[ செவ்வாய்க்கிழமை, 03 யூன் 2014, 01:31.41 PM GMT ]
மட்டக்களப்பில் இராணுவ உயரதிகாரிகள் பயணம் செய்த வான் மோதி 7 வயது மாணவியொருவர் உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு கதிரவெளியில் சற்றுமுன்னர் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
புத்தளம் பிரதேசத்தில் இருந்து வெலிஓயா திருகோணமலை நோக்கி இராணுவ உயர் அதிகாரிகள் பயணம் செய்த வான் பாடசாலை விட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்த மாணவியை மோதியதினால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கதிரவெளி கனிஸ்ட வித்தியாலயத்தில் கல்வி பயிலும் ம.பொபித்தா என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் தற்போது வாழைச்சேனை மாவட்ட வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை வாகரை பொலிசார் மேற்கொண்டு வருவதாக மேலும் தெரிவித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmsyGTXLZfp4.html
தெஹிவளையில் 4 பேர் கைது- கொள்ளையர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு
[ செவ்வாய்க்கிழமை, 03 யூன் 2014, 01:41.21 PM GMT ]
சந்தேக நபர்களிடமிருந்து 437 போலி கடன் அட்டைகள் மீட்கப்பட்டுள்ளன.
சந்தேக நபர்கள் நாட்டின் பல பகுதிகளில் உள்ள ஏ.ரீ.எம்.களின் ஊடாக பணம் மீளப்பெற்றுக் கொண்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் தெஹிவளையில் வாடகை வீடொன்றில் தங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
நெல்லியடி, வெள்ளவத்தை மற்றும் திருகோணமலை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடன் அட்டை மோசடிக்காக பயன்படுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் 40,000 ரூபா பணம் ஆகியனவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மட்டு.களுவாஞ்சிக்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட கொள்ளையர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு
அம்பாறை மற்றம் மட்டக்களப்பு மாவட்டங்களில் சமூர்த்தி வங்கி மற்றும் தபாலகங்கள் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டது தொடர்பில் களுவாஞ்சிக்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நான்கு சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் தொலைபேசி அழைப்பினைக் கொண்டு களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டுவந்த விசாரணையின் அடிப்படையில் கல்முனையினை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டதுடன் கொள்ளையிடப்பட்ட பெருமளவான பொருட்களும் கைப்பற்றப்பட்டிருந்தன.
இதனைத்தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தொடர் விசாரணையின்போது மேலும் இருவர் கைது செய்யப்பட்டிருந்ததுடன், அவர்கள் களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்று மூலம் நேற்று திங்கட்கிழமை வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
நேற்று குறித்த வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது எதிர்வரும் 16ம் திகதி வரையில் விளக்கமறியல் நீடிப்பினை நீதிவான் நீதிமன்ற நீதிபதி முகமட் றியாழ் வழங்கியுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
கல்முனைக்குடியினை சேர்ந்த அஸ்ரப் என்று அழைக்கப்படும் ஜோன்சன் ஜனரூபன், பாண்டிருப்பினை சேர்ந்த மயில்வாகனம் மதியழகன், அதே இடத்தை சேர்ந்த கணபதிப்பிள்ளை சந்திரன், கல்முனையினை சேர்ந்த கனகரட்னம் நிசாந்தன் ஆகியோரே தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆறு மாத காலமாக அம்பறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் உள்ள பல தபாலகங்கள், சமூர்த்தி வங்கிகள், இலத்திரனியல் விற்பனை நிலையங்கள் கொள்ளையிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyGTXLZfp5.html
படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் காணாமல் போனவர்களது நிலை என்ன?- முல்லைத்தீவில் கவனயீர்ப்பு
[ செவ்வாய்க்கிழமை, 03 யூன் 2014, 02:46.12 PM GMT ]
குறித்த விடயம் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன் ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
2009ம் ஆண்டு போர் நிறைவடைந்து விட்டதாக கூறப்பட்ட நிலையில் பெருமளவு மக்கள் தங்கள் உறவினர்களை படையினரிட ம் நேரடியாகவே ஒப்படைத்தனர்.
ஆனால் அவர்கள் எவரும் தற்போது இல்லை. அவர்களுக்கு என்ன நடந்தது என்பதனையும் சிறீலங்கா அரசாங்கம் தெரிவிக்க மறுத்து வருவதுடன், காணாமல் போனவர்களுக்கு மரணச்சான்றிதழ்களை வழங்கவே நடவடிக்கை எடுக்கின்றது.
இந்நிலையில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் வாழ்வாதார நெருக்கடி, சமூக நெருக்கடி உள்ளிட்ட நெருக்கடிகளால் இயலாமைகளுடன் அவலவாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
எனவே அவற்றை சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டுவரும் வகையில் வெளிப்படுத்தும் வகையிலும், 5ம் திகதி முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் 12பேர் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவின் விசாரணைகள் நடைபெறவுள்ள நிலையில் அதற்குப் பலம் சேர்க்கும் வகையிலும் இந்த போராட்டத்தை நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.
எனவே இதில் அரசியல் வேறுபாடுகள், கட்சி வேறுபாடுகள் கடந்து இதனை ஒரு இனத்தின் பிரச்சினையாகவும், மனிதாபிமானப் பிரச்சினையாகவும் கருத்தில் எடுத்து தமிழ் தேசிய கட்சிகள், மனிதவுரிமை அமைப்புக்கள், பெண்கள் அமைப்புக்கள் போன்றன பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
குறித்த போராட்டம் 5ம் திகதி வியாழக்கிழமை முல்லை மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக காலை 9மணி தொடக்கம் 11மணி வரையில் நடைபெறும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGTXLZfp6.html
Geen opmerkingen:
Een reactie posten