வெள்ளவத்தை பிரபல முஸ்லீம் வர்த்தக நிலையம் எரித்தது முஸ்லீமா? சிங்களமா? புதிய சர்ச்சை….
இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான பேரினவாதிகளின் தாக்குதலைக் கண்டித்து கடந்த 19ஆம் திகதி நாடுதழுவிய ஹர்த்தாலுக்கு முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. இந்த ஆர்ப்பாட்டம் இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் வெற்றிகரமாக நடைபெற்றது.
ஆனாலும், ஆங்காங்கே சில முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் திறந்திருந்தன. இச்சந்தர்ப்பங்களில் ஒருசில முஸ்லிம் குழுக்கள் அந்த நிறுவனங்களை மூடி முஸ்லிம் உரிமைக்கான போராட்டத்துக்கு பூரண ஆதரவு வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.
ஆனாலும், ஆங்காங்கே சில முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் திறந்திருந்தன. இச்சந்தர்ப்பங்களில் ஒருசில முஸ்லிம் குழுக்கள் அந்த நிறுவனங்களை மூடி முஸ்லிம் உரிமைக்கான போராட்டத்துக்கு பூரண ஆதரவு வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.
அந்தவகையில், வெள்ளவத்தையில் வழமைபோன்று திறக்கப்பட்டிருந்த நோலிமிட் நிறுவனத்தை மூடுமாறு முஸ்லிம்கள் ஒருசிலர் அங்குசென்று கோரிக்கை விடுத்திருந்தனர். பலரும் இந்த செயற்பாட்டைக் கண்டித்தும் இருந்தனர். தங்களது நிறுவனத்தை மூடுமாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக நோலிமிட் நிறுவனம் வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தது.
இந்த முறைப்பாட்டின் பிரகாரம் சனிக்கிழமை மேல்மாகாணசபை உறுப்பினரின் காரியாலயத்துக்குச் சென்ற பொலிஸார் அங்கு விசாரணைகளை மேற்கொண்டனர். நோலிமிட் நிறுவனத்தை மூடுமாறு கூறிய இரண்டு இளைஞர்களையும் விசாரிக்கவுள்ளதாக அங்கு வந்திருந்த வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
நான் இந்த ஹர்த்தாலை ஏற்பாடு செய்திருந்தேன். எனவே, அது தொடர்பாக ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் என்னிடம் கேளுங்கள். குறித்த இளைஞர்களை விசாரிப்பதற்கு அவசியமில்லை என்று முஜிபுர் ரஹ்மான் பொலிஸாரிடம் தெரிவித்தார்.
இந்நிலையில் முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பின் அங்கத்தவர் முஹம்மத் றிஸ்வான் நேற்று சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டு புலனாய்வுப்பிரிவினரின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதேவேளை, பொலிஸார் தேடிவரும் இரண்டு இளைஞர்களும் இன்று ஞாயிற்றக்கிழமை பொலிஸ் நிலையத்தில் சரணடையவுள்ளதாக முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.
முஸ்லிம்களுக்காக போராடியவர்கள் இன்று விசாரணக்குட்படுத்தப்பட்டுள்ளனர். ஆனால், அதையும் மறந்து முஸ்லிம்கள் பாணந்துறை நோலிமிட் நிறுவனம் எரிக்கப்பட்டதுக்கு எதிராக குரல்கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் நோலிமிட் நிறுவனம் ஒரு நன்றியுள்ள நிறுவனமாக இருந்தால் குறித்த முறைப்பாட்டை வாபஸ்பெற வேண்டுமென முஸ்லிம்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.










முஸ்லிம்களுக்காக போராடியவர்கள் இன்று விசாரணக்குட்படுத்தப்பட்டுள்ளனர். ஆனால், அதையும் மறந்து முஸ்லிம்கள் பாணந்துறை நோலிமிட் நிறுவனம் எரிக்கப்பட்டதுக்கு எதிராக குரல்கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் நோலிமிட் நிறுவனம் ஒரு நன்றியுள்ள நிறுவனமாக இருந்தால் குறித்த முறைப்பாட்டை வாபஸ்பெற வேண்டுமென முஸ்லிம்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
http://www.jvpnews.com/srilanka/74212.html
இலங்கையின் மத வன்முறைகளின் பின்னணியில் இருப்பது யார்?
இலங்கையில் மூன்று முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டு, மேலும் பலர் காயமடைந்த வன்முறைச் சம்பவங்களை பௌத்த குழு ஒன்று மேற்கொண்டிருந்தது.
இதனை அடுத்து இலங்கை அரசாங்கம் அந்த பிரதேசங்களில் ஊரடங்குச் சட்டத்தை பிறப்பித்தது.
அண்மையில் ஏற்பட்ட இந்த வன்முறைகளை தடுக்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என குற்றம் சுமத்தப்படுகிறது.
அண்மைய வன்முறைகளுடன் தொடர்புடைய பொதுபல சேனா அமைப்பின் செயற்பாடுகளை அரசாங்கம் ஊக்குவித்து வருவதாகவும் குற்றம் சுமத்தப்படுகிறது.
எனினும் பொதுபல சேனாவுடன் அரசாங்கத்திற்கு எந்த தொடர்பும் இலங்கையை என ராஜபக்ஷ மறுத்துள்ளார்.
பௌத்த தீவிரவாத சக்திகளின் செயற்பாடுகளில் இருந்து முஸ்லிம் சமூகத்தை பாதுகாக்க வேண்டும் என முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், கடந்த வாரம் முஸ்லிம்களுக்கு எதிரான இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
இலங்கையின் 20 மில்லியன் மக்கள் தொகையில் முஸ்லிம்கள் சுமார் 10 வீதமாகும்.
எவ்வாறாயினும் இந்த வன்முறைகள் தவிர்க்கப்பட வேண்டும். இல்லாவிட்டால், இலங்கை மற்றுமொரு உள்நாட்டு போரை நோக்கி தள்ளப்படும் என அல்.ஜெசீரா தொலைக்காட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
http://www.jvpnews.com/srilanka/74213.html
Geen opmerkingen:
Een reactie posten