முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறித்து சர்வதேச சமூகத்திடம் முறைப்பாடு செய்ய நேரிடும்!- ஹக்கீம்
[ வியாழக்கிழமை, 19 யூன் 2014, 01:43.54 AM GMT ]
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் மக்கள் தொடர்ச்சியாக துன்புறுத்தப்பட்டால் அது பற்றி இராஜதந்திரிகளின் ஊடாக சர்வதேசத்திற்கு எடுத்துச் செல்ல நேரிடும்.
அரசாங்கத்தை விட்டு விலகி அழுத்தங்களை ஏற்படுத்துவதனை விடவும் அரசாங்கத்தில் இருந்து கொண்டு அழுத்தங்களை பிரயோகிக்க முடியும்.
பதவியை துறப்பதன் மூலம், பதவி விலகாமல் இருப்பதனை விடவும் நன்மைகள் ஏற்படும் என எவரேனும் நிரூபித்தால் உடனடியாக பதவி விலகத் தயார்.
அளுத்கம பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படும் வரையில் நாம் காத்திருக்கின்றோம்.
மத நல்லிணக்கம் மற்றும் சிறுபான்மை மக்களின் நிலைமைகள் குறித்து ஆராயும் சர்வதேச பிரதிநிதிகள் குழுவினர் இலங்கைக்கு விஜயம் செய்ய அனுமதிக்க வேண்டும்.
இந்தப் பிரதிநிதிகள் குழு நீண்ட காலமாக இலங்கை விஜயம் செய்ய கோரிக்கை விடுத்து வரப்படுகின்றது.
நாட்டின் பிரச்சினைகளுக்கு உள்ளுரி;ல் தீர்வு காண முடியாவிட்டால் வெளிநாடுகளின் உதவியை நாடுவதில் தவறில்லை என ரவூப் ஹக்கீம் சுட்டிக்காட்டியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGSdLaiw3.html
சர்வதேச சமூகத்தை வெறுமனே விமர்சனம் செய்வதில் பயனில்லை!– விஜயதாச ராஜபக்ச
[ வியாழக்கிழமை, 19 யூன் 2014, 12:06.26 AM GMT ]
போர் வெற்றி கொள்ளப்பட்ட போதிலும் சர்வதேச சமூகத்தை வெற்றிகொள்ள அரசாங்கம் தவறியுள்ளது.
ஆளும் கட்சியின் அமைச்சர்கள் பொறுப்புணர்ச்சியற்ற வகையில் சர்வதேசத்தை விமர்சனம் செய்கின்றனர்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை பரிந்துரைகள் அமுல்படுத்தப்படவில்லை.
தாருஸ்மன் அறிக்கை குறித்து திருப்தி அடைய முடியாது. அரசாங்கத்திற்கு எதிராக 5 குற்றச்சாட்டுக்களும்ää தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக 6 குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்பட்டுள்ளன.
வெளிவிவகார சேவை பலவீனமடைந்துள்ளது. வெளிவிவகார சேவையில் உறவினர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா விசாரணைக்குழுவினை நாட்டுக்குள் அனுமதிக்கக் கூடாது என்ற தீர்மானத்தை பிரதமரோ, வெளிவிவகார அமைச்சரோ ஏன் கொண்டு வராமல், புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்டு வந்தனர்?
போரின் பின்னர் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாக அரசாங்கம் அறிவித்த போதிலும், நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கம் எதுவும் செய்யவில்லை.
அரசாங்கம் இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்படுகின்றது.
எதிர்கால தேர்தல்களின் போது ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு முஸ்லிம் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGSdLaiw0.html
அளுத்கம சம்பவங்கள் கனேடிய இலங்கைக்குழுக்கள் கண்டனம்
[ வியாழக்கிழமை, 19 யூன் 2014, 02:11.44 AM GMT ]
அளுத்கமயில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகள் தொடர்கின்றன. எனினும் இலங்கை அரசாங்கம் உரிய நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை என்று ஊடகங்கள் கூறுவதை கனேடிய இலங்கைக்குழுக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இலங்கையில் மதசுதந்திரம் மற்றும் இனமுறுகல்கள் முடிவுக்கு கொண்டு வரப்படவேண்டும் என்றும் இந்தக்குழுக்கள் கோரியுள்ளன.
இலங்கையில் இனத்துவ புறக்கணிப்புகள் கைவிடப்படவேண்டும் என்றும் இந்தக்குழுக்கள் கேட்டுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmsyGSdLaiw6.html
Geen opmerkingen:
Een reactie posten