[ செவ்வாய்க்கிழமை, 03 யூன் 2014, 04:45.00 PM GMT ]
பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் நாடுமுழுவதிலும் அடையாள பணிப் பகிஸ்கரிப்பு போராட்டம் நடைபெற்றது.
கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் வந்தாறுமூலை வளாகத்தின் முன் அடையாள பணிப் பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதுடன் தமது கோரிக்கைகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களையும் விநியோகித்தனர்.
பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஆய்வுப் பணிகளுக்கான கொடுப்பனவு தொடர்பில் நிபந்தனை விதிக்கக் கூடாது உள்ளிட்ட சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
தமது கோரிக்கைகளுக்கு உயர்கல்வி அமைச்சு உரிய தீர்வினை வழங்கத் தவறியுள்ளதாகவும், அரசாங்கம் தொடர்ந்தும் உதாசீனம் செய்தால் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கை எடுக்க நேரிடும் என பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தெரிவித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmsyGTXLZfq0.html
பொலிஸ் உயரதிகாரியின் வாகனத்திற்கு கசிப்பு வர்த்தகர்கள் தவணைக் கட்டணம் செலுத்தினர்!– அமைச்சர் ஆதாவுத
[ செவ்வாய்க்கிழமை, 03 யூன் 2014, 04:18.47 PM GMT ]
நான் மாவனல்ல வரும் போது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இரண்டு வாகனங்களை கொள்வனவு செய்திருந்தார்.
அந்த இரண்டு வாகனங்களுக்கும் கசிப்பு வர்த்தகத்தில் ஈடுபடும் வர்த்தகர்களே பினான்ஸ் செலுத்தினர். இது குறித்து பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்து, நான் அவரை இடமாற்ற நடவடிக்கை எடுத்தேன்.
ஓய்வு பெற்றுக் கொள்ள சில நாட்களே இருப்பதாகத் தெரிவித்து இடமாற்றம் செய்ய வேண்டாம் என என்னிடம் கோரினார்.
நான் அந்தக் கோரிக்கையை நிராகரித்தேன். எனினும்ää யாரிடமோ சொல்லி இடமாற்ற உத்தரவினை ரத்து செய்து கொண்டார். இன்று எமது அரசியல்வாதிகளிடம் கசி;ப்பு வர்த்தகர்கள் நெருங்கிப் பழகுகின்றனர்.
தேர்தல் காலங்களில் சட்டவிரோதமான செயற்பாடுகளில் ஈடுபடுவோரிடம் அரசியல்வாதிகள் உதவி பெற்றுக்கொள்கின்றனர்.
ஒன்றிரண்டு மூடை அரிசியை குறித்த சட்டவிரோத வர்த்தகர்கள் அரசியல்வாதிக்கு நன்கொடையாக வழங்குகின்றனர்.
இதனால் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டாம் என அரசியல்வாதிகள் பொலிஸாருக்கு பணிப்புரை விடுகின்றனர்.
நான் மாவனல்ல வரும் போது இந்த நிலைமையே காணப்பட்டது. சமூகத்தில் பலர் சமய அனுட்டாங்களில் ஈடுபடுவதில்லை.
பௌத்த பிக்குகள் தஹாம் பாடசாலைகளை மட்டும் நடத்தினால் போதுமானதல்ல.
இன்று சிலர் மதத்தின் பெயரில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகி;ன்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாவனல்ல பிரதேச செயலக காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGTXLZfqz.html
உன்னுடைய கணவர் எங்கே?- அங்கவீனமான முன்னாள் பெண் போராளியைத் தாக்கிய மர்ம நபர்கள்
[ செவ்வாய்க்கிழமை, 03 யூன் 2014, 03:49.26 PM GMT ]
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
கிளி.செல்வாநகர் நாகதம்பிரான் ஆலயத்திற்கு சமீபமாக வீடொன்றில் வசிக்கும் அனுஸ்குமார் சுமதி என்ற இரு பிள்ளைகளின் தாயான முன்னாள் போராளியின் வீட்டிற்கு இன்றைய தினம் மாலை 5மணியளவில்,
முழுமையாக முகம் மறைக்கப்பட்ட தலைக்கவசங்கள் அணிந்தவாறு இரு மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள், வீட்டினுள் புகுந்து உன்னுடைய கணவர் எங்கே என குறித்த பெண்ணிடம் கடும் தொனியில் கேட்டுள்ளதுடன், அந்தப் பெண்ணை பொல்லுகள், தடிகளால் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.
இதன் பின்னர் குறித்த பெண் கூச்சலிட்டு அயலவர்களை அழைத்துபோது, அயலவர்கள் அந்த இடத்தில் கூடிய நிலையில் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
மேலும் குறித்த பெண்ணும், அவருடைய கணவரும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் போராளிகளாக இருந்துள்ளனர்.
இந்நிலையில் போரில் காயமடைந்து நிரந்தர அங்கவீனமான நிலையில் (இடுப்பிற்கு கீழ் இயங்காது) படுகையில் குறித்த பெண் இருந்துள்ளார்.
கணவர் போரின் பின்னர் வெளிநாடு ஒன்றிற்குச் சென்றுள்ளார். மேலும் தற்போது இந்தப் பெண் அவருடைய பெற்றோரின் கண்காணிப்பில் இருக்கின்றார்.
இந்நிலையில் கணவரை தேடிச்சென்ற நபர்களே தன்னை தாக்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் கணவரை எதற்காக, யார் தேடினார்கள் என்பது தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என அவர் கூறியிருப்பதுடன், தற்போது அவர் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
http://www.tamilwin.com/show-RUmsyGTXLZfqy.html
Geen opmerkingen:
Een reactie posten