தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 20 juni 2014

அமைதியை குழப்புவதில் அமெரிக்கா சதி! கண்டு பிடித்த கோட்டாவின் இராணுவம்

வவுனியாவில் ஆர்ப்பாட்டக்காரர்களை விரட்டி அடித்த பொலிஸார்

வவுனியாவில் முஸ்லீம்களுக்கு ஆதரவாக இன்று (20) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பொலிஸார் தலையிட்டு விரட்டி விரட்டி ஆர்ப்பாட்டக்காரர்களை துரத்தினர்.
இந்நிலையில் இன்றைய மதிய நேர தொழுகையை முடித்து வெளியில் வந்த ஒரு சில முஸ்லீம் மக்களும் இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கோசமெழுப்பியிருந்த சமயம் அவ் விடத்திற்கு வருகை தந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் ஆர்ப்பாட்டத்தை கைவிடுமாறு கோரியிருந்தார்.
எனினும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அவரது கோரிக்கைக்கு செவி சாய்காக்காது அளுத்தக சம்பவத்திற்கு நீதியான விசாரணை நடத்து, முஸ்லீம் மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடு, முஸ்லீம்களை தாக்காதே என் கோசமெழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் தொடர்ச்சியாக ஈடுபட்டனர்.
அந்த இடத்திற்கு வருகை தந்த வவுனியா தலைமை பொலிஸ் நிலையதத்தின் பொறுப்பதிகாரி சன் அபயரத்தின் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இவ்விடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த முடியாது எனவும் அவர்கள் வைத்திருந்த பதாதையையும் பறிமுதல் செய்திருந்தார்.
இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோசமெழுப்பி பொலிஸாருடன் முரண்பட்டுக்கொள்ள ஒரு சிலரை பொலிஸார் இழுத்துச் சென்ற போதிலும் அங்கிருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க அவர்களை விடுவித்து சென்றிருந்ததுடன் அங்கிருந்தவர்களையும் பொலிஸார் விரட்டியடித்தனர்.
இதேவேளை அவ் அமைப்பின் பிரதிநிதிகளான சிலரை பள்ளிவாசல் பிரதேசத்தல் இருந்து சில மீற்றர் தூரம் வரை பொலிஸார் விரட்டியிருந்தனர்.
இச்சம்பவம் இடம்பெற்றுக்கொண்டிருந்த சமயம் பள்ளிவாசலில் இருந்து வருகை தந்திருந்த அதிகமான முஸ்லீம் மக்கள் சம்பவத்தை வேடிக்கை பார்த்திருந்ததுடன் தமது வர்த்தக நிலையங்களையும் திறந்து வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தனர்.


இதேவேளை வவுனியா நகர் முழுவதும் இன்று காலையில் இருந்து பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததுடன் கலகம் அடக்கும் பொலிஸாரும் நகர்ப் பகுதியில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தனர்.
http://www.jvpnews.com/srilanka/73963.html
VaunejaVauneja-01Vauneja-02Vauneja-03
http://www.jvpnews.com/srilanka/73963.html

மகிந்தருக்கு கடிதம் எழுதினாராம் சங்கரி உள்ளே என்ன…

அந்த கடிதத்தின் முழு விபரம் வருமாறு,
அன்புடையீர்,
பேருவளை மற்றும் அளுத்கம பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈடு வழங்கவும் காலம்; கடந்தாலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களை சென்று பார்த்து அவர்களுக்கு ஆறுதல் கூறியதற்கும், குற்றம் புரிந்தவர்கள் மீது உடன் நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதியளித்தமைக்கும் எனது பாராட்டுக்கள். அத்துடன் காடைத்தனத்தாலும், தீயினாலும் இழந்த உயிர்களுக்கும், உடமைகளுக்கும் தகுந்த நட்டஈடு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
நாட்டின் தலைவர் வெளிநாடு செல்லுகின்ற வேளைகளில், அவருக்காக பணியாற்ற ஒருவரும் நியமிக்கப்படாமை துர்பாக்கியமே. இத்தகைய சந்தர்ப்பங்களில் பதில் கடமைக்கு யாரேனும் எதிர் காலத்தில் நியமிக்கப்பட வேண்டுகிறேன்.
இச்சந்தர்ப்பத்தில் குறிப்பிடுவதில் பிழை இருக்காது என எண்ணும் விடயம் ஒன்று, எதிர் காலத்தில் இன விரோத முரண்பாடு ஏற்பட ஏதுவாக இடங்கொடுக்கக் கூடிய வகையில், சில அரசியல் தலைவர்கள் அங்கும் இங்குமாக சில இடங்களில், வேறு இன மக்களை குடியேற்றுவது நல்லதுக்கல்ல.
இச்செயற்பாடுகளை முளையிலேயே கிள்ளி விடுவது சாலப் பொருத்தமானதாக இருக்கும் ஏனெனில் உள்ளுர் வாசிகளும் சரி புதிதாக குடியேறுபவர்களும்சரி பயனடைவதில்லை. ஆனால் சிலர் மட்டும் வேறு சிலரின் வாழ்வாதாரத்தை பறித்தே வாழ்கின்றனர்.
இனவாதம், வேறு சில முரண்பாடுகள் அத்தனையும் பூரணமாக ஒழிக்கப்பட்டதாக பிரகடனப்படுத்தும் வரை இச் செயற்பாடுகளுக்கு தடை விதியுங்கள். அதன் பின் கடந்த காலத்தைப்போல ஒரு பிரதேசத்து மக்களின் விகிதாசாரத்தை பாதிக்காத வகையில் உள்ளுரில் உள்ளோருக்கு முதல் இடம் கொடுத்து அயல் மாவட்ட மக்களுக்கென்றும், அதேபோன்று ஏனைய மாவட்ட மக்களுக்கென, காணிகளை வழங்குவதே பிரச்சினைகள் இன்றி மக்கள் வாழ வழிவகுப்பதாகும்.
ஆண்டாண்டு காலமாக 1915ஆம் ஆண்டு ஏற்பட்ட ஓர் சிறு இனப் பிரச்சினையை தவிர்த்து 1956ம் ஆண்டு வரை இனப்பிரச்சினை என்பது நம் மக்கள் அறியாத ஒன்றாகும். தயவு செய்து நம் மக்களை முதலாவதாக பழைய நிலைமைக்கு கொண்டு செல்லுங்கள். நம்மக்கள் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள் போல் வாழ்வார்கள்.
நன்றி
வீ. ஆனந்தசங்கரி,
செயலாளர் நாயகம்,
தமிழர் விடுதலைக் கூட்டணி.
http://www.jvpnews.com/srilanka/73972.html

அமைதியை குழப்புவதில் அமெரிக்கா சதி! கண்டு பிடித்த கோட்டாவின் இராணுவம்

இலங்கையில் குழப்ப நிலையை ஏற்படுத்துவதில் அமெரிக்கா பின்னணியாக இருக்கின்றது. இவ்வாறானதொரு நிலையில், மக்கள் அவதானமாக செயற்பட வேண்டுமென கிழக்கு மாகாண கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் லால் பெரேரா தெரிவித்தார்.
அளுத்கம மற்றும் தர்கா நகர் பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் ஏற்படுவதற்கு சமூக வலைத்தளங்களும் ஒரு காரணமாகும். செய்திகளை திரிபு படுத்தி பொய்யான தகவல்களை குறுஞ்செய்தி மூலமும், முக நூல் மூலமும், ஏனைய இணைய தளங்கள் மூலமும் பரப்பியிருந்தனர். சில திரிபுபடுத்தப்பட்ட குறுஞ் செய்திகள் மூலம் நாட்டில் குழப்பத்தையும் அமைதியின்மையையும் ஏற்படுத்த முனைகின்றனர்.
அளுத்கம மற்றும் தர்கா நகர் பகுதிகளில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் 40பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலர் விசாரணை செய்யப்பட்ட பின் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சிலர் விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர். தீவிரமான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
ஜனாதிபதி, முஸ்லிம் மக்களுடன் நெருக்கமான தொடர்பை வைத்துள்ளவர் இந்த பிரச்சினை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு அவர் சகல தரப்பினருக்கும் பணிப்புரைகளை விடுத்துள்ளார்.
ஜனாதிபதியின் செயலாளர் என்னுடன் தொடர்புகொண்டு, கிழக்கு மாகாணத்தில் சுமூக நிலையை ஏற்படுத்துமாறு கேட்டுக்கொண்டார். அந்த வகையில் நான் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலுள்ள முஸ்லிம் முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடி வருகின்றேன்.
இங்கு பல தரப்பட்ட தொழில்களில் ஈடுபடுகின்றவர்கள் உள்ளனர். இயல்பு நிலையை பாதிக்கச் செய்வதால் அன்றாடம் தொழில் செய்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகின்றன. மீனவர்கள், விவசாயிகள், வர்த்தகர்கள் என பல தரப்பினரும் இதனால் பாதிக்கப்படுகின்றனர். ஒரு குழுவின் நடவடிக்கையினால் பலரும் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி ஏற்படுகின்றது’ என்றார்.
‘தீய சக்திகளுக்கும் அடிப்படைவாத சிந்தனை உள்ளவர்களுக்கும் பலியாகிவிடாமல் நாட்டின் அமைதியையும் சமாதானத்தையும் ஏற்படுத்துவதற்கு அனைவரும் உழைக்க வேண்டும். இன்று சில அறபு நாடுகளில் நடைபெறும் பிரச்சினைகள், அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள், அழிவுகளை நாம் பார்க்கின்றோம். அதைப்போன்று இந்த நாட்டை கொண்டு செல்வதற்கு அனுமதிக்க கூடாது’ என்று அவர் வலியுறுத்தினார்.
‘அளுதகமை தர்கா நகரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவு வதற்காக இங்கும் பொருட்கள் சேகரிப்பு மற்றும் பண வசூலிப்புக்கள் இடம்பெற்று வருகின்றன. இதில் மோசடிகள் இடம் பெற்று விடக் கூடாது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை மட்டக்களப்புக்கு அழைத்து வந்து இங்கு உங்களுக்குள்ள பிரச்சினைகள் மற்றும் சந்தேகங்களை அவரிடம் கலந்துரையாடி தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றேன்.
அளுத்கமை மற்றும் தர்கா நகர் பிரதேசங்களில் வன்முறைச்சம்பவங்களினால் சேதமடைந்துள்ள வீடுகளை இலங்கை இராணுவத்தினரினால் புனரமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம். யாராக இரந்தாலும் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதில் படையினால் செயற்படுவார்கள். அளுத்கமை மற்றும் தர்கா நகர் பிரதேசங்களில் வன்முறைச் சம்பவங்களுக்கு காரணமாக யார் இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் கொண்டு வரப்படுவார்கள’ என்றும் லால் பெரேரா கூறினார்.
பொது பல சேனா ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடமாக முஸ்லிம்கள் மீது குறி வைத்து செயற்படுகின்றனர். பள்ளிவாயல்களை தாக்குகின்றனர். முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களை தாக்குகின்றனர். இந்த நிலையில் பொது பல சேனாவை ஏன் தடை செய்யவில்லை என அங்கு ஒருவர் கேட்டதற்கு பதிலளித்த கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி, ‘இது ஒரு ஜனநாயக நாடு எடுத்த எடுப்பில் எவரையும் தடை செய்ய முடியாது’ என்றார்.
‘நிலைமைகளை அவதானித்து வருகின்றோம். சட்டத்தின் மூலம் இவர்களின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றன. இவர்களின் நடவடிக்கைகள் மற்றும் செயற்பாடுகள் பற்றி தொடர்ந்து அவதானிக்கப்பட்டு வருகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த கலந்துரையாடலில் காத்தான்குடி மற்றும் ஏறாவூர், கல்குடா ஆகிய பிரதேசங்களிலுள்ள உலமா சபை பிரதிநதிகள், பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பிரதிநிதிகள், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், உள்ளுராட்சி மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
http://www.jvpnews.com/srilanka/73987.html

Geen opmerkingen:

Een reactie posten