தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 21 juni 2014

ஐ.நா மனித உரிமைகள் கூட்டத் தொடரில் எதிரொலித்தது அளுத்கம வன்முறை

வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வாருங்கள்!- சிவில் சமூகம் கோரிக்கை
[ சனிக்கிழமை, 21 யூன் 2014, 02:21.55 AM GMT ]
இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை உடன் நிறுத்தக்கோரி தனியாட்களையும், நிறுவனங்களையும் உள்ளடக்கிய சிவில் சமூகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் நூற்றுக்கும் அதிகமானோர் கையொப்பமிட்டு வெளியிடப்படடுள்ள அறிக்கை ஒன்றில் பொதுபலசேனாவினால் அளுத்கம,  பேருவளை,  வெலிப்பன்ன மற்றும் தர்கா நகரம் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை கண்டிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள வெட்கக்கேடான நிலையை போக்க உடனடியாக இந்த வன்முறைகளை நிறுத்துவதுடன் சம்பந்தப்பட்டவர்களை கைதுசெய்யுமாறும் சிவில் சமூகம் கோரியுள்ளது.
குறித்த வன்முறை சம்பவங்களில் குறைந்தது 7 முஸ்லிம்களும் ஒரு தமிழரும் கொல்லப்பட்டுள்ளனர்
இது ஞானசார தேரரினால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியின் பின்னரே இடம்பெற்றிருக்கிறது.
முஸ்லிம் மக்களின் வியாபாரத்தளங்கள் குறிவைத்து தாக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் கௌதம புத்தரின் வழியில் நின்று பௌத்தர்கள் ஏனைய மதங்களுக்கு மதிப்பு தரவேண்டும் என்று சிவில் சமூகம் கோரியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyGRVLagp6.html

யுத்தத்தில் வென்றவர்கள் அளுத்கம மக்களைக் காப்பாற்றவில்லை! ஜனாதிபதி பதவி விலக வேண்டும்: ஐ.தே.க எம்.பி
[ சனிக்கிழமை, 21 யூன் 2014, 02:15.56 AM GMT ]
யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்ததாக கூறும் ஜனாதிபதியால் அளுத்கம பிரதேசத்தில் உள்ள முஸ்லிம்களை காப்பாற்ற முடியாமல் போனதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெரும தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களின்போது, சிங்கள நாடாளுமன்ற உறுப்பினரான இவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
அளுத்கம, தர்கா நகர் மற்றும் பேருவளை உள்ளிட்ட நகரங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெடித்த வன்முறைகளைத் தொடர்ந்து பொலிஸ் ஊரடங்கு உத்தரவுக்கு மத்தியிலும், அண்டையில் உள்ள வெலிப்பென்ன நகரில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான கடைகள் பல எரிக்கப்பட்டன. வீடுகளும் தாக்கப்பட்டன.
இந்த சந்தர்ப்பத்தில் முஸ்லிம் குடும்பமொன்று மரண வீடொன்றுக்குச் செல்வதற்காக அளுத்கமையிலிருந்து வெலிப்பென்ன செல்லவேண்டியிருந்தது.
அந்தக் குடும்பத்தை பாதுகாப்பாக அழைத்துச் சென்றபோதே நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெரும மீதும் வன்முறையாளர்கள் தாக்குதல் நடத்தினர்.
தன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் பாலித்த தெவரப்பெரும நாடாளுமன்றத்தில் சிறப்புரிமை பிரச்சனை எழுப்பியிருந்தார்.
வன்முறைகளில் ஈடுபட்டவர்களை பௌத்தர்கள் என்றோ சிங்களவர்கள் என்றோ சொல்லமுடியாது. ஞானசார என்கின்றவர் நடத்துகின்ற தனியான மதப்பிரிவின் வன்முறையாளர்கள் தான் இந்த தாக்குதல்களை நடத்தினார்கள்.
சரியென்றால் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதியும் பதவி விலகவேண்டும் என்றார் பாலித்த தெவரப்பெரும.
முப்பது ஆண்டுகால யுத்தத்தை முடித்துவைத்த ஜனாதிபதியால் ஓரிரு கிலோமீட்டர் பரப்புக்குள் வாழும் மக்களைக் காப்பாற்ற முடியாமல் போனதற்காக ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்றார் அவர்.
காவல்துறையினர் சுமார் 500 பேர் வீதியில் நின்றுகொண்டிருக்க தம்மீது வன்முறையாளர்கள் தாக்குதல் நடத்தியதாக தெவரப்பெரும கூறினார்.
சின்னப் பிள்ளைகள் 5 பேர் என்னுடன் இருந்தார்கள். கைக்குழந்தைகளும் இருந்தார்கள். வயதான தாய்மாரும் கர்ப்பிணித் தாய்மார் இரண்டுபேரும் வாகனத்தில் இருந்தனர். நான் வாகனத்தை முடிந்தவரை வேகமாக ஓட்டிவந்தேன். சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு இரண்டு பக்கமும் இருந்துகொண்டு எங்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். பெற்றோல் போத்தல்கள், மணல் போத்தல்கள், கற்கள். கம்புகளைக் கொண்டு தாக்கினார்கள் என்றார்.
அரசியல்வாதிகள் தேர்தல் காலம் வரும்வரை வாய்மூடி மௌனிகளாக இருக்காமல் மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்க உடனடியாக முன்வர வேண்டும்.
வட்டரெக்க விஜித்த தேரரை கட்டிப்போட்டுத் தாக்கியுள்ளனர். என்னையும் அப்படித் தாக்குவார்கள். நீதிக்காக அப்படி அடிவாங்குவதில் பிரச்சனை இல்லை. இவற்றை எல்லாம் பார்த்துக்கொண்டு, தேர்தல் வரும்வரை தங்களின் குடும்பத்தாரை மட்டும் பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்காமல் நேர்மையாகப் பேசி உயிர் விடுவது எங்களுக்கு மகிழ்ச்சி தான் என பாலித்த தெவரப்பெரும குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRVLagp5.html
சட்டம் ஒழுங்கு சீர்குலைந்த்துள்ளதாக நீதி அமைச்சரே குறிப்பிடுகின்றார்!– ஜே.வி.பி. - போலி நாணயத்தாள் புழக்கம் அதிகரித்துள்ளது!- ரவி கருணாநாயக்க
[ சனிக்கிழமை, 21 யூன் 2014, 12:32.19 AM GMT ]
நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமே குறிப்பிடுவதாக ஜே.வி.பி.யின் பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சட்ட ஒழுங்கில் பிரச்சினை இருப்பதாக நீதி அமைச்சர் ஒப்புக்கொள்கின்றார்.
பணவீக்கம் வீழ்ச்சியடைந்துள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது.  கடைக்குச் சென்று சீனி ஒரு கிலோ வாங்கினால் பணவீக்கம் பற்றி புரிந்து கொள்ள முடியும்.
போர் இடம்பெற்ற காலத்தை விடவும் தற்போது சீனியின் விலை உயர்வடைந்துள்ளது.
அரசாங்கம் பாரியளவில் கடன் பெற்றுக்கொண்டுள்ளது. இதனால் மக்களினால் கடன் பெற்றுக்கொள்ள முடியவில்லை என விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டிருந்தால் போலி நாணயத்தாளின் புழக்கம் ஏன் அதிகரித்துள்ளது? ரவி கருணாநாயக்க
நாட்டில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டிருந்தால் போலி நாணயத் தாள்களின் புழக்கம் ஏன் அதிகரித்துள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
போர் நிறைவடைந்து ஐந்து ஆண்டுகள் கடந்துள்ளன. போர் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டதன் நன்மைகள் மக்களுக்கு கிடைக்கவில்லை.
நாட்டின் பணவீக்கம் வீழ்ச்சியடைந்துள்ளதாக அரசங்கம் புள்ளி விபரத் தகவல்களை சமர்ப்பிக்கின்றது. எனினும் நடைமறையில் பணவீக்கம் வீழ்ச்சியடைந்ததனை உணர முடியவில்லை.
விவசாயத்திற்கு கூடுதல் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்ட போதிலும், விவசாய நடவடிக்கைகள் வீழ்ச்சியடைந்துள்ளன.
புதிய பயணமொன்ற ஆரம்பிக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
பொருளாதாரம் வளர்ச்சியடைந்திருந்தால் இவ்வளவு கள்ள நோட்டுக்கள் புழக்கத்தில் விடப்பட்டிருக்காது என ரவி கருணாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்ற அமர்வுகளில் நேற்று பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRVLagp1.html
ஐ.நா மனித உரிமைகள் கூட்டத் தொடரில் எதிரொலித்தது அளுத்கம வன்முறை
[ சனிக்கிழமை, 21 யூன் 2014, 02:43.03 AM GMT ]
அளுத்கம பிரதேசத்தில் கடந்த வாரம் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்டபெற்ற வன்முறைகள் குறித்து ஜெனிவாவில் நடந்துவரும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
ஜேர்மனி, கனடா, நோர்வே ஆகிய நாடுகளே அளுத்கம வன்முறைச் சம்பவம் தொடர்பாக கேள்வி எழுப்பின.
இதனையடுத்து, இலங்கையின் ஜெனிவாவுக்கான பிரதி தூதுவர் மனிசா குணசேகர,  பதில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தார்.
அவ்வறிக்கையில்,
இலங்கை அரசாங்கம் எந்தவொரு இன அல்லது மத வன்முறைகளையும் மன்னித்ததில்லை. சம்பவம் தொடர்பான நம்பகமான தகவல்கள் திரட்டப்பட்டு, அரசாங்கம் பொருத்தமான நடவடிக்கையை மேற்கொள்ளும்.
எல்லா மக்கிளனதும். வழிபாட்டு இடங்கள் மற்றும் சொத்துக்களினதும் பாதுகாப்பை இலங்கை அரசாங்கம் உறுதிசெய்யும் என்று இந்த சபைக்கு உறுதிமொழி அளிக்கிறது.
இந்த வன்முறைகளில், 2 முஸ்லிம்கள் ஒரு தமிழர் என மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.
6 காவல்துறையினர் உள்ளிட்ட 13 சிங்களவர்கள், 13 முஸ்லிம்கள் என 26 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இரு சமூகங்களினதும், 69 வீடுகள், 83 கடைகள், 11 வாகனங்கள் சேதமாக்கப்பட்டன.
தற்போது நிலைமைகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதுடன், விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
28 சிங்களவர்கள், 17 முஸ்லிம்கள் என 43 பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர். அவர்களில், 12 சிங்களவர்கள், 5 முஸ்லிம்கள் என 17 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, வன்முறைச்சம்பவங்களுக்க பொறுப்பானவர்கள் மீது பாராபட்சமற்ற விசாரணை நடைபெறுமென அனைத்து சமூகங்களுக்கும் உறுதியளித்துள்ளார் என அவர் இங்கு மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRVLagqy.html

Geen opmerkingen:

Een reactie posten