[ வியாழக்கிழமை, 19 யூன் 2014, 02:13.42 AM GMT ]
நேற்று நாடாளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் இன்று ஐக்கிய நாடுகள் அமைப்பினையும் அதன் நடவடிக்கைகளையும் போற்றி புகழ்ந்து பாடி வருகின்றன.
குறை அபிவிருத்தி நாடுகளை அபிவிருத்தி நோக்கி இட்டுச் செல்லும் நோக்கிலேயே ஐக்கிய நாடுகள் அமைப்பு உருவாக்கப்பட்டது.
ஆரம்ப காலத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பினால் செய்யப்பட்ட பிரகடனங்கள் இணக்கப்பாடுகள் தற்போது உதாசீனம் செய்யப்பட்டு வருகின்றன.
ஐக்கிய நாடுகள் அமைப்பு அமெரிக்காவின் கைப்பொம்மையாக செயற்படுகின்றது.
அமெரிக்காவின் அதிகரத்தை தக்க வைத்துக் கொள்ள ஏனைய நாடுகளின் ஸ்திரத்தனமைக்கு குந்தகம் ஏற்படுத்தி வருகின்றது.
இதற்கு நாம் இடமளிக்கக் கூடாது என வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGSdLaiw7.html
தமிழ் ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிகளை பாதுகாப்பு அமைச்சு ரத்துச்செய்கிறது!- ரணில் குற்றச்சாட்டு
[ வியாழக்கிழமை, 19 யூன் 2014, 02:17.45 AM GMT ]
அண்மையில் ட்ரான்பேரன்சி இன்டர்நெசனல் ஏற்பாடு செய்திருந்த தமிழ் ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி பட்டறையை இரண்டு தடவைகள் பலாத்காரத்தை பயன்படுத்தி ரத்து செய்யப்பட்டதாக ரணில் குறிப்பிட்டார்.
நாட்டில் ஊடக சுதந்திரம் இருப்பதாக கூறிக்கொண்டு அரசாங்கம் இவ்வாறான செயல்களை செய்துவருவதை அவர் கண்டித்தார்.
தமிழ் ஊடகவியலாளர்கள் புலனாய்வு ஊடகக்கற்கையை பெற்றுவிடக்கூடாது என்ற அடிப்படையிலேயே இந்த செயல் மேற்கொள்ளப்பட்டதா என்று அவர் கேள்வி எழுப்பினார்.
பாதுகாப்பு அமைச்சுக்கு இவ்வாறான ஊடக கற்கை நெறிகளை ரத்துச் செய்யும் அதிகாரம் குறித்து அவர் பிரதம மந்திரியிடம் கேள்வி எழுப்பினார்.
இதேவேளை வடக்குகிழக்கு ஊடகவியலாளர்களுக்காக நடத்தப்பட்ட இந்த பயிற்சி ரத்துச் செய்யப்பட்டமை தொடர்பில் முறைப்பாடுகளை பொலநறுவை பொலிஸார் ஏற்றுக்கொள்ளவில்லை.
அதேநேரம் நீர்கொழும்பில் அந்த நிகழ்வு நடத்தப்பட்டபோது பொலிஸார் அதற்கு பாதுகாப்பு வழங்கவில்லை.
இதனையடுத்து குறித்து ஊடகவியலாளர்கள் அழைத்து வரப்பட்டு கொழும்பு கலதாரி ஹோட்டலில் தங்க வைக்கப்பட்ட போது அங்கும் அவர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக ரணில் குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyGSdLaixy.html
சர்வதேச விசாரணைக்கு ஏன் அஞ்ச வேண்டும்: பாராளுமன்றில் அரியம் எம்.பி கேள்வி
[ வியாழக்கிழமை, 19 யூன் 2014, 02:33.30 AM GMT ]
இலங்கைக்கு ஐ.நாவின் சர்வதேச விசாரணைக் குழுவை அனுமதிக்கக்கூடாது என பாராளுமன்றில் நேற்று விசேட தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இந்த தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் பாராளுமன்றில் ஜனாதிபதியின் முன்னுக்குப் பின்னான நடவடிக்கைகள் தொடர்பில் கேள்வி எழுப்பினார்.
அவர் தனது உரையில் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தத்தை நடத்துவதற்காக 21 நாடுகளின் உதவிகளைப் பெற்றபோது இந்தப் பாராளுமன்றம் அதை எதிர்க்கவில்லை. தற்போது அந்தப் போரில் இடம்பெற்ற தவறுகள் குறித்து அதே நாடுகள் கேள்வி எழுப்பும்போது எதிர்ப்பது ஏன்?
இதேவேளை நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பது தொடர்பாக பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது அது தோற்கடிக்கப்பட்ட நிலையில், ஜனாதிபதி தனது சர்வ சக்தியை பயன்படுத்தி நல்லிணக்க ஆணைக்குழுவை அமைத்துவிட்டு தற்போது சர்வதேச விசாரணை என்று வந்ததும் ஏன் அதைப் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பிற்கு விட வேண்டும்.
இலங்கையின் அரசியலமைப்பு தமிழ் மக்களுக்கான இடம் எதனையும் வழங்கவில்லை.
காலம் காலமாக அதை தமிழ் தலைவர்கள் நிராகரித்தே வந்துள்ளனர். நாட்டைப் பாதுகாக்க விரும்புவர்கள் தமிழ் மக்களுக்கு நீதியை வழங்கியிருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது.
வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று அவர்களின் பிரதிநிதிகளாக பாராளுமன்றத்திற்கு வருகை தந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினராகிய நாங்கள் இறுதிப் போரில் நடைபெற்ற குற்றச் செயல்கள் தொடர்பில் ஐ.நா நடத்தும் சர்வதேச விசாரணையை ஆதரிக்கின்றோம் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmsyGSdLaixz.html
Geen opmerkingen:
Een reactie posten