தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 25 juni 2014

நவநீதம்பிள்ளை நியமித்துள்ள விசாரணைக்குழுவின் மூவரின் பெயர்களை அறிவித்துள்ளார்

வடக்கு மீனவர்களின் மீன் வளத்தையே இந்திய மீனவர்கள் சுரண்டுகின்றனர் - இராணுவம்
[ புதன்கிழமை, 25 யூன் 2014, 01:27.31 PM GMT ]
வடக்கு மீனவர்களின் மீன் வளத்தையே இந்திய மீனவர்கள் சுரண்டுவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.
வடக்கு மக்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக குரல் கொடுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழக மீனவர்கள் வடக்கு மீனவர்களின் மீன்வளத்தை சூறையாடுவதற்கு எதிராக குரல் கொடுப்பதில்லை.
வடக்கு கடலில் அதிகளவில் இலங்கைத் தமிழ் மீனவர்களே மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக மீனவர்களின் அத்து மீறல்களினால் வடக்கு மீனவர்களே பாதிக்கப்படுகின்றனர்.
அத்துமீறி இலங்கைக் கடற்பரப்பில் மீன்களை பிடிக்கும் தமிழக மீனவர்கள் சர்வதேச ஊடகங்களின் வழியாக இலங்கை கடற்படையினருக்கு எதிராக குற்றச்சாட்டை சுமத்துகின்றனர் என தெரிவித்துள்ளார்.
சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இன்று கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்hளர்.
http://www.tamilwin.com/show-RUmsyGRZLaev1.html

நவநீதம்பிள்ளை நியமித்துள்ள விசாரணைக்குழுவின் மூவரின் பெயர்களை அறிவித்துள்ளார்
[ புதன்கிழமை, 25 யூன் 2014, 01:30.09 PM GMT ]
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை 3 ஆலோசகர்களை நியமித்துள்ளார். 
இலங்கை தொடர்பிலான விசாரணை நடாத்தும் விசாரணைக்குழுவிற்கான மூன்று ஆலோசகர்களை இன்று நவனீதம்பிள்ளை அறிவித்துள்ளார்.
நோபள் சமாதான விருது வென்ற பின்லாந்தின் முன்னாள் ஜனாதிபதி மார்தீ அத்திசாரி, நியூசிலாந்தின் முன்னாள் உயர்நீதிமன்ற நீதவான் சில்வியா கட்ரைட் மற்றும் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றின் முன்னாள் தலைவர் அஸ்மா ஜஹான்கீர் ஆகியோர் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
நேர்மையும், சுயாதீனத் தன்மையும், பக்கச்சார்பற்ற நிலையையும் கொண்ட சிறந்த நிபுணர்களை ஆலோசனைக் குழுவில் நியமிக்க கிடைத்தமை மகிழ்ச்சியும் பெருமிதமும் அளிப்பதாக நவனீதம்பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தொடர்பில் விசாரணை நடத்தும் ஐக்கிய நாடுகள் விசாரணைக்குழுவில் பன்னிரண்டு பேர் அங்கம் வகிக்கின்றனர்.
இலங்கை மீதான ஐ நா விசாரணை: வல்லுநர்கள் பெயர்கள் அறிவிப்பு
இலங்கையில் இடம் பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து முழுமையான விசாரணைகளுக்கு ஆலோசனை வழங்கவுள்ள மூன்று வல்லுநர்களின் பெயர்களை ஐ நா அறிவித்துள்ளது.
சமாதானத்துக்கான நோபல் பரிசை வென்றுள்ளவரும், பின்லாந்து அரசின் முன்னாள் அதிபருமான மார்ட்டி அத்திசாரி, நியூசிலாந்தின் முன்னாள் கவர்னர் ஜெனரல் சில்வியா கார்ட்ரைட் மற்றும் பாகிஸ்தான் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் அஸ்மா ஜெஹாங்கீர் ஆகியோரே அந்த மூன்று வல்லுநர்கள்.
இந்த ஆண்டு மார்ச் மாதம், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் ஜெனீவாவிலுள்ள ஐ நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, அதன் ஆணையர் நவி பிள்ளை இந்த அறிவிப்பை இன்று, புதன்கிழமை வெளியிட்டுள்ளார்.
இந்த மூவரும், இலங்கையின் உள்நாட்டுப் போரின் கடைசி சில ஆண்டுகளில் இடம் பெற்றதாக கூறப்படும் மோசமான மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்கவுள்ள ஐ நா மனித உரிமை குழுவுக்கு, ஆலோசனை வழங்கவும், ஒத்துழைப்பு அளிக்கவும் உடன்பட்டுள்ளனர் என்று ஐ நா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு கூறுகிறது.
அஸ்மா ஜெஹாங்கீர்ஐ நா மனித உரிமைகள் ஆணையத்தால் அமைக்கப்பட்டுள்ள விசாரணைக் குழு இலங்கை அரசு மற்றும் விடுதலைப் புலிகள் ஆகிய இரு தரப்பினராலும் இழைக்கப்பட்டதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணைகளை நடத்தும் என்று ஏற்கெனவே ஐ நா அறிவித்துள்ளது.
இலங்கை அரசு மற்றும் மக்களிடமிருந்து ஒத்துழைப்பு கிடைக்காவிட்டாலும், தடைகளை மீறி இந்த விசாரணை முன்னெடுக்கப்படும் எனவும் இன்று வெளியிடப்பட்டுள்ள ஐ நா மனித உரிமைகள் ஆணைய செய்திக் குறிப்பு கூறுகிறது.
மார்ட்டி அத்திசாரி
சில்வியா கார்ட்ரைட்

அஸ்மா ஜெஹாங்கீர்
http://www.tamilwin.com/show-RUmsyGRZLaev2.html

Geen opmerkingen:

Een reactie posten