தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 19 juni 2014

கொழும்பு, வாழைச்சேனை, யாழ் மற்றும் வவுனியா,புல்மோட்டை ... முஸ்லிம்கள் ஹர்த்தால்



புலம்பெயர் நாடுகளில் இந்திய தூதரகத்திற்கு முன்பாக நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டம்
[ வியாழக்கிழமை, 19 யூன் 2014, 01:50.34 AM GMT ]
18.06.2014 புதன்கிழமை நோர்வே, பிரான்ஸ், யேர்மன் இந்தியத் தூதரகத்திற்கு முன்பாக அடையாள கவனயீர்ப்பு போராட்டம் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையால் நடாத்தப்பட்டது.
இதுவரை காலமும் இந்தியத் தூதரகத்திற்கு முன்பாக நடாத்திய போராட்டங்களை இந்தியத் தூதரக அதிகாரிகள் மறைந்து நின்று படம் பிடித்ததுதான் வரலாறாக இருக்கின்றது ஆனால் முதற்தடவையாக நேரடியாக வந்து போராட்டத்தில் மக்கள் வைத்திருந்த பதாகைகளை வாசித்து மக்களோடு பேசிச்சென்றார்கள்.
செல்வி ஜெயலலிதா தலமையிலான தமிழ்நாடு அரசு ஈழத்தமிழர்களுக்கு நீதியான தீர்வு வேண்டி பிரேரணைகளை நிறைவேற்றி இருந்ததை நாம் எல்லோரும் அறிவோம்.
இந்தியாவில் திரு நரேந்திர மோடியின் தலைமையில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பின் ஜூன் 3 ஆம் திகதி டெல்லியில் பிரதம மந்திரியை சந்தித்த செல்வி ஜெயலலிதா அவரிடம் கையளித்த பிரேரணையில் ஈழத் தமிழர்களுக்கு நீதியான தீர்வுக்கு இந்தியா முன்னிற்க வேண்டும் என்றும் ஐநா சபையில் இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு நடைபெற்ற இன அழிப்பை விசாரணை செய்யும் முகமாக ஒரு தீர்மானத்தை இந்தியா முன் வைக்க வேண்டும் என்றும் தமிழீழ மக்களிடையே - ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையில் தமிழீழத்தை வலியுறுத்தி சர்வஜன வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்பதை வலியுறுத்தி உள்ளார்.
ஈழத்தமிழர்களின் விடுதலை வேண்டி திரு நரேந்திர மோடியிடம் கையளிக்கப்பட்ட இந்த பிரேரணையை ஈழத்தமிழர்களாகிய நாமும் அதை வலியுறுத்த வேண்டிய கடமை உலகம் எங்கும் பரந்து வாழும் தமிழ் மக்கள் ஆகிய எமக்கும் உண்டு என்ற அடிப்படையில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து புலம்பெயர் மக்களின் சார்பில் இந்த ஆதரவுப்போராட்டத்தினை அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையினர் ஒழுங்கு செய்திருந்தனர்.
இப் போராட்டத்தின் நிறைவில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவையால் மனுக்கையளிக்கப்பட்டது.அத்தோடு இன்று சென்னையில் தனித் தமிழீழம் ஒன்று தான் தீர்வு என மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றையும் நடாத்தியது குறிப்பிடத்தக்கது.
அத்தோடு டென்மார்க் நாட்டில் வெளிநாட்டமைச்சகத்துடன் இணைந்த வர்த்தக, அபிவிருத்தி அமைச்சருடனான சந்திப்பொன்று டெனிஸ் தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதியுடன் நடைபெற்றது.
வெளிநாட்டமைச்சகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் சிறிலங்கா அரசு தொடர்ந்தும் தமிழர்களுக்கு எதிரான வன்முறையினைக் கைவிடவில்லை என்பதையும் எமது மக்கள் தொடர்ந்தும் சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பிற்கு மத்தியில் சொந்த இடங்களிற்கு திரும்பிப்போக முடியாமல் தவித்து வருகின்றார்கள் எனவும், இந்த இனவாத அரசு சர்வதேச சட்டங்களை மதித்து நடக்காது, அதற்கான சாட்சியாக கடந்த ஜந்து வருட நடைமுறைகளே அமைந்துள்ளது எனவும் எடுத்துக்கூறப்பட்டது.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை சிங்கள அரசு ஏற்றுக்கொள்ளாது எனவும், அவற்றை ஏற்றுக்கொள்ள வைப்பதற்கான நிர்ப்பந்தங்களை ஏற்படுத்துவது சர்வதேசத்தின் கடமையாகும்.
இதனடிப்படையில் பொருளாதாரத்தடை சிறந்ததொரு கருவியாக இருக்குமென்பதும், இதற்கு உதாரணமாக ஈரான், பர்மா ஆகிய நாடுகளிற்கெதிரான பொருளாதாரத்தடையும் அதனால் ஏற்பட்ட பெறுபேறுகளும் இருந்ததாக குறிப்பிடப்பட்டது.
அத்துடன் புலம்பெயர்தேசங்களில் வாழும் தமிழ் மக்களை குறிவைத்து சிங்கள அரசால் மேற்கொள்ளப்படும் உளவியற்போரின் ஓர் அங்கமாக நானுற்று இருபத்துநான்கு நபர்களது இரகசியமான தனிப்பட்ட தகவல்களினை பெயர் பட்டியல் வெளியிட்டிருப்பதுடன் பதினாறு அமைப்புக்களினை தடைசெய்துள்ளது.
இதன் மூலம் தாயகத்திலும், புலத்திலும் வாழும் தமிழ் மக்களை எமது விடுதலைப்போராட்டத்திலிருந்து அந்நியப்படுத்த சிங்கள அரசு முற்படுகின்ற என்பதனை விளக்கியதுடன், இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எடுக்கக்கூடிய சட்ட நடைவடிக்கைகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
மேலும் தமிழ்நாட்டு அரசால் இந்திய மத்திய அரசிடம் முன்வைக்கப்பட்ட, ஈழத்தமிழர்கள் தனியரசை அமைப்பதற்கான அவர்களது விருப்பை அறியும் வகையில் பொதுஜன வாக்கெடுப்பொன்றை ஈழத்திலும் உலகளாவிய ரீதியிலும் நடாத்துவதற்கு இந்தியா ஐ.நா மூலம் நடவடிக்கையெடுக்கவேண்டுமென்ற, கோரிக்கையினை விளக்கி இதற்கு ஆதரவாக டென்மார்க்கின் நிலைப்பாடு அமைவதுடன், இது முழு தமிழினத்தின் விருப்பென்பதை ஐரோப்பிய ஒன்றியத்திலும் எடுத்து விளக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
http://www.tamilwin.com/show-RUmsyGSdLaiw4.html
சர்வதேச விசாரணைக்கு எதிரான வாக்கெடுப்பை ரிசாத் புறக்கணிப்பு
[ வியாழக்கிழமை, 19 யூன் 2014, 02:08.35 AM GMT ]
இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணை தொடர்பில் நேற்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பின் பொது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிசாத் பதியுதீன் பங்கேற்கவில்லை. 
ஐக்கிய நாடுகள் குழுவை இலங்கையில் அனுமதிக்கக்கூடாது என்று அடிப்படையிலேயே இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
எனினும் அதில் பங்கேற்காமைக்கு காரணத்தை வெளியிட்ட ரிசாத் பதியுதீன் அளுத்கமையில் முஸ்லிம் சமூகம் பாதிக்கப்பட்டுள்ள இவ்வாறான சட்டங்களுக்கு ஆதரவாக வாக்களிப்பதில் வெட்கப்படுகிறேன் என்று குறிப்பிட்டார்.
தாம் அரசாங்கத்தின் அமைச்சர் என்ற போதும் ஒரு சமூகத்தின் தலைவர் என்றும் பதியூதீன் சுட்டிக்காட்டினார்.
http://www.tamilwin.com/show-RUmsyGSdLaiw5.html

கொழும்பு, வாழைச்சேனை, யாழ் மற்றும் வவுனியா,புல்மோட்டை ... முஸ்லிம்கள் ஹர்த்தால்
[ வியாழக்கிழமை, 19 யூன் 2014, 05:15.33 AM GMT ]
அளுத்கம தர்ஹா நகர் மற்றும் பேருவளை ஆகிய பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களை கண்டித்து வாழைச்சேனை, ஓட்டமாவடி பகுதியில் இன்று வியாழக்கிழமை இரண்டாவது முறையாகவும் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.
நாட்டில் வாழும் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும், அவஸ்தைக்குள்ளாக்கும் தொடர்ச்சியான செயற்பாடுகளைக் கண்டித்து அமைதியான சாத்வீக கடையடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்ததின் பேரில் இந்த ஹர்த்தால் இடம்பெறுகின்றது.
இதனால் அரச, தனியார் நிறுவனங்களும், காரியாலயங்களும், வர்த்தக நிலையங்கள் என்பன முற்றாக அடைக்கப்பட்டிருந்தது. அத்தோடு மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டு இருப்பதனைக் காணக்கூடியதாக இருந்தது.
தற்போது இரண்டாம் தவணைப் பரீட்சைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றமையால் பாடசாலைகள் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்றுக் கொண்டிருக்க வீதிகளில் பரவலாக பொலிஸாரும், பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
யாழ் மற்றும் வவுனியாவிலும் ஹர்த்தால்
சிங்கள இனவாத அமைப்பினால் அளுத்கம மற்றும் பேருவளை ஆகிய பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற தாக்குதல்கள் சமபவத்தினைக் கண்டிக்கும் முகமாக யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில் இன்று ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களிலுள்ள முஸ்லிம் வர்த்தக நிலையங்களை மூடி தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த கடையடைப்புப் போராட்டத்திற்கான அழைப்பினை முஸ்லிம் உரிமைக்கான அமைப்பு விடுத்திருந்தது.
அதன்படி இன்றைய நாள் முழுதும் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவிலுள்ள முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு, அமைதியான முறையில் தமது கண்டனத்தினைத் வெளிப்படுத்தி வருகின்றனர்.
எவ்வாறாயினும், குறித்த மாவட்டங்களிலுள்ள தமிழர்களின் வர்த்தக நிலையங்கள் மற்றும் அரச, தனியார் நிறுவனங்கள் வழமை போன்று இயங்கி வருகின்றன.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த வவுனியா முஸ்லிம் வர்த்தகர் சங்கம், 'அளுத்கமையில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தே கடையடைப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம். இந்த தாக்குதல் சம்பவமானது, நாட்டுக்குள் ஏற்பட்டிருக்கும் சமாதானத்தை சீர்குலைக்கும் வகையிலேயே அமைந்துள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்' என அச்சங்கம் கூறியது.
கொழும்பில் ஹர்த்தால்
இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் இன்று முஸ்லிம்களால் ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகிறது.
அளுத்கமை மற்றும் பேருவளை பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை கண்டித்தே இந்த ஹர்த்தால் மேற்கொள்ளப்படுகிறது.
தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி கொழும்பு புறக்கோட்டை கொம்பனிவீதி கண்டி போன்ற இடங்களில் இந்த ஹர்த்தால் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதன்காரணமாக முஸ்லிம்களின் கடைகள் மூடப்பட்டுள்ளன
புல்மோட்டைப் பிரதேசத்தில் ஹர்த்தால் அனுஷ்டிப்பு
புல்மோட்டைப் பிரதேச மக்களும் தமது கவலை உணர்வுகளை வெளிப்படுத்த தவறவில்லை அதன் பிரதி விம்பமாக  சகல கடைகளும் அடைக்கப்பட்டு  பொது மக்களும் அத்தியவசியத் தேவைகளின்றி வீதியில் நடமாடுவதையும் தவிர்த்துள்ளனர்.
மேலும் இப்பிரதேசத்தில் பொலிஸாரும் விஷேட அதிரடிப்படையினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதோடு இவ்வாறான துக்க அனுஷ்டானத்திற்கு படைத்தரப்பினர் ஒத்துழைப்பு வழங்குவதென்பது அணைத்து பௌத்தர்களும் வன்முறைகளை ஆதரிப்பவர்கள் அல்ல என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.;
மேலும் இந்ந காத்திரமான பணியை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் குச்சவெளி பிரதேச உப தவிசாளர் புல்மோட்டை ஜம்மியத்துல் உலமா சபை மற்றும் அனைத்து பள்ளிவாயல்கள் ஒன்றியம் புல்மோட்டை பிரதேச வர்த்தக ஒன்றியம் மற்றும் இதர அமைப்புக்களும் இவ்வமைதியான கர்த்தாள் அனுஷ்டிப்பினை நெறிப்படுத்தியிருந்தனர். 
http://www.tamilwin.com/show-RUmsyGSdLaix5.html

Geen opmerkingen:

Een reactie posten