யாழ் மணியந் தோட்ட பகுதி அடாவடி மனிதர்கள் கைது
யாழ்ப்பாணம் மணியம் தோட்டப் பகுயில் வீதியில் நின்று பொதுமக்களுக்கு கேடு விளைவித்துக் கொண்டு நின்ற நால்வர் படையினரால் கைது செய்யப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இராணுவத்தினரின் இந்தச் செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் மகிழ்ச்சியைத் தோற்றுவித்துள்ளது.
http://www.jvpnews.com/srilanka/71694.html
வல்லை இராணுவ முகாம் படைத்தளமாக விஸ்தரிப்பு
வல்லை இராணுவ முகாமைப் படைத்தளமாக விஸ்தரிக்கும் முயற்சியில் இராணுவத்தினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். போர் அனர்த்தம் இடம்பெற்ற காலத்தில் வல்லைச் சந்தியில் இராணுவச் சோதனை முகாமை அமைக்கப்பட்டு சோதனைகளும், வாகனப் பதிவுகளும் இடம்பெற்று வந்தன. யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதை அடுத்துச் சோதனை நடவடிக்கைகள் தளர்த்தப்பட்டு இராணுவ முகாமும் சந்நிதி கோயில் வீதிப் பக்கமாகப் பின்னகர்த்தப்பட்டது. பின்னர் பருத்தித்துறைப் பிரதான வீதியின் பக்கமாக சிறிய முகாமாக அமைக்கப்பட்டிருந்த இந்த முகாமைத் தற்போது இராணுவத்தினர் புனரமைத்து பெரிதாக்கிவருகின்றனர்.
http://www.jvpnews.com/srilanka/71685.html
மலேசியாவில் பிடிபட்ட புலிகளின் சிறப்புத் தளபதி “குசந்தன்” பற்றிய முக்கிய தகவல்கள்
இவர் விடுதலைப்புலிகளின் விமானப்படையில் மிக முக்கிய பொறுப்பில் இருந்த இவர்தான் சிலின் ரக விமானங்களை தாக்குதல் விமானங்களாக மாற்றியதாக கூறப்படுகின்றது.
தென்மராட்சியின் மீசாலையை சேர்ந்த சுந்தரலிங்கம் குசந்தன் என்ற இவர் 1994இல் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டுள்ளார். விடுதலைப்புலிகள் அமைப்பில் குசந்தன் மாஸ்ரர், முல்லைசசெல்வன் உள்ளிட்ட பெயர்களினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். ஆரம்பத்தில் சரத்பாபு 6 பயிற்சிமுகாமில் பயிற்சிபெற்று இம்ரான் பாண்டியன் படையணியில் இணைந்தபோதும், சில மாதங்களிலேயே விமானப்படையில் இணைக்கப்பட்டிருந்தார்.
அச்சுதன் மற்றும் கேணல் சங்கருடன் குசந்தன்
கேணல் சங்கரின் தலைமையில் இயங்கி விமானப்படையிணில் மிக விரைவிலேயே தேர்ச்சி பெற்ற விமானியாக அவர் உருவாகிவிட்டார். மேலதிக பயிற்சிகளிற்காக மலேசியா சென்று விமான ஓட்டுனர் பயிற்சியை பெற்றவர், அடுத்து கனடாவில் விமானப்பொறியியல் படிப்பை நிறைவு செய்தார். இதன்பின்னர் 1998 இல் இலங்கைக்கு திரும்பியுள்ளார். இதன்பின்னர்தான் விடுதலைப்புலிகளின் வான்படை துரித வளர்ச்சி பெற்றுள்ளது. அதுவரை சிறிய சிலின் ரக விமானங்களை வைத்து பறப்பு முயற்சிகளில் மட்டும் ஈடுபட்டு வந்த புலிகள், குசந்தனின் வரவின் பின்னர் வேறு வடித்திற்கு மாறியுள்ளனர். சிலின் ரக விமானங்களை உள்ளூர்வளங்களை மட்டும் பாவித்து தாக்குதல் விமானங்களாக மாற்றினார். இந்த விமானங்களையே இறுதிவரை விடுதலைப்புலிகள் பயன்படுத்தினார்கள். முல்லைத்தீவின் கேப்பாப்புலவு மற்றும் கிளிநொச்சியின் இரணைமடு பகுதிகளிலேயே இந்த பணிகள் தீவிரமாக நடந்தன. மற்றொரு முக்கிய வான்புலியாகிய அச்சுதனும் இதில் தீவிர பங்காற்றியிருக்கிறார்.

விமானப்பறப்பு முயற்சி ஒன்றில் குசந்தனும் அச்சுதனும்
விமானப்பறப்பு முயற்சி ஒன்றில் குசந்தனும் அச்சுதனும்
குசந்தன் விடுதலைப்புலிகளின் விமானியாக தீவிர பணியாற்றியது தொடர்பான தகவல்களை தாம் ஏற்கனவே வைத்திருந்ததாக இராணுவப்புலனாய்வுத்துறை கூறுகிறது. இதற்கான புகைப்பட ஆதாரங்கள் இறுதி யுத்தகாலத்தில் கிடைத்ததாகவும் கூறியது.
குசந்தனின் திருமண நிகழ்வில் விடுதலைப்புலிகளின் தலைவர் தனது மனைவியுடன்
http://www.jvpnews.com/srilanka/71688.html
Geen opmerkingen:
Een reactie posten