தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 3 juni 2014

உதயகலா -தயாபரராஜாவின் மறைக்கப்பட்ட மேலதிக இரகசியம்!

குடாநாட்டில் சர்வதேச சுற்றுச்சூழல் தின ஏற்பாட்டில் இராணுவத்தினர்!

இது தொடர்பிலான பத்திரிகையாளர் சந்திப்பு யாழ். இராணுவ சிவில் காரியாலயத்தில் நடைபெற்றுள்ளது.
இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த யாழ்.மாவட்ட சிவில் பாதுகாப்புப் படைகளின் இணைப்பதிகாரி மேஜர் ஜெனரல் அஜித் காரிய ஹரவன் – ஜூன் 05ஆம் திகதி உலக சுற்றுச்சூழல் தினம் சர்வதேச ரீதியாக கடைப்பிடிக்கப்பட்டுவருகின்றது. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் தெல்லிப்பழையிலிருந்து யாழ். துரையப்பா விளையாட்டரங்கு வரையில் படையினரின் மிதிவண்டிப் பவனி இடம்பெறவுள்ளது.
அதேபோல பலாலி படைத் தலைமையகத்திலிருந்து மோட்டார் சைக்கிள் பவனி துரையப்பா விளையாட்டரங்கை சென்றடையும்.
அதேவேளை யாழ்.மாவட்டம் முழுமையிலும் பொலித்தீன், பிளாஸ்ரிக், கண்ணாடிப் பொருட்களை முற்றாக அழிக்கும் நடவடிக்கையும் படைத்தரப்பினரால் முன்னெடுக்கப்படவுள்ளது.
பொலித்தீன், பிளாஸ்ரிக், கண்ணாடி போன்ற கழிவுப் பொருட்களை மீள அழித்து அவற்றில் இருந்து புதிய பொருள்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்று இராணுத்தினரிடம் உள்ளது.
எனவே கழிவு பொருட்களை இராணுவத்தினரிடம் கையளிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பில், இராணுவ அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் மத்திய சுற்றால் அதிகார சபையின் யாழ்.பிராந்தியப் பணிப்பாளரும் கலந்துகொண்டனர்.


evaloution
http://www.jvpnews.com/srilanka/71848.html

சம்மாந்துறை கல்முனை வலய மட்ட போட்டிகள்! மாணவர்கள் திண்டாட்டம்!

இரண்டிலும் கலந்துகொள்ள தகுதிபெற்ற மாணவர்கள் எப்போட்டியில் கலந்துகொள்வதென்று தெரியாமல் திண்டாடுகின்றனர்.
போட்டிகளை நடாத்த திட்டமிடும்போது போட்டிகளிடையே முரண்பாடு மோதல் வராதவண்ணம்ஏ ஏலவே திட்டமிடவேண்டுமெனவும் அவை 1 வாரகாலத்திறகு முன்பாகவாவது பிரஸ்தாப மாணவர்க்கு அறிவிக்கப்படல்வேண்டும் என இலங்கைத்தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது பற்றி மேலும் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
போட்டித்திகதி பின்போடப்பட்டால் அது பற்றியும் உரிய மாணவர்க்கு நேரகாலத்துடன் அறிவிக்கப்படவேண்டும். கல்வி அதிகாரிகள் இது விடயத்தில் கவனம் எடுத்தல் வேண்டுமென கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் அறிவுறுத்தவேண்டும்.
கிழக்கு மாகாணத்தில் தற்போது இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்கான போட்டிகள் நடைபெற்றுவருகின்றன.தமிழ்மொழித்தினப்போட்டிகள் ஆங்கில மொழிதின போட்டிகள் சமுகவிஞ்ஞான போட்டிகள் இப்படி பல போட்டிகள் மாணவர்ளுக்காக நடாத்தப்பட்டுவருகின்றன.
இப்போட்டிகளின் நோக்கங்கள் உண்மையில் நிறைவேற்றப்படவேண்டுமானால் அவை உரிய காலத்தில் மாணவர்க்கு அறிவிக்கப்பட்டு அவர்கள் தயாரான நிலையில் பரீட்சை நடாத்தப்படவேண்டும் என்று இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டுகின்றது.
கடந்த வாரம் கல்முனையில் நடைபெற்ற சமுகவிஞ்ஞானப் போட்டிக்கான அறிவித்தல் போட்டிக்கு முதல்நாளே அறிவிக்கப்பட்டுள்ளது. இது மாணவர் நலன்கருதி அவர்களது ஆளுமைகளை வெளிக்கொணர்வதற்கான செயற்பாடாக அமையாது என்பது சங்கத்தின் கருத்தாகும்.இது தொடர்பாக சங்கத்தலைவர் வி.ரி.சகாதேவராஜா கல்முனை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.ஜலீலிடம் தெரியப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக விசாரிப்பதாகவும் இனிமேல் இப்படியான குறுகியகால அறிவிப்புகளுடன் போட்டிகள் நடாத்த அனுமதிக்கப்படமாட்டாது என்றும் பணிப்பாளர் ஜலீல் உறுதியளித்தார்.
எந்தவித தயார்படுத்தலும் இல்லாமல் மாணவர்கள் போட்டிக்கு போவதென்பது ஆரோக்கியமாக இருக்காது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் குறைந்தது ஒரு வாரகாலத்திற்கு முன்பாகவாவது உரிய அதிபர்களுக்கு அறிவித்து இப்போட்டிகளை நடாத்தவேண்டும் என சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
விடுமுறை நாட்களில் போட்டியா?
கடந்தவாரம் விடுமுறை நாளொன்றில் ஏற்பாடுசெய்யப்பட்ட ஆங்கிலதினப்போட்டி நேரம் பிந்தி மாணவர் சலிப்புற்றநிலையில் ஒருசில நடுவர்களை மாத்திரம் வைத்து நடந்தேறியது.
இதுபற்றி பொறுப்பாளரிடம் கேட்டபோது விடுமுறை நாளாகையாலோ என்னவோ அழைக்கப்பட்டவர்களில் ஒரு சிலர்தான் வந்திருந்தனர். அதனாலே இந்தத்தாமதம் ஏற்பட்டது உண்மைதான். எனினும் நாம் சகல போட்டிகளையும் நடாத்திமுடித்துள்ளோம். என்றார்.
லீவு நாட்களில் போட்டிகளை வைப்பதால் நடுவர்களின் வருகை மட்டுமல்ல போட்டியாளர்கள மற்றும் அவர்களை அழைத்துவரும் ஆசிரியர்களின் வருகையும் குறைவாக உள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.
இன்றைய அவசரமான உலகில் உள்ள 02 நாள் லீவில் ஆசிரியர்கள்; எத்தனையோ வேலைகளை செய்ய திட்டமிட்டிருப்பார்கள். அதனையும் கல்வித்திணைக்களம் அபகரிக்க நினைப்பது அவர்களின் வெறுப்பையும் விரக்தியையும் தோற்றுவிக்கும் என்பதில் இருவேறு கருத்துக்கிடமில்லை என்று சொல்லப்படுகிறது.
இப்படி வேலைப்பழு கூடிய ஆசிரியர்களை கசக்கிப்பிழிய நினைத்தால் எதிர்பார்க்கின்ற அடைவுமட்டத்தை ஒருபோதும் அடையமுடியாது என்பது சஙகத்தின் கருத்தாகவுள்ளது.
http://www.jvpnews.com/srilanka/71845.html

உதயகலா -தயாபரராஜாவின் மறைக்கப்பட்ட மேலதிக இரகசியம்

உதயகலா மற்றும் அவர் கணவர் தயாபரராஜா என்றாலே, பெரும் சுத்துமாத்து என்பது அனைவரும் அறிந்த விடையம். இவர்கள் இருவரும் சமீபத்தில் கள்ள படகு ஒன்றில் சென்று தமிழகத்தில் கரையொதுங்கினார்கள். இதற்கு முன்னதாக என்ன நடந்தது என்பது தொடர்பாக உங்களுக்கு அறிய ஆவலாக இருக்கும் அல்லவா ? இதோ அந்த விபரங்கள்.
நாளாக நாளாக இவர் அங்கும் பல மோசடிகளை செய்வதுடன் கல்விகற்ற சில மாணவிகளுடனும் காதல் லீலைகளில் ஈடுபட்டு பல தடவை எழில்வண்ணனால் எச்சரிக்கப்பட்டார். 2008ம் ஆண்டு உதயகலா (இவர் ஏற்கனவே ஒரு போராளியின் மனைவி. கணவர் காயப்பட்டு சிகிச்சைக்காக வெளிநாடு சென்றவேளை) இவர் தயாபரராஜாவுடன் தொடர்பினை ஏற்படுத்தினார்.
இவரின் முதல் இரண்டு பிள்ளைகளும் மேற்படி போராளிக்கும் இவருக்கும் பிறந்தவர்கள் என்று கூறப்படுகிறது. தயாபரராஜாவுடன் ஏற்பட்ட தொடர்பினை அடுத்து விடுதலைப் புலிகள் இவரை, சிறையில் அடைத்தார்கள்.
பின்னர் 2009ம் ஆண்டு வன்னியில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக விடுதலை செய்யப்பட்டான். இதன் பின்னர் சுதந்திரபுரம் பகுதி ஊடாக இராணுவத்தின் பகுதிக்கு உதயகலாவுடன் தப்பிச்சென்று விடுதலைப்புலிகளுக்கு எதிராக வானொலியில் பேட்டி கொடுத்தார் தயாபரராஜ. இப்பேட்டி ஒலிபரப்பப்பட்டு சில நாட்களில் தயாபரராஜாவை, கொழும்பில் வைத்து விடுதலைப் புலிகள் சுட்டுக்கொன்றுவிட்டதாகவும் அதே வானொலிகள் அறிவித்தது. யுத்தம் முடிவடைந்த பின்னர் சில கணினிப்பிரிவு போராளிகளை இவர் காட்டிக்கொடுத்தும் உள்ளார். பின்னர் இராணுவத்துடன் இணைந்து தமிழர்களை ஏமாற்றி வந்தார்கள்.
பெரும் மோசடிகளில் ஈடுபட்ட இவர்கள், இறுதியாக சிலரிடம் பெருந்தொகைப் பணத்தைப் பெற்றுக்கொண்டு அவுஸ்திரேலியா செல்லலாம் என்று கூறி பின்னர் அவர்கள் அனைவரையும் தமிழக கடற்கரையில் கொண்டுபோய் விட்டுள்ளார். அத்தோடு தமிழகத்தில் தம்மை இலங்கை இராணுவம் அச்சுறுத்துவதாகவும் பேட்டி கொடுத்துள்ளார்கள். இவர்களை கியூ பிரிவு பொலிசார் கைதுசெய்துள்ளார்கள்.

இவர்கள் மோசடி தொடர்பாக தமிழகத்தில் உள்ள பொலிசாரிடம் யாராவது முறைப்பாடு செய்தால் அவர்கள் தக்க நடவடிக்கை எடுப்பார்கள் என்று அறியப்படுகிறது. எனவே பாதிக்கப்பட்ட மக்கள், தமிழக பொலிசாரை தொடர்புகொள்வது நல்லது.tamilnadutamilnadu-01tamilnadu-02
http://www.jvpnews.com/srilanka/71840.html

Geen opmerkingen:

Een reactie posten