இலங்கையின் முக்கிய இராணுவத் தளபதியுடன் சீனப் பாதுகாப்பு அதிகாரிகள் குழு
மக்கள் விடுதலை இராணுவத்தின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக உதவித் தலைவர் லெப்.ஜெனரல் வாங் யொங்செங் தலைமையிலான இராணுவ, கடற்படை, விமானப்படை ஆகியவற்றின் 33 மூத்த படை அதிகாரிகள் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இந்தக் குழுவினர் நேற்று சிறிலங்காவின் கூட்டுப்படைகளின் தளபதி ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய, சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் தயா ரத்நாயக்க ஆகியோரைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர் இதன்போது, அனைத்துலக மற்றும் தேசிய பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து ஆராயப்பட்டதாக, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
http://www.jvpnews.com/srilanka/74572.html
சுஸ்மா தலைமையில் நடந்த புதுடெல்ல கூட்டத்தில் இலங்கை பற்றி தீவிர ஆராய்வு
இந்தக் கூட்டத்தில், சுஸ்மா சுவராஜ் ஆறு மணிநேரத்துக்கும் மேலாக பங்கேற்று, அயல் நாடுகளுடனான உறவுகளை கையாள்வது குறித்து, சம்பந்தப்பட்ட நாடுகளின் தூதுவர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். நேற்றுக் காலை தொடக்கம் மாலை வரை நடந்த இந்தக் கூட்டத்தில், சிறிலங்கா உள்ளிட்ட ஏழு சார்க் நாடுகளுக்கான தூதுவர்கள், ஈரான், சீனா, மியான்மர் ஆகிய நாடுகளுக்கான தூதுவர்களும் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில், ஆப்கானிஸ்தான் நிலைமைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதாகவும், சிறிலங்கா விவகாரம் குறித்தும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.jvpnews.com/srilanka/74569.html
Geen opmerkingen:
Een reactie posten