ஜூம்ஆ தொழுகையின் பின் வன்முறைகள் வெடிக்கலாம் நாடெங்கும் பலத்த பாதுகாப்பு
எனவே, முஸ்லிம் மக்கள் அனைவரும் வதந்திகளையோ அல்லது அடிப்படை வாதிகளின் தூண்டுதல்களுக்கோ ஆளா காமல் மிக அமைதியாக தமது மதக் கடமைகளில் ஈடுபடுமாறு அரசாங்கம் கேட்டுக் கொள்கிறது. முஸ்லிம் மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பு என்ற பெயரிலுள்ள அமைப்பு ஒன்று உட்பட அடிப்படைவாத அமைப் புகள் சில துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்தும் பேஸ்புக் மூலமாகவும், எஸ்.எம்.எஸ். மூலமாகவும் வதந்திகளை பரப்பி வருகின்றன.
அளுத்கம, பேருவளை, தர்காநகர் போன்ற பிரதேசங்களில் நடைபெற்ற சம்பவங்களை காரணம்காட்டி மக்களை தூண்டிவிடும் முயற்சியில் இந்த அடிப்படைவாத அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன. இவைகளுக்கு ஏமாற வேண்டாமென்றும் தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல வேண்டுகோள் விடுத்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடவியலாளர் மாநாடு நேற்று அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுடன், பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோன், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அளுத்கம, பேருவளை, தர்காநகர் பகுதிகளில் நடைபெற்ற சம்பவம் இறுதியானதும் முதலானதும் அல்ல. இவ்வாறான ஒரு சம்பவம் மீண்டும் எங்கும் இடம்பெறக்கூடாது என்பதே அரசாங்கத்தின் நோக்கம். அனைத்து மக்களும் இதனை தடுப்பதற்கு முன்வர வேண்டும்.நடந்து முடிந்த சம்பவங் களை மையமாக வைத்து சந்தர்ப்பவாத அரசியல் நடத்துவதற்கு சில சக்திகள் முயன்று வருகின்றன. எவ்வாறாயினும் இந்த அடிப்படைவாத போக்கை நிறுத்த நாம் அனைவரும் ஒன்றுசேர வேண்டும்.
இந்த சந்தர்ப்பத்தில் பின்னணியில் இருந்து குழப்புவதற்கும் மோதல்களை உருவாக்குவதற்குமான பாவச் செயலில் சிலர் ஈடுபடுகின்றனர். அவர்களது முயற்சிகளுக்கு எள்ளளவேனும் அனு சரணை வழங்க வேண்டாமெனவும் நாட்டில் ஒரு குழப்ப நிலையை உருவாக்க இடமளிக்க வேண்டாமென்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கேட்டுக் கொண்டார்.
இன்று முஸ்லிம்கள் ஜூம்ஆ தொழுகைக்காக செல்வதை சிலர் தவறாக பயன்படுத்த முயன்று வருகிறார்கள். எனவே, அவர்களது சூழ்ச்சிகளுக்கு ஆளாக வேண்டாம் என்றும் பொலிஸ்மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் கேட்டுக் கொண்டார். கொழும்பு நகரில் போதிய பொலிஸ் பாதுகாப்பு இன்று சகல பகுதிகளிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அளுத்கம, பேருவளை, தர்காநகர் பகுதிகளில் 12ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை நடைபெற்ற சம்பவங்களில் 7 முஸ்லிம்கள் அடங்கலாக 55பேர் கைதாகியுள்ளனர். 35பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் மூவர் உயிரிழந் துள்ளனர். இந்த மூவரும் துப்பாக்கிச் சூட்டு காரணமாக உயிரிழக்கவில்லை என்றும் தாக்குதல் மற்றும் வெட்டுக் காயங்களினாலேயே உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.
http://www.jvpnews.com/srilanka/73944.html
பிரபாகரன் இருந்திருந்தால் எமக்கு இந்த அவலம் ஏற்பட்டிருக்காது அளுத்கம பெண் கதறி அழுதாள்
http://www.jvpnews.com/srilanka/73953.html
கௌதம புத்தர் இருந்தால் அவருக்கும் சுன்னத்து நடந்திருக்கும்
கௌதம புத்தர் இன்றிருந்தால் பௌத்த இனவாதிகள் அவருக்கும் சுன்னத்துச் செய்திருப்பார்கள் என்று வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். தென்பகுதி முஸ்லிம்கள் மீதான தாக்குதலைக் கண்டித்துத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் இணைந்து இன்று வெள்ளிக்கிழமை யாழ்.
மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாகக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியிருந்தன. இந்த ஆர்ப்பாட்டத்துக்குத் தலைமைவகித்து உரையாற்றும்போதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் அளுத்கம, பேருவளை, தர்கா நகரில் முஸ்லிம் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை இரண்டு குழுக்களுக்கு இடையிலான மோதல்களாகக் காட்டுவதற்கே அரசு முயற்சிக்கின்றது.
மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாகக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியிருந்தன. இந்த ஆர்ப்பாட்டத்துக்குத் தலைமைவகித்து உரையாற்றும்போதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் அளுத்கம, பேருவளை, தர்கா நகரில் முஸ்லிம் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை இரண்டு குழுக்களுக்கு இடையிலான மோதல்களாகக் காட்டுவதற்கே அரசு முயற்சிக்கின்றது.
ஆனால் இனம், மதம் மற்றும் பண்பாட்டுப் பல்வகைமையை நிராகரித்து ஒட்டுமொத்த இலங்கையையும் சிங்கள பௌத்த நாடாக மாற்றுகின்ற அரசின் திட்டமிட்ட நிகழ்ச்சிநிரலின் ஒருபகுதியே முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் தாக்குதல்கள் என்பதில் எவருக்கும் சந்தேகம் இல்லை. இப்படித்தான் தமிழர்கள் மீது காலத்துக்குக் காலம் அங்கொன்றும் இங்கொன்றுமாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் கடைசியில் இன அழிப்புப் போராகவே உருவெடுத்தது.
ஆட்சியாளர்கள் சிங்கள மக்களிடையே பேரினவாதத்தை ஊட்டுவதன் மூலமே தங்கள் ஆட்சி அதிகாரங்களைத் தக்கவைக்க விரும்புகிறார்கள். விடுதலைப்புலிகள் இருக்கும் வரையில் அவர்களைக் காட்டிக் காட்டி இனவாதம் வளர்த்த பேரினவாதத்தின் கவனம் இப்போது முஸ்லிம் மக்களின் பக்கம் திரும்பியிருக்கிறது. கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் பெண்கள் சிலர், பிரபாகரன் இருந்திருந்தால் தங்கள் மீது இப்படியான வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டிருக்காது என்று தெரிவித்திருக்கிறார்கள்.
தமிழ் மக்கள் மீது காலத்துக்குக் காலம் மேற்கொள்ளப்பட்டுவந்த பேரினவாத ஒடுக்குமுறைகள்தான் பிரபாகரன் என்ற ஆளுமையின் தோற்றத்துக்குக் காரணமாக இருந்தது. அதேபோன்று, முஸ்லிம்கள் மீதான இனரீதியான ஒடுக்குமுறைகளும், அழிப்புகளும் தொடருமாக இருந்தால் முஸ்லிம்களின் மத்தியில் இருந்தும் பிரபாகரன்கள் உருவாகுவார்கள் என்பதை இந்த அரசாங்கம் புரிந்துகொள்வதாகத் தெரியவில்லை.
தமிழ் மக்கள் சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறையின், இன அழிப்பின் வலிகளை நன்கு உணர்ந்தவர்கள். அந்தவகையில், முஸ்லிம் சகோதரர்கள் மீதான பேரினவாதத் தாக்குதல்களின் வலியை நாங்கள் உணர்ந்து கொள்கிறோம். அதனால்தான், முஸ்லிம் மக்கள் மீதான இனரீதியான தாக்குதல்களைக் கண்டிக்கும் கவனயீர்ப்புப் போராட்டத்தை நடாத்திக்கொண்டிருக்கிறோம்.
முஸ்லிம்; அரசியல் தலைவர்களது சந்தர்ப்பவாத அரசியல் மற்றும் தகிடுதத்தங்கள் பற்றிப் பேசுவதற்கு இது தருணம் இல்லை. அப்பாவி முஸ்லிம் பொதுமக்களுக்கு எந்தவித நிபந்தனையும் அற்ற எங்கள் ஆதரவை நாம் வழங்குவோம். முஸ்லிம் மக்களும் நாங்களும் மதத்தால் வேறுபட்டவர்களாக இருந்தாலும் மொழியால் ஒன்றுபட்டவர்கள். தமிழ்பேசும் மக்களாக பேரினவாதத்துக்கு எதிராக நாங்கள் ஒன்றுபடவேண்டியது காலத்தின் கட்டாயம் என்றும் தெரிவித்தார். 




Geen opmerkingen:
Een reactie posten