தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 2 juni 2014

மோடியால் மாத்திரமே ராஜபக்சவை கட்டுப்படுத்த முடியும்! காரணம் என்ன?



இந்தியாவின் புதிய அரசாங்கம் பதவியேற்று ஒரு வாரத்திற்குள், இலங்கை அரசு 13வது திருத்தச் சட்டத்தின் கீழ் தீர்வொன்றைப் பரிசீலிப்பதற்கு தயாரென இந்தியாவிற்கு அறிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
லங்காசிறி வானொலியில் இடம்பெறும் “நிஜத்தின் தேடல்” நிகழ்ச்சியில் கனடாவிலிருந்து சுதர்மா கலந்து கொண்டு தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
அதன்போது,  பல தசாப்தங்களாக இலங்கையின் அரசியல்சார் நிலைப்பாடுகளில் அக்கறை செலுத்தும் போக்கைக் கொண்டிருக்கும் இந்தியா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஆரோக்கியமான உறவை பேணலாம்.
13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்ட அமுலாக்கல் தொடர்பாக வெளிவரும் பல செய்திகளும் உத்தியோகப்பற்றற்றவை எனவும் ஊகங்களை அடிப்படையாகக் கொண்டவை என்பதாலும் அவற்றை முக்கியப்படுத்திப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் சுதர்மா தெரிவித்தார்.
மேற்குலகு இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளின் தலைமைப் பொறுப்பை இந்தியாவிடம் ஒப்படைக்கும் சாத்தியம் இருப்பது மற்றும் சீனா அப்படியான முயற்சிக்கு ஆதரவளிப்பது தொடர்பான பல கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyGTWLZgw0.html

Geen opmerkingen:

Een reactie posten