தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 23 juni 2014

பொதுபல சேனாவை மூன்று சட்டங்களின் கீழ் கைது செய்ய வேண்டும்: சட்டத்தரணிகள் சங்கம்

சுனாமி காலத்தில் இலங்கையில் கடமையாற்றிய பிரித்தானிய அதிகாரிக்கு உளவியல் அழுத்தம்
[ திங்கட்கிழமை, 23 யூன் 2014, 04:55.30 PM GMT ]
சுனாமி இடம்பெற்ற காலத்தில் இலங்கையில் கடமையாற்றிய பிரித்தானிய அதிகாரி ஒருவருக்கு அழுத்தம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
2004ம் ஆண்டு சுனாமி இடம்பெற்ற காலத்தில் குறித்த அதிகாரி இலங்கையில் கடமையாற்றியிருந்தார்.
டேவிட் கொலின்ஸ் என்ற 45 வயதான பொலிஸ் பயிற்சியாளரே இவ்வாறு மன அழுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார்.
டேவிட் கொலின்ஸ் சடலங்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பணியினால் தமக்கு உளவில் ரீதியான அழுத்தம் ஏற்பட்டதாகத் தெரிவித்த கொலினஸ் 400, 000 ஸ்ரெலிங் பவுண்ட்கள் நட்ட ஈடாக பெற்றுக்கொண்டுள்ளார்.
சுனாமி அனர்த்தம் இடம்பெற்ற காலத்தில் இலங்கை மக்களுக்கு உதவிக் கிட்டியமை மகிழ்ச்சியளிப்பதாக கொலின்ஸ் தெரிவித்துள்ளார்.
பெரும் எண்ணிக்கையிலான சடலங்களை அடையாளம் காண உதவியளித்தாகவும், இந்த பணிகளினால் தமது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRXLafxy.html
பொதுபல சேனாவை மூன்று சட்டங்களின் கீழ் கைது செய்ய வேண்டும்: சட்டத்தரணிகள் சங்கம்
[ திங்கட்கிழமை, 23 யூன் 2014, 03:06.14 PM GMT ]
பொதுபல சேனாவைச் சேர்ந்தவர்களை மூன்று சட்டங்கங்களின் கீழ் கைது செய்து தண்டனைக்கு உட்படுத்த முடியும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்த சங்கம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் தர்கா நகரில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் 40க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். ஆனால் அவர்கள் அனைtரும் பாரிய பனிப்பாறை ஒன்றின் சிதைவுகளே தவிர, இந்த சம்பத்தின் சூத்திரதாரிகள் இல்லை.
இந்த சம்பவத்தின் பின்னணியில் செயற்பட்டுள்ளர்கள் யார், யார் என்பது பொது மக்கள் அனைவருக்கும் நன்கு தெரியும். அவர்களை கைது செய்ய வேண்டிய பொறுப்பு காவற்துறையினருக்கு இருக்கிறது.
சர்வதேச மத உரிமை சட்டம், பயங்கரவாத தடுப்பு சட்டம் மற்றும் இலங்கை அரசியல் சட்டத்தின் 1983 ஆண்டின் திருத்தப்பட்ட மதம் சார்ந்த நிகழ்வுகள் தொடர்பான சட்டம் போன்று மூன்று சட்டங்களையும் பொதுபல சேனா மீறி இருக்கிறது.
இது வெளிப்படையான உண்மை. ஆகவே இந்த மூன்று சட்டங்களின் கீழும் அவர்களை கைது செய்து தண்டனை வழங்க வேண்டும் என்று சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyGRXLafw1.html

Geen opmerkingen:

Een reactie posten