| அவுஸ்திரேலிய புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு இனிய தகவல் | |||
| [ சனிக்கிழமை, 21 யூன் 2014, 03:27.46 மு.ப GMT ] | |||
அகதிகள் என நிர்ணயிக்கப்பட்டு, அரசாங்கத்தின் கட்டுப்பாடு காரணமாக பாதுகாப்பு விசா மறுக்கப்பட்ட இரு புகலிடக் கோரிக்கையாளர்களின் மனுக்களை பரிசீலித்ததைத் தொடர்ந்து நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகிறது.
இவர்களில் ஒருவர் கடந்த ஆண்டு கப்பல் மூலம் அவுஸ்திரேலியாவை அடைந்த 15 வயதுடைய எத்தியோப்பிய சிறுவராவார். மற்றவர் 2012 ஆண்டு கிறிஸ்மஸ் தீவை அடைந்த பாகிஸ்தானிய பிரஜையாவார்.
இந்த சட்டத்தின் கீழ், ஒருவர் அகதியென நிர்ணயிக்கப்படும் பட்சத்தில் அவருக்கு குடிவரவு அமைச்சர் 90 நாட்களுக்குள் பாதுகாப்பு விசா வழங்க முடியும். ஆனால், குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் நடப்பு நிதியாண்டில் பாதுகாப்பு விசாக்களின் எண்ணிக்கையை 2,773 இற்கு மட்டுப்படுத்தியிருந்தார்.
ஆனால், கால எல்லையின் அடிப்படையில் விசாக்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் அமைச்சருக்குக் கிடையாதென உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
புகலிடக் கோரிக்கையாளர்களின் மனுக்களை மீள்பரிசீலனை செய்யுமாறும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பான வழக்கைத் தாக்கல் செய்த சட்டத்தரணி டேவிட் மாண் கருத்து வெளியிடுகையில், நீதிமன்றத்தின் தீர்ப்பானது அரசின் கொள்கைகள் மாற்றப்பட வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தும் எனத் தெரிவித்தார்.
அகதி அந்தஸ்து உறுதி செய்யப்பட்ட பின்னரும் பாதுகாப்பு விசா வழங்கப்படாதவர்களின் எண்ணிக்கை பல்லாயிரங்களாக இருக்கலாமென திரு.மாண் தெரிவித்தார்.
தொழில் கட்சியின் குடிரவு பேச்சாளர் கருத்து வெளியிடுகையில், அரசாங்கத்தின் கொள்கைகள் ஒழுங்கற்றவையாக இருப்பதை நீதிமன்றத் தீர்ப்பு காட்டி நிற்கிறது என்றார்.
இந்தத் தீர்ப்பானது பல்லாயிரக்கணக்கான புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு துணைபுரியுமென பசுமைக் கட்சியின் பேச்சாளர் சாரா ஹன்சன் யங் தெரிவித்தார்.
|
தொலைக்காட்சி
தொலைக்காட்சி
zaterdag 21 juni 2014
அவுஸ்திரேலிய புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு இனிய தகவல்!
Abonneren op:
Reacties posten (Atom)
Geen opmerkingen:
Een reactie posten