தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 23 juni 2014

சிறிய விடயங்களுக்கெல்லாம் கடையடைப்பு போராட்டமா? – ஜனாதிபதி

போலிக் கடவுச்சீட்டு வைத்திருந்த இலங்கையர் அறுவர் கைது
[ திங்கட்கிழமை, 23 யூன் 2014, 03:55.43 PM GMT ]
போலிக் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி வெளிநாட்டுக்கு செல்ல முயற்சித்ததாக கூறப்படும் சென்னையில் வசிக்கும் ஆறு இலங்கையரை சென்னை பொலிஸார் இன்று திங்கட்கிழமை கைது செய்துள்ளனர்.
போலி பிரயாணப் பத்திரங்களை விநியோகித்தவருக்காக காத்திருந்த போதே மேற்படி அறுவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இக்குழுவானது கடவுச்சீட்டுகளுக்கு தலா 30,000 ரூ வீதம் செலுத்தியுள்ளதாகவும் இவ்வாறாக வெளிநாட்டுக்கு சென்றவர்கள் இக்கடவுச்சீட்டையே பயன்படுத்தியிருக்க வேண்டும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் அது போன்ற போலி வீசாக்களும் இலங்கையில் வசிப்பவர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு அனுப்பி வைத்திருக்கலாம் என்று மேலும் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் இருவர் ஏற்கெனவே இதே குற்றத்தினால் சிறைத்தண்டனை பெற்றவர்களாவர்.
இவ்வாறான போலிக்கடவுச்சீட்டை பிரயோகித்து வெளிநாடுக்கு செல்ல முயற்சித்ததினால் இதற்கான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyGRXLafw6.html
சிறிய விடயங்களுக்கெல்லாம் கடையடைப்பு போராட்டமா? – ஜனாதிபதி
[ திங்கட்கிழமை, 23 யூன் 2014, 03:09.15 PM GMT ]
அளுத்கம மற்றும் தர்கா நகர் பகுதிகளில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களை சிறிய விடயம் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வர்ணித்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் எரிபொருள் நிரப்பும் நடவடிக்கைகள் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்ட வேளையில் ஜனாதிபதி உரையாற்றி இருந்தார்.
அதன் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைகளுக்கு எதிராக யாரும் கடையடைப்பு போராட்டத்தை நடத்தவில்லை.
ஆனால் தற்போது சிறிய சிறிய விடயங்களுக்கு பாரிய கடையப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது ஜனாதிபதி,  அளுத்கம சம்பவத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதை எடுத்துக் காட்டுவதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyGRXLafw2.html

Geen opmerkingen:

Een reactie posten