணைந்து சுமுக தீர்வுகாண முடியும் என இன்னமும் நம்புகிறேன்.
மனவேதனையை ஏற்படுத்தும் இந்தப் பிரச்சினையில், ஏற்கெனவே நான் சுட்டிக்காட்டியபடி, பரஸ்பர கலந்தாலோசனையின்பேரில், உயர்நிலை அளவில் தூதரக முயற்சிகளின் மூலம் நிரந்தர தீர்வுகாண முயற்சிக்க வேண்டும்.
இந்தப் பிரச்சினையில் நிரந்தர தீர்வு ஏற்படும்வரை, பாக் ஜலசந்தி பகுதியில் அப்பாவி மீனவர்கள் மீது, இலங்கை இராணுவம் தாக்குதல் நடத்துவதையும், அவர்களைக் கைது செய்வதையும் தடுத்து நிறுத்த மத்திய அரசு இலங்கை அரசுக்கு அறிவுறுத்த வேண்டும்.
மேலும், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விரைவில் விடுவிக்க கூட்டு நடவடிக்கைகள் உறுதியாக செயல்படுத்தப்பட வேண்டும். இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 64 மீனவர்களையும், அவர்தம் 38 படகுகளையும், பிரதமர் தனது உயர்நிலை அதிகாரத்தைப் பயன்படுத்தி உடனடியாக விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyGRZLaesy.html

Geen opmerkingen:

Een reactie posten