தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 20 juni 2014

அமைச்சரவைக் கூட்டத்தில் குழப்பம் முஸ்லிம் அமைச்சர்கள் ஜனாதிபதி மகிந்தவிடம் ஆவேசக் கேள்வி

பல நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பௌத்த தூதுக்குளிவினர் அலரி மாளிகையில் (படம் இணைப்பு)
பல நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பௌத்த தூதுக்குளிவினர் கடந்த 18ம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை அலரி மாளிகையில் வைத்து சந்தித்தனர்.
20 Jun 2014
http://www.lankaroad.net/index.php?subaction=showfull&id=1403246858&archive=&start_from=&ucat=1&
அமைச்சரவைக் கூட்டத்தில் குழப்பம் முஸ்லிம் அமைச்சர்கள் ஜனாதிபதி மகிந்தவிடம் ஆவேசக் கேள்வி
அளுத்கமவில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக, சிறிலங்கா அமைச்சரவைக் கூட்டத்தில் நேற்று சூடான விவாதம் இடம்பெற்றதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த அமைச்சரவைக் கூட்டத்தில், அமைச்சர்கள் ரவூப் ஹக்கீம் மற்றும் ரிசாத் பதியுதீன் ஆகியோர், வழமைக்கு மாறாக, உரத்த தொனியில், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

அளுத்கம தாக்குதல்கள் முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்டவை என்று குற்றம்சாட்டிய அவர்கள், எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நிகழக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீனும். சிறிலங்கா அதிபருடன் கடுமையான வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வன்முறைகளை தடுத்த நிறுத்த, சிறிலங்கா காவல்துறையும் சிறப்பு அதிரடிப்படையும் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அத்துடன் வன்முறைகளுக்கு காரணமான கலகொடத்த்த ஞான சார தேரரை இதுவரை கைது செய்யாதது ஏன் என்றும் அவர்கள் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதன்போது, அமைச்சர் சம்பிக்க ரணவக்க குறுக்கிட்டு சிங்களவர்களின் கடைகளும் தாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இதனால் நேற்றைய அமைச்சரவைக் கூநட்டத்தில் பெரும் குழப்பம் நிலவியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
20 Jun 2014
http://www.lankaroad.net/index.php?subaction=showfull&id=1403248050&archive=&start_from=&ucat=1&

Geen opmerkingen:

Een reactie posten